நாராயணன் தர்மம் காக்க தானே மனிதனாக அவதரித்து தசரத மைந்தன் ஸ்ரீராமன் என்ற பெயரோடு அவரே வடிவமைத்த அர்ச்சாரூபமாக இருந்து வடுவூரில் எழுந்தருளி உள்ள ஸ்ரீ கோதண்டராம சுவாமிக்கு ஸ்ரீராமநவமி பெருந்திருவிழா 2022ம் ஆண்டு பிலவ வருடம் பங்குனி மாதம் 26ஆம் நாள், ஏப்ரல் 8-ஆம் தேதி துவங்கி சித்திரை ஐந்தாம் நாள் ஏப்ரல் 18 வரை நடக்க இருக்கிறது இன்று ஏப்ரல் ஒன்பதாம் தேதி துவஜாரோகணம் எனப்படும் திரு கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து தினம் காலையில் பல்லக்கில் புறப்பாடு நடைபெற உள்ளது. மாலை வேளைகளில் சூரிய பிரபை, சேஷ வாகனத்தில் பரமபத நாதனாக, 12ம் தேதி கருடசேவை – வைரமுடி, ஏப்ரல் 13ஆம் தேதி நாச்சியார் திருக்கோலம், இரவு அனுமந்த வாகனம், 14ம் தேதி இரவு மோகன அலங்காரமும் 15ஆம் தேதி ஆறாம் திருநாளின் காலையில் யானை வாகனத்தில் ஸ்ரீ ராமர் ராஜா அலங்காரமும் ஹம்ச வாகனத்தில் தாயார் புறப்பாடும் நடைபெறும். 15ஆம் தேதி திருக்கல்யாண கோலத்தில் புறப்பாடும் மாலை சூர்ண அபிஷேகமும் 16ஆம் தேதி பல்லக்கு நவநீத சேவையும் ஏப்ரல் 17ஆம் தேதி திருத்தேரில் ஸ்ரீகோதண்டராமர் எழுந்தருளி சேவையும் 18ம் தேதி சப்தாவர்ணமும் தொடர்ந்து 19 முதல் விடையாற்றி உற்சவம் நடைபெற உள்ளது. தொன்மையும் வரலாற்றுச்சிறப்பும் உடைய வடுவூர் ஸ்ரீ கோதண்டராமர் கோவில் சிறப்புகள் கீழ் கண்டவையாகும் காவிய நாயகன்அவதாரபுருஷனாகிய ராமன், தந்தை தசரதனின் ஆணையின்படி 14 ஆண்டுகள் வனவாசம் மேற்கொண்டார். அடர்ந்த கானகத்தில் பர்ணசாலையில் சீதை மற்றும் இலக்குவனுடன் மரவுரி தரித்து காய்கனி உண்டு வசித்து வந்தபோது, நாடு செல்ல வேண்டிய நிலை வந்தபோது அங்குள்ள முனிவர்கள் அவரை அங்கேயே தங்கி இருக்கவேண்டும் என்று மன்றாடி கேட்டனர். அவதார நோக்கத்தை நிறைவேற்றும் பொருட்டு தான் செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டதைக் குறித்து விளக்கி ராமன் முனிவர்களை சமாதானப்படுத்தி மேற்கொண்டு செல்ல தடைவிதிக்கக்கூடாது என்று கூறினார். அப்போதும் முனிவர்கள் சம்மதிக்கவில்லை. இதனால் ராமர் என்ன செய்வதென்று சிந்தித்தார். முடிவில் தன் கையாலேயே தன்வடிவத்தைத்தானே விக்ரகமாக செய்து தனது ஆசிரமத்து வாசலில் வைத்துவிட்டு உள்ளே சீதையுடன் இருந்தார். முனிவர்கள் மறுநாள் ராமனை தரிசிக்க வந்தபோது, ஆசிரமத்து வாசலில் அழகெல்லாம் ஓர் உருவாய் திரண்ட வடிவழகுடன் கூடிய ராமர் செய்த விக்ரகத்தை வணங்கி உள்ளே சென்றார்கள். அப்போது அவர்கள் ராமனிடம் இந்த தண்ட காரண்யத்தை விட்டுச் செல்லக்கூடாது என்று மீண்டும் வேண்டிக்கொண்டனர். அப்போது ராமன் நான் வேண்டுமா? அல்லது எப்போதும் உங்களை பிரியாத ஆசிரமத்து வாசலில் உள்ள எனது அர்ச்சை உருவம் வேண்டுமா? என்று கேட்டார். ராமனின் விக்ரகத்தின் அழகில் மெய் மறந்து இருந்த முனிவர்கள் அந்த திவ்ய விக்ரகத்தையே விரும்பினார்கள். உடனே விக்ரகத்தை முனிவர்களிடம் கொடுத்த ராமர் அங்கே எழுந்தருளிவிட்டார்.ஆலங்குடியும் அஷ்ட திக்கு கோயில்களும் – மினி தொடர் – பகுதி 4 – புலவர்நத்தம் சிவன் கோவில் ராமனின் பயணம்தண்டகாரண்யத்தில் இருந்த அந்த…
ஒரு மனித வாழ்வு என்பது இரண்டு பெரிய பிரிவுகளில் தான் அமைந்துள்ளது. அதாவது, அதிர்ஷ்டம் மற்றும் துரதிர்ஷ்டம் இதுதான் மனித வாழ்வை நகர்த்திச் செல்லுகிறது. தொடர்ந்து அதிர்ஷ்டம் கொண்டவரும் இல்லை, தொடர்ந்து துரதிர்ஷ்டம் கொண்டவரும் இல்லை. ஆனால் வெகு சிலர் மட்டுமே தொடர்ந்து துரதிர்ஷ்டத்தையும், அதிர்ஷ்டத்தையுமே அனுபவிப்பதைக் காண முடிகிறது. அது ஏன் அவ்வாறு அவர்களுக்கு மட்டும் நடைபெறுகிறது என்பதனை சில விளக்கங்கள் மூலம் இந்த கட்டுரையில் காணலாம். முதலில் அதிர்ஷ்டம் என்றால் என்னென்ன? அது, உடல் ஆரோக்கியத்தைச் சார்ந்தது, தனி நபர் ஆளுமை தன்மை, அரசியலில் தொடர்ந்து வெற்றி, நிதி ஆதாயம், கல்வியால் நன்மைகள், மனவலிமைகள், பெற்றோரை முதுமையிலும் காக்கும் குழந்தைகள், குழந்தைகளை