.
சென்னையில் உள்ள ராணுவ அதிகாரி பயிற்சி மையத்தில் (ஓ.டி.ஏ.,) அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
திருமணமாகாத இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.
காலியிடம் எஸ்.எஸ்.சி., (டெக்னிக்கல் 58 ஆண்கள் பிரிவில் சிவில் 40, மெக்கானிக்கல் 20,
இ.இ.இ., 14, கம்ப்யூட்டர் 32, ஐ.டி., 9, எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேசன் எலக்ட்ரானிக்ஸ் டெலிகம்யூனிகேசன் 5, ஏரோநாட்டிக்கல் 5, இன்ஸ்ட்ருமென்டேசன் 4, ஆட்டோமொபைல் 3 உட்பட 175 இடங்கள், எஸ்.எஸ்.சி., பெண் (டெக்னிக்கல்) – 29 பிரிவில் கம்ப்யூட்டர் 4, சிவில் 3, மெக்கானிக்கல் 2, ஐ.டி., 2, ஆர்க்கிடெக் 1, இ.இ.இ., 1, ஏரோநாட்டிக்கல் 1 என 14 இடங்கள் என மொத்தம் 189 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி : பி.இ., முடித்திருக்க வேண்டும்.
வயது : 1.4.2022 அடிப்படையில் 20 – 27 வயதுக்குள் இருக்க வேண்டும்.
தேர்ச்சி முறை : கல்வித்தகுதி மதிப்பெண்,
நேர்முகத்தேர்வு, மருத்துவ சோதனை தேர்வு.
விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்

கடைசிநாள் : 27.10.2021 மதியம் 3:00 மணி
விபரங்களுக்கு : https://joinindianarmy.nic.in/writereaddata/PortalNotificationPDF SSC_TECH__58.pdf
பாலிதீன் பைகள் மண்ணுக்கு எதிரி ..!
மண் வளம் காப்போம்; மரம் வளர்ப்போம்;