அருமையாக அன்பாக வளர்க்கும் பெற்றோர்கள், இது போன்று சொல்லிக்கொண்டே போகலாம். மேலே கூறப்பட்டவை அனைத்தும் ஒருவருக்குத் தொடர்ந்து கிடைப்பதுவே அதிர்ஷ்டம் ஆகும். அவரை நாம் கொடுத்துவைத்தவர் எனச் சொல்கிறோம். அவன் என்னப்பா அதிர்ஷ்டகட்டை எனவும் சொல்வதுண்டு. சிலருக்கு சிறிது காலம் அதிர்ஷ்டம் கிடைத்து பின்னர் ஒரு நாள் விலகுவதும் உண்டு. அப்படியே தலைகீழாய் நிலைமை மாறுவதும் உண்டு. துரதிர்ஷ்டம் என்றால் என்னென்ன? துயரங்கள், துயரங்களின் ஆதாரங்கள், அனைத்துவித கவலைகள், துன்பங்கள், பிரச்னைகள், உடல் மற்றும் மன ரீதியான சிதைவுகள், கெட்ட குழந்தைகள் போன்றவையே துரதிர்ஷ்டம் ஆகும். ஒருவரின் ஜாதகம் என்பது 12 கட்டங்களை கொண்டதாக இருக்கும் என்பது அனைவரும் அறிந்து இருப்பீர்கள். பொதுவாக அதில் 6 வீடுகள் ஜாதகருக்கு சாதகமானதாக இருக்கும். மீதமுள்ள 6 வீடுகள் ஜாதகருக்கு சாதகமற்றதாகவே இருக்கும். அதிலும் மிகவும் மோசமான வீடுகள் 6, 8, 12ஆம் வீடுகள் தான். இதனை தந்திர (TRIK HOUSES ) வீடுகள் என்பர். அதனை விரிவாகக் காண்போம். ஏன் என்றால், இந்த வீடுகளின் போக்கை அறிவதே மிகச் சிரமமாகும். இதனை நன்கு ஆராய்ந்தால் தான் தெளிவாக தெரிய முடியும். சிலருக்கு, சிலவற்றிற்கு, சில நிலைகளில் இந்த வீடுகள் நல்லன போன்று தோன்றும் / செய்யும் ஆனால் அதே சமயம் சிலருக்கு, சிலவற்றிற்கு, சில நிலைகளில் தீயதை மட்டுமே செய்யும். இதனை ஒவ்வொரு வீடாகக் காணலாம். பொதுவாக ஜோதிடத்தில் ஜனன கால ஜாதகத்தை வைத்து பலனை ஓரளவுக்குத் தான் சொல்லமுடியும். துல்லியமாகப் பலனைக் காண, பல்வேறு பிரிவு விளக்கப்படம் (DIVISIONAL CHARTS) மூலம் தான் காண இயலும். ஒவ்வொரு பிரிவும் ஒருவித பலனைத் துல்லியமாகக் கூறும். அனைத்தையும் கண்டு பலன் சொல்வதென்பது நிச்சயம் வெகு சிரமமான ஒன்று. அதற்கு முதலில் சரியான பிறப்பு குறிப்பு தேவை. அடுத்து இதனைப் பொறுமையாக ஆய்வு செய்ய ஆழ்ந்த அறிவும் அனுபவ ஞானமும் தேவை. எல்லாவற்றிற்கும் மேலாக அவசரமும் இதனை காண்பதற்குரிய தட்சிணை தருவதில் சிக்கல் ஏற்படும். அதனாலேயே இதனை அதிகமாக விரிவாக யாரும் காண்பதில்லை. மேலெழுந்த வாரியாக ராசி சக்கரம் எனும் D -1 , நவாம்ச சக்கரம் எனும் D – 9 மட்டுமே…
ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை – பாசுரம் 20 முப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்று கப்பம் தவிர்க்கும் கலியே துயிலெழாய்! செப்பமுடையாய் திறலுடையாய் செற்றார்க்கு வெப்பம் கொடுக்கும் விமலா துயிலெழாய்! செப்பன்ன மென்முலைச் செவ்வாய் சிறுமருங்குல் நப்பின்னை நங்காய் திருவே துயிலெழாய்! உக்கமும் தட்டொளியும் தந்துன் மணாளனை இப்போதே எம்மை நீராட்டேலோ ரெம்பாவாய். பாடியவர் – பவ்யா ஹரி விளக்கம்: கண்ணனும் நப்பின்னையுமான திவ்விய தம்பதிகள் எழுப்பப்படுகிற பாசுரம். முப்பத்து முக்கோடி தேவர்களுக்கு ஏதேனும் துன்பம் வருவதற்கு முன்னரே சென்று, அவர்களின் நடுக்கத்தை நீக்கக்கூடிய கண்ணனே, எழுந்திருக்க வேணும். (அடியார்களைக் காக்கும்) உறுதி கொண்டவனே, வலிமை உடையவனே, பகைவர்களுக்கு நடுக்கம் தரக்கூடிய தூய்மையாளனே, எழுந்திருக்க வேணும். அழகிய மார்புகளையும் சிவந்த வாயையும்நுண்ணிடையையும் கொண்ட நப்பின்னையே, செல்வத்திற்குரியவளே, எழுந்திருக்க வேணும். நோன்புக்கு உபகரணங்களான ஆலவட்ட விசிறியையும் கண்ணாடியையும் தந்தருளி, உன் மணாளனான கண்ணனை (எங்களுக்கு அருள) அனுப்ப வேணும். பாசுரச் சிறப்பு: கண்ணனைப் பாராட்டிவிட்டு, நப்பின்னையிடத்தில் பிரார்த்திக்கிறார்கள். முப்பத்து முக்கோடி தேவர்களுக்கு அருளியதை எடுத்துக் காட்டுகிறார்கள். அத்தனை பேருக்கு அருளிய கண்ணனுக்கு, இந்தச் சிறுமிகளுக்கு அருள்வது எம்மாத்திரம் என்பது குறிப்பு. “தேவர்களுக்காவது செருக்கும், ஆணவமும், இறுமாப்பும் உண்டு. எமக்கு அவையெல்லாம் இல்லையே’ என்னும் ஆதங்கத்தின் வெளிப்பாடு. நோன்பு நோற்பதற்கும் வழிபாடு செய்வதற்கும் தக்க பொருள்கள் சில பயன்படுத்தப்படும். அவற்றில் விசிறியும் கண்ணாடியும் மட்டுமே இங்கே பேசப்படுகின்றன. பலவற்றுக்கு ஓர் எடுத்துக்காட்டு என்னும் வகையில், அனைத்து உபகரணங்களையும் குறிப்பால் உணர்த்துவதாகக் கொள்ள வேண்டும். அருள்திரு மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை – பாடல் 20 போற்றி அருளுகநின் ஆதியாம் பாதமலர்துல்லியமாகச் சொல்லும் பிரசன்ன ஜோதிடம்! போற்றி அருளுகநின் அந்தமாஞ் செந்தளிர்கள் போற்றியெல் லாவுயிர்க்கும் தோற்றமாம் பொற்பாதம் போற்றியெல் லாவுயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள் போற்றியெல் லாவுயிர்க்கும் ஈறாம் இணையடிகள் போற்றிமால் நான்முகனும் காணாத புண்டரிகம் போற்றியாம் உய்யஆட் கொண்டருளும் பொன்மலர்கள் போற்றியாம் மார்கழிநீ ராடேலோ ரெம்பாவாய். பாடலை விளக்குபவர் – இலக்கிய மேகம் ந. சீனிவாசன் பாடியவர்கள் : ஆலவாய் அண்ணல் பாடசாலை மாணவர்கள் பாடியவர் – மயிலை சற்குருநாதன் பாடியவர் – பொன் முத்துக்குமரன் விளக்கம்: திருவெம்பாவையின் நிறைவுப் பாடல். நோன்பை நிறைவு செய்யும் பெண்கள், இறைவனின் திருவடிகளைப் போற்றுகின்றனர். “எல்லாவற்றுக்கும் தொடக்கமாக இருக்கும் நின் திருவடிகளுக்குப் போற்றி. எல்லாவற்றுக்கும் இறுதியாக இருக்கும் திருவடிகளுக்குப் போற்றி. உயிர்களும் பொருள்களும் உயர்திணையும் அஃறிணையும் தோன்றுவதற்குக் காரணமான திருவடிகளுக்குப் போற்றி. வாழ்க்கையை அனுபவிக்கக் காரணமான திருவடிகளுக்குப் போற்றி. அனைத்து உயிர்களும் சென்று சேர்கிற இடமான திருவடிகளுக்குப் போற்றி. திருமாலும் பிரம்மாவும் காணாத திருவடிகளுக்குப் போற்றி. எமக்கு உய்யும் கதி நல்குகிற திருவடிகளுக்குப் போற்றி. இப்பேற்றையெல்லாம் அளிக்கவல்ல மார்கழி நோன்புக்கும் நீராட்டத்திற்கும் போற்றி’} போற்றி போற்றி என்று சிவப்பரம்பொருளின் சகல மேன்மைகளையும் போற்றுகின்றனர். பாடல் சிறப்பு: நிறைவுப் பாடலில் “மார்கழி நீராடல்’ என்று இத்தனை நாள்கள் நோற்ற நோன்பினைமாணிக்கவாசகப் பெருமான் குறிப்பிடுகிறார். நோன்பு நோற்ற பெண்கள்,…
ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை – பாசுரம் 21 ஏற்ற கலங்கள் எதிர்பொங்கி மீதளிப்ப மாற்றாதே பால்சொரியும் வள்ளல் பெரும்பசுக்கள் ஆற்றப் படைத்தான் மகனே அறிவுறாய் ஊற்ற முடையாய் பெரியாய் உலகினில் தோற்றமாய் நின்ற சுடரே துயிலெழாய் மாற்றார் உனக்கு வலிதொலைந்துன் வாசற்கண் ஆற்றாது வந்துன் னடிபணியு மாபோலே போற்றியாம் வந்தோம் புகழ்ந்தேலோ ரெம்பாவாய்! பாடியவர் – பவ்யா ஹரி விளக்கம்: கண்ணன் அருளை வேண்டுகிற பாசுரம். “மடியின் கீழே பாத்திரத்தை வைத்தால், பொங்கப் பொங்கப் பாலைத் தவறாமல் சொரியக்கூடிய தன்மையைக் கொண்ட பெரிய பசுக்கள் பல கொண்ட நந்தகோபனுடைய திருமகனே, எழுந்திருக்கவேணும். ஆழ்ந்த வலு கொண்டவனே, பெருமை பொருந்தியவனே, பேரொளியாக உலகத்தில் தோற்றம் தந்தவனே, பகைவர்கள் தங்களின் வலிமையை உன்னிடத்தில் தொலைத்து, உன் மாளிகை வாசலுக்கு வந்து உன் திருவடிகளில் பணிவது போலவே, நாங்களும் உன்னைப் புகழ்ந்து போற்றி வந்திருக்கிறோம்’ என்று கூறி, கண்ணனின்அருளை வேண்டுகிறார்கள். பாசுரச் சிறப்பு: மறைமுகமாகச் சிலவற்றைக் கண்ணனுக்குக் கூறுவதுபோல் அமைந்திருக்கும் பாசுரம் இது. “உன்னுடைய தந்தையிடம் இருக்கும் பசுக்களுக்கே, பாத்திரத்தை வைத்தால் பாலைப் பொழிய வேண்டுமென்னும் அறிவு இருக்கும்போது, வீட்டு வாசலில் வந்து வேண்டுகிற எங்களுக்கு அருள வேண்டுமென்று எண்ண மாட்டாயோ?’ என்று மொழிகிறார்கள். நந்தகோபன் மகனே என்றழைத்துவிட்டு, தொடர்ந்து, உலகினில் (அவதாரங்களாக) தன்னையே எம்பெருமான் வெளிப்படுத்திக் கொண்டதைக் குறிப்பிடுவதற்குக் காரணம் உள்ளது. “அவதாரம் எடுத்து ஆயர்பாடிக்கு வந்ததே எங்களுக்கு அருள்வதற்குத்தானே, இன்னும் என்ன தயக்கம்?’ என்பது உள்பொதிந்த வினா. ஊற்றம் என்பது உறுதி. அடியார்களுக்கு அருள வேண்டும் என்பதே ஆண்டவனின் ஊற்றம். தங்களின் ஆணவத்தைத் தொலைத்துப் பகைவர்கள் வந்ததைப் போல் “நாங்களும் ஆணவம் தொலைத்து வந்திருக்கிறோம்’ என்பது உள்பொதிந்த பணிவு. ஆணவம் தொலைத்தால்தான் ஆண்டவன் அருள் கிட்டும் என்பதை உணர்த்துகிற பாசுரம். ****** ஸ்ரீமாணிக்கவாசகர் அருளிய திருப்பள்ளியெழுச்சி – பாடல் – 1 (திருப்பெருந்துறையில் அருளியது) வருமானத்தை நிர்ணயிக்கும் ஜாதகம்: சொந்தத் தொழிலா? அடிமைத் தொழிலா? அறியலாம் போற்றிஎன் வாழ்முதலாகிய பொருளே புலர்ந்தது பூங்கழற் கிணைதுணை மலர்கொண் டேற்றிநின் திருமுகத் தெமக்கருள் மலரும் எழில்நகை கொண்டுநின் திருவடி தொழுகோம் சேற்றிதழ்க் கமலங்கள் மலரும்தண் வயல்சூழ் திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே! ஏற்றுயர் கொடியுடை யாய்எனை யுடையாய் எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே. பாடலை விளக்குபவர் – இலக்கிய மேகம் ந. சீனிவாசன் பாடியவர்கள் – ஆலவாய் அண்ணல் தேவாரப் பாடசாலை மாணவர்கள் விளக்கம்: பாவை நோன்பை நிறைவேற்றிய நிலையில், திருப்பள்ளியெழுச்சி தொடங்குகிறது. இறைவனைத் துயிலெழப் பாடுவதே திரு+பள்ளி+எழுச்சி ஆகும். “என் வாழ்க்கையின் முதல் பொருளாகத் திகழும் இறைவனே, உனக்குப் போற்றி. பொழுது புலர்ந்தது. கழல் அணிந்த உன்னுடைய மலர்த் திருவடிகளுக்கு மலர் தூவி, உன்னைத் துதித்து, உன்னுடைய திருமுகத்தில் எங்களுக்காக மலர்கிற அழகுப் புன்னகையை எண்ணியவாறே உன்னைத் தொழுகிறோம். சேற்றில் செந்தாமரைகள் மலர்ந்துள்ள குளிர்ச்சிமிக்க வயல்கள் சூழ்ந்துள்ள திருப்பெருந்துறையில் எழுந்தருளியசிவபெருமானே, ரிஷபக் கொடி உடையவனே, என்னையும் ஆளாகக் கொண்டவனே,…
தமிழ் மாதங்கள்டிசம்பர் மாத பலன்கள் (மேஷம் – கன்னி)ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு சிறப்புகள் உள்ளன. எனினும் இவை அனைத்தைக் நன்றி Hindu தோஷ சாம்யம் பார்க்காமல் திருமணம் செய்யலாமா?
ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை – பாசுரம் 14 உங்கள் புழக்கடை தோட்டத்து வாவியுள் செங்கழுநீர் வாய்நெகிழ்ந் தாம்பல்வாய் கூம்பினகாண் செங்கல் பொடிக்கூறை வெண்பல் தவத்தவர் தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதந்தார் எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும் நங்காய் எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய் சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன் பங்கயக் கண்ணானைப் பாடலோர் எம்பாவாய். பாடியவர் – பவ்யா ஹரி விளக்கம்: வெளியில் நிற்கும் பெண்கள், பொழுது புலர்ந்ததற்கான மேலும் சில அடையாளங்களைச் சுட்டிக் காட்டுகின்றனர். “உன்னுடைய வீட்டுப் புழைக்கடையில் இருக்கிற குளத்தைப் பார் பெண்ணே. செங்கழுநீர் மலர்கள் மலர்ந்துவிட்டன. ஆம்பல் மலர்கள் கூம்பிவிட்டன. காவி வண்ண ஆடை அணிந்தவரும் வெண்மையான பற்கள் கொண்டவருமான தவசிகள், திருக்கோயில்களில் சங்கநாதம் முழக்குவதற்காகச் செல்கின்றனர். என்னமோ, எங்களை நீ வந்து எழுப்புவதாகக் கதை பேசினாயே. நாணமில்லையா உனக்கு? நாக்கு மட்டும் நீளமோ? சங்கும் சக்கரமும் திருக்கரங்களில் ஏந்தி, தாமரைக் கண்ணானாகக் காட்சி தரும் கண்ணனைப் பாடுகிறோம், எழுந்து வா’ என்று அழைக்கின்றனர். பாசுரச் சிறப்பு: விடியலின் இன்னும் சில அடையாளங்கள் காட்டப்பெறுகின்றன. வெகு தொலைவு சென்று இந்த அடையாளங்களைக் காண வேண்டியதில்லை. அவரவர் அணுக்கச் சூழல்களிலேயே காணலாம். வீட்டுத் தோட்டத்தில் இருக்கும் சிறிய குளத்தில் காட்சி தெரிகிறது. வெளிச்சம் கண்டு மலர்கிற செங்கழுநீர் (தாமரை வர்க்கம்) மலர்ந்துவிட்டது; வெளிச்சம் கண்டு கூம்புகிற ஆம்பல் (கருநெய்தல் வர்க்கம்) கூம்பிவிட்டது. ஆக, வெளிச்சம் வந்துவிட்டது கண்கூடு. அதிகாலைப் பொழுதில், விடியலின் வெளிச்சக்கீற்றுகள் முதலில் எட்டத்தில் தெரியும். பின்னர்தான், அணுக்கத்தில் தெரியும். அணுக்கத்தில் தெரிந்தால், பொழுது அதிகமாகவே புலர்ந்துவிட்டது என்று புரிந்து கொள்ளலாம். ஸ்வாபதேசத்தில்,திருப்பாணாழ்வாரைக் குறிக்கும் பாசுரம். அருள்திரு மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை – பாடல் 14 காதார் குழையாடப் பைம்பூண் கலனாடக்மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை (பாசுரம் 24) கோதை குழலாட வண்டின் குழாமாடச் சீதப் புனலாடிச் சிற்றம் பலம்பாடி வேதப் பொருள்பாடி அப்பொருளா மாபாடிச் சோதி திறம்பாடிச் சூழ்கொன்றைத் தார்பாடி ஆதி திறம்பாடி அந்தமா மாபாடிப் பேதித்து நம்மை வளர்த்தெடுத்த பெய்வளைதன் பாதத் திறம்பாடி ஆடேலோ ரெம்பாவாய்! பாடலை விளக்குபவர் – இலக்கிய மேகம் ந. சீனிவாசன் பாடியவர் – மயிலை சற்குருநாதன் பாடியவர் மயிலாடுதுறை சிவகுமார் விளக்கம்: மனம், மொழி, மெய் ஆகிய மூன்றும் இறைவன்பால் ஈடுபட்டிருக்கும் நிலையைக் காட்டுகிற பாடல் இது. பெண்கள் பொய்கைக்குள் புகுந்து நீராடுகின்றனர். இதுபொழுது, உடலும் உறுப்புகளும் (உயிருள்ளவை), வேறு சில பொருள்களும் (உயிரற்றவை) ஆடுகின்றன. காதுகளில் அணிந்துள்ள குழைகள் ஆடுகின்றன; கழுத்திலும் தோளிலும் கைகளிலும் அணிந்திருக்கும் பிற அணிகளும் ஆடுகின்றன; கூந்தலில் சூடிய பூமாலைகள் ஆடுகின்றன; பூக்களிலிருந்து எழுந்த வண்டுகள் ஆடுகின்றன; குளிர்ந்த நீரில் ஆடி, சிற்றம்பலவனைப் பாடி,வேதப் பொருளாக விளங்கும் தன்மையைப் பாடி, பேரொளிப் பிரகாசமாகத் திகழும் பெருமையைப் பாடி, அதே இறைவன் பலவகை உருவங்களும் வடிவங்களும் கொண்டு அவதரித்து, கொன்றை மாலை சூடுகிற அருமையைப் பாடி, ஆதியும் அந்தமுமாக இருப்பதைப் பாடி,…
404 Not Found The requested URL /religion/religion-serials/2019/mar/04/ஆலங்குடியும்-அஷ்ட-திக்கு-கோயில்களும்—மினி-தொடர்—பகுதி-4—புலவர்நத்தம்-சிவன்-கோவில்-3106876.html was not found on this server.வடுவூரில் ஸ்ரீராமநவமித் திருவிழா துவங்கியது நன்றி Hindu பகல்பத்து 4 ஆம் நாள்: செளரி கொண்டையில் நம்பெருமாள்!
நிகழும் மங்களகரமான ஸ்வஸ்திஸ்ரீ ப்லவ வருஷம் – தக்ஷிணாயனம் – சரத் ரிது – கார்த்திகை மாதம் 03ம் நாள் – வெள்ளிக்கிழமை – பௌர்ணமி திதி – க்ருத்திகை நக்ஷத்ரத்தில் – சந்திர கிரகணம் நிகழ்கிறது. பௌர்ணமி தினமான நவம்பர் 19ஆம் தேதியன்று இந்த நூற்றாண்டின் மிக நீண்ட சந்திர கிரகணம் நிகழப்போகிறது. பகுதி கிரகணமாக 3 மணி நேரம், 28 நிமிடங்கள் மற்றும் 24 வினாடிகள் நீடிக்கும். முழு கிரகணமாக 6 மணி நேரம் 1 நிமிடம் நீடிக்கும். சுமார் 580 ஆண்டுகளில் இது போன்ற நீண்ட கிரகணம் வந்ததில்லை என்று அறிவியலாளர்கள் தெரிவிக்கிறார்கள். சந்திர கிரகணம் பௌர்ணமி நாளிலும் சூரிய கிரகணம் அமாவாசை நாளிலும் நிகழும். பொதுவாக ஆண்டுக்கு இரண்டு சந்திர கிரகணமும் இரண்டு சூரிய கிரகணமும் நிகழும். பொதுவாக இரவு நேரத்தில் வரும் சந்திர கிரகணமும் – பகல் நேரத்தில் வரும் சூரிய கிரகணமும்தான் இந்தியாவில் தெரியும். வெள்ளிக்கிழமையன்று நிகழவிருக்கும் சந்திர கிரகணம் தமிழ் பஞ்சாங்கப்படி பகல் நேரத்தில் இந்திய நேரப்படி பகல் 11.30 மணிக்கு தொடங்கி மாலை 5.32 மணி வரை நீடிக்கிறது. 6 மணி நேரம் மிகநீண்ட சந்திர கிரகணம் நிகழப்போகிறது. கிரகணம் ஏன் ஏற்படுகிறது?வானவியலில் சூரியன் அல்லது சந்திரன் மீது ஏற்படும் நிழலை கிரகணம் என கூறுகிறது. சூரிய கிரகணம், அமாவாசை நாளிலும், சந்திர கிரகணம் பௌர்ணமி நாளிலும் உண்டாகிறது. எல்லா அமாவாசை நாளிலும் சூரிய கிரகணம் ஏற்படாது. எல்லா பௌர்ணமி நாளிலும் சந்திர கிரகணம் உண்டாவது இல்லை. சூரியன், பூமி, சந்திரன் அனைத்தும் ஒரே நேர் கோட்டில் வரும்போது சந்திர கிரகணம் ஏற்படும். நவம்பர் 19ஆம் தேதி சந்திர கிரகணம் நிகழ உள்ளது. பூமியின் நிழல் சந்திரனில் விழுவதால், சந்திரன் பிரகாசம் குறைந்து கருஞ்சிவப்பாக காட்சியளிக்கும். ஜோதிட ரீதியாக கிரகணம் ஏன் ஏற்படுகிறது?சந்திர கிரகணம் சூர்யனுக்கு நேர் எதிராக 180 டிகிரியில் சந்திரன் ராகுவுடனோ அல்லது கேதுவுடனோ சேரும் போது ஏற்படும். இந்த வருடம் நிகழும் சந்திர கிரகணம் இந்தியாவில் தெரியாததால் யாருக்கும் கிரகண தோஷம் இல்லை. எனவே கிரகண பரிகாரம் தேவையில்லை. இருப்பினும் ரிஷபம் – வ்ருச்சிக ராசிக்காரர்கள் தங்களால் முடிந்த தானங்கள் செய்யலாம்.ஆசைகளைப் பூர்த்தி செய்யுமா பதினோராம் பாவம்? ஜோதிட சூட்சுமங்கள்! கிரகண உச்சம் எப்போது?இந்த வருடம் நிகழும் சந்திர கிரகணம் மிக நீண்டதாக உள்ளது. சந்திர கிரகணம் வெள்ளிக்கிழமை 19ம் தேதி இந்திய நேரப்படி காலை 11.30 மணிக்கு தொடங்கும் சந்திர கிரகணம் மாலை 5.32 மணி வரை மிகவும் நீண்டு நிகழ்கிறது. அதாவது 6 மணி நேரம் 2 நிமிடங்கள் என நீடிக்கின்றது. இந்த கிரகணத்தின் உச்சம் மதியம் 2மணி 32 நிமிடத்தில் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்திர கிரகணம் எந்த நாட்டில் தெரியும்? இந்த சந்திர கிரகணத்தை அலாஸ்கா மற்றும் ஹவாய் போன்ற பகுதிகளில் நவம்பர் 18ம் தேதி வியாழக்கிழமை…
உத்தரமேரூர் வட்டம், திருப்புலிவனத்தில் முத்து மாரியம்மன் கோயில் 3-ஆம் ஆண்டு திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.விழாவையொட்டி, அம்மனுக்கு கூழ்வார்த்தல், மகா அபிஷேகம், பால்குட ஊர்வலம், அன்னதானம், தீ மிதி திருவிழா, குளக்கரையில் இருந்து நீர் திரட்டுதல் மற்றும் சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீ முத்து மாரியம்மன் திருவீதி உலா நடைபெற்றது.இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டனர். விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் எஸ்.அழகரசன், எம்.மணி, ஜி.வீரராகவன், எம்.கோதண்டன் ஆகியோர் செய்திருந்தனர். மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை (பாசுரம் 28) நன்றி Hindu ஆவணி மாத பலன்களும், பரிகாரங்களும்!
கும்பகோணம்- மன்னார்குடி சாலையில் வலங்கைமான் அடுத்து 18 வது கிமி ல் உள்ளது ஆலங்குடி திருத்தலம். இத்தலம் ஆறாம் நூற்றாண்டில் சம்பந்தரால் பாடப்பெற்றது என்பதால் இது 1500 ஆண்டுகட்குமேல் பழமையானது என அறியலாம். தேவர்களைக் காக்க ஆலகால விஷத்தை இறைவன் குடித்ததால் ஆலங்குடி என்று பெயர் வந்தது. இவ்வூரில் விஷத்தால் எவர்க்கும் எவ்விதத் தீங்கும் உண்டாவதில்லை என்று சொல்லப்படுகிறது. கருநிறமுள்ள பூளைச் செடியைத் தலவிருட்சமாகக் கொண்டுள்ளதால் திருஇரும்பூளை என்றும், அழைக்கப்படுகிறது. காளமேகப் புலவர் பாடல் ஆலங்குடி தலத்தைப் பற்றி அற்புதமாக பாடியுள்ளார். “ஆலங்குடியானை ஆலாலம் உண்டானை ஆலங் குடியான் என்று ஆர் சொன்னார் – ஆலம் குடியானேயாகில் குவலயத்தோரெல்லாம் மடியாரோ மண் மீதினில்”. என்று பாடி இந்த ஆலயத்தின் பெருமையை உலகரியசெய்கிறார். இந்த தலத்தில் இறைவன் ஆபத்சகாயேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார்.. இறைவியின் பெயர் ஏலவார்குழலி தேவர்களும் அசுரர்களும் பாற்கடலை கடைய வாசுகி என்ற பாம்பை கயிறாகவும், மந்தார மலையை மத்தாகவும் கொண்டு கடைந்தனர். அப்போது அந்தப் பாம்பு வலி பொறுக்காமல் கக்கிய ஆலகால விஷத்தை , சிவபெருமான் உலகத்தை காக்கும் பொருட்டு உட்கொண்டார். விஷத்தை அருந்தி உலகைக் ஆபத்தில் இருந்து காத்ததால் இறைவன் ஆபத்சகாயேஸ்வரர் அழைக்கப் படுகிறார். முசுகந்தன் என்ற சோழ மன்னன், கோவில் கட்டுவதற்காக தனது மந்திரி அமுதோகரிடம் பணம் கொடுத்தான். ஆனால் மந்திரியோ மன்னன் கொடுத்த பணத்தை பயன்படுத்தாமல் தனது பணத்தை பயன்படுத்தி கோவில் கட்டினான். பின்னர் மன்னன் வந்து கோவில் கட்டிய புண்ணியத்தில் பங்கு கேட்க, மந்திரி மறுத்துவிட்டார். இதனால் கோபமடைந்த மன்னன் மந்திரியின் தலைய வெட்ட வாளை எடுத்து ஓங்க இறைவன் தோன்றி அமுதோகரை தன்னுடன் சேர்த்துக்கொண்டதே இக்கோவில் வரலாறாகும். ஒரு முறை திருவாரூரை ஆட்சி புரிந்த சோழ மன்னன் இங்கிருந்த சுந்தரர் சிலையின் அழகை கண்டு அதனை திருவாரூருக்கு எடுத்துச் செல்ல முயற்சித்தான். இதனை அறிந்த கோவில் அர்ச்சகர் அச்சிலையை குழந்தையாக பாவித்து அதற்கு அம்மை நோய் தாக்கி இருப்பதாக கூறி மறைத்து வைத்து சிலையை காப்பாற்றினார். இப்பொழுதும் அந்த சிலையில் அம்மைத் தழும்புகள் இருப்பதைக் காணலாம். விசுவாமித்திரர், முசுகுந்தர், வீரபத்திரர் போன்ற பலர் வழிபட்ட சிறப்புடையது இக்கோவில். இங்கு கோவிலைச் சுற்றி அகழி போன்ற அமைப்பு உள்ளது இதனை செயற்கைக்கோள் படத்தில் தெளிவாக காணலாம். இதுவே அமிர்தபுஷ்கரிணி தீர்த்தம் எனப்படுகிறது., கோவிலின் கிழக்கில் சக்ர தீர்த்தம் அமைந்துள்ளது. சுந்தரர் இத்தலத்திற்கு வரும்போது வெட்டாற்று வெள்ளப் பெருக்கில் ஆபத்சகாயரே ஓடக்காரராக வந்து கரையேற்றிக் காட்சிதந்தார் என்பது தல வரலாறு. ஓடம் நிலைதடுமாறிப் பாறையில் மோதியபோது காத்தவிநாயகர் கலங்காமல் காத்த பிள்ளையார் என வழங்கப்படுகிறார். இத்தலம் திருவிடைமருதூர் தலத்தின் தட்சணாமூர்த்தி இருப்பிடமாக கருதப்படுவதால் இங்கு தட்சணாமூர்த்தி சிறப்பு. பிற கோயில்களில் காண இயலாத தட்சணாமூர்த்தி உற்சவ விக்ரகம் உள்ளது இவர் தேரில் திருவீதி உலாவும் காண்கிறார். கோயிலின் தென்புறம் ஐந்து நிலை ராஜ கோபுரமும், கிழக்கில் சற்று குறுகிய ஐந்து…
தமிழ் மாதங்கள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு சிறப்புகள் உள்ளன. எனினும் இவை அனைத்தைக் காட்டிலும் ஆடி மாதம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. ஆடி மாதம் அம்மனுக்கு உரியது. ஆடி மாத அம்மன் வழிபாடு என்பது தமிழர்களின் பாரம்பரியத்தோடு ஒட்டி வந்த ஒன்று. ஆடி மாதம் முழுவதும் கோவிலுக்கு சென்று அம்மனை வழிபட உகந்தது. ஆடி மாதத்தில் எந்தஅம்மனை வணங்கினால் என்ன பிரச்னைகள் தீரும் என்பதை பற்றி பார்ப்போம். விருதுநகர்: இருக்கன்குடி மாரியம்மன் சிவாம்சம் கொண்டவள். கருவறையில் தேவிக்கு முன் சிங்கத்திற்குப் பதிலாக நந்தி வீற்றருள்கிறார். கண் நோய் உள்ளோர் தேவிக்கு அபிஷேகம் செய்த நீரால் கண்களைக் கழுவ கண் நோய் நீங்கும். மதுரை: சோழவந்தானில் ஜெனகை மாரியம்மன் கோயிலில் வழங்கும் பிரசாதமான தீர்த்தத்தை அருந்த அம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனே குணமாகும். மதுரை: எல்லீஸ் நகரில் அருளும் தேவி கருமாரியம்மனை வணங்கினால் நினைத்தது நிறைவேறும். அனைத்து மதத்தினரும் இந்த அன்னையை வழிபட்டு நலம் பெறலாம்.குரு பெயர்ச்சி: தனுசு, மகரம், கும்பம், மீன ராசிகளுக்கான பலன்கள் புதுக்கோட்டை: நார்த்தாமலையில் முத்து மாரியம்மன் திருவருள் புரிகிறாள். இங்கு அக்கினி காவடி எடுத்தால் தீராத நோய் தீரும். மழலை வரம் வேண்டுவோர் கரும்புத் தொட்டில் கட்டலாம். ஊட்டி: மகாமாரி, மகாகாளி இருவரும் ஒரே கருவறையில் அருள்கின்றனர். இங்குள்ள காட்டேரியம்மன் சந்நிதியில் மந்திரித்துத் தரும் முடிக்கயிறு, தோஷங்கள், நோய்கள், பில்லி, சூனியங்களை விலக்குகின்றது. நாமக்கல்: ராசிபுரத்தில் நித்யசுமங்கலி மாரியம்மனை தரிசிக்கலாம். வருடம் முழுவதும் அம்பிகையின் எதிரே சிவாம்சமான கம்பம் நடபட்டிருப்பதால் இப்பெயர் வந்தது. ஐப்பசி மாதம் புதுக் கம்பம் நடும்போது தயிர்சாதம் நிவேதிப்பர். அந்த தயிர்சாத பிரசாதத்தை உண்பவர்களுக்கு அடுத்த வருடமே மழலைப் பேறு கிட்டும். கோவை: கோவையில் ஆட்சிபுரியும் தண்டு மாரியம்மன், குடும்ப பிரச்னையை தீர்த்து அருள்வதாக ஐதீகம். நன்றி Hindu செல்வ வளம் அருளும் ஸ்ரீகிருஷ்ணர்
அனைவராலும் அதிகம் பார்க்கப்படுவது அன்றைய ராசி பலன்கள். இவற்றைக் கேட்ட பிறகு தான் பலர் தங்களுடைய வேலையைத் தொடங்குவார்கள். அதிலும் ஜோதிட வல்லுநர்களால் கூறப்படும் நேர்மறை வார்த்தை அந்த மனிதருக்கு காலையில் ஒரு பூஸ்ட் சாப்பிட்ட உணர்வு மற்றும் உத்வேகத்தை ஏற்படுத்தும். பலராலும் ஆவலுடன் தெரிந்துகொள்ள விரும்புவது அன்றைய தினபலன், குரு, சனி, மற்றும் ராகு கேது, பெயர்ச்சி பலன்கள். நிறைய பேர் “நான் இந்த ராசி எனக்கு இன்று பலன் நன்றாக உள்ளதா” என்று கேட்கிறார்கள். இவை அனைத்தும் அன்றைய கோள்சாரம் அடிப்படையில் காலபுருஷ தத்துவத்தில் கூறப்படுகின்ற பலன்கள். இவற்றில் அனைத்து பலன்களும் நூறு சதவீதம் அந்தந்த ராசிக்காரருக்கு நடப்பது கொஞ்சம் கடினம். அது சுமாராக 25% மட்டுமே நடைபெறும், சிலருக்கு அதுவும் நடைபெறாது. காரணம் அது உங்களுடைய ஜெனன ஜாதகத்தின் வாயிலாகச் சொல்லப்படும் பலன் அல்ல. இன்று உங்கள் ராசிக்கு பணமழை என்று கூறப்படும். அன்று உங்களுக்கு சொற்ப பணம் தான் கிட்டும் ஒருசிலருக்கு அதுவும் கிட்டாது. அங்கு ஜோதிடம் மேல் இருக்கும் பார்வை தவறாக முடியும். தினபலன் என்பது அன்றைய கோச்சார சந்திரனை வைத்து பலன் சொல்லப்பட்டது. அதேசமயம் அவரவர் பிறப்பு ஜாதக தசா புத்தியுடன் ஒத்துப்போனால் மட்டுமே கிரகங்களின் பெயர்ச்சி பலன் முழுமையாக நன்கு வேலை செய்யும். நமக்குள் ஒரு கேள்வி ஒன்று கோச்சாரம் அதிகம் வேலை செய்யுமா அல்லது தசா புத்தி அதிகம் வேலை செய்யுமா என்று ஒரு சந்தேகம். கோச்சாரம் மற்றும் தசா புத்தி பற்றிய சிறு விளக்கம் கோச்சாரம் அல்லது கோள்சாரம் என்பது அன்றைய வான்மண்டலத்தில் உள்ள கிரகங்களின் நகர்வு என்று பொருள். கடவுளின் படைப்பனா இந்த பிரபஞ்ச சக்தியின் ஓட்டம் தடைப்படும் வரை கிரகங்களும் கட்டாயம் இயங்கும். ஒவ்வொரு கிரகங்களின் சுற்றும் சுழற்சியின் கால அளவு மாறுபடும். எடுத்துக்காட்டாக சனி, குரு, ராகு கேது அனைத்தும் வருட சுழற்சியும் மற்றவை மாதம் மற்றும் நாள்களின் சுழற்சியாகும். உதாரணமாக கோச்சார சந்திரன் மீது பெண் கிரகமான சுக்கிரன் பயணம் செய்யும்போது தாய் வீட்டிற்குப் பெண் வருவாள் என்பது அன்றைய நிலை. அங்கே சந்திரனுடன் கேதுவும் தொடர்பு பெற்றால் பிரிவு அல்லது நீதிமன்றம் செல்லும் நிலை ஏற்படலாம். இவ்வாராக கிரகத்தின் காரகத்தன்மை 25% அறியலாம். இதே போல் ஒரு ஜாதகத்தில் முக்கிய கிரகங்கள் ஒரு பாவத்தை தொடும்பொழுது அந்த பாவத்தின் பலனை (நல்லதோ அல்லது கெட்டதோ) தந்தே தீருவார். நாம் பிறக்கும்பொழுது அந்த நேரத்தின் கிரகங்களின் நிலை கொண்டு எழுதப்பட்ட ஒன்று ஜெனன ஜாதகக் கட்டம். இங்கு நம்முடைய கடந்த பிறவியின் தொடர் ஆரம்பப் புள்ளி உங்களின் தற்பொழுது தசா மற்றும் புத்தி நாதன் ஆவார். அவற்றின் ஒட்டுமொத்த 9 கிரகங்களின் தசாநாதன் 120 வருடங்களுக்குள் வருவார்கள். இங்கு தற்காலிக நாளின் இயக்கம் அவரவர் ஜாதகத்தில் நிற்கும் கிரகம், அன்றைய கோச்சார கிரகங்களின் பயணம் நமக்கு அவ்வப்போது பலன்களை…
புனர்பூ என்றால்ஆறுமுகப் பெருமானுக்கு அணி சேர்க்கும் முக்கியத் திருவிழாநம்முடைய தமிழில் சேர்க்கை அல்லது தொடர்பு என்று பொருள். ஒருவருக்கு இருகிரகங்கள் தொடர்பு பெற்று செயல்படும் பொழுது யோகமாகவோ நன்றி Hindu களத்திர தோஷம் யாருக்கு தீங்கு செய்யும்? பரிகாரம் என்ன?
பீத மாதமும் பாவை நோன்பும் மார்கழி மாதம்தான், சாந்தீபனியின் ஆச்ரமத்தில் கிருஷ்ணர் பாடம் கேட்டார் என்னும் நம்பிக்கையும் உண்டு. மார்கழி மாதத்தை தேவர்களின் பிரம்ம முகூர்த்தம் என்று விவரிப்பது வழக்கம். ஒவ்வொரு நாளும், சூரியோதயத்திற்கு முன்னதாக இருக்கும் 96 நிமிடங்கள், பிரம்ம முகூர்த்தமாகும். பொழுது புலர்ந்து நாள் தொடங்குவதற்கு முன்னர், கடவுளை வணங்கி வழிபட வேண்டிய நேரம் அது. நம்முடைய ஓராண்டு என்பது தேவர்களுக்கு ஒரு நாள்; தை முதல் ஆனி வரையிலான உத்தராயண ஆறு மாதங்கள் அவர்களுக்குப் பகல்; ஆடி முதல் மார்கழி வரையிலான தட்சிணாயண ஆறு மாதங்கள் அவர்களுக்கு இரவு. இந்தக் கணக்கில், தேவ பகல் தொடங்கும் தை மாதத்திற்கு முன்னதான மார்கழி, தேவர்களின் பிரம்ம முகூர்த்தமாகும். இந்த வேளையில், தேவர்களும் முனிவர்களும் இறைவனை வழிபடுகிறார்கள். மார்கழி மாதத்தில் இறைவனைத் துதித்துப் பலவாறாக நம்முடைய முன்னோர்கள் வழிபட்டார்கள் என்பது புராணங்கள் வழியாகவும் இலக்கியங்கள் வழியாகவும் புலனாகிறது. ஆயர்பாடிப் பெண்கள், ஆற்று மணலில் பாவை (அம்பிகை போன்ற பொம்மை) பிடித்து வைத்து வழிபட்ட தகவல், ஸ்ரீமத் பாகவதத்தின் தசம ஸ்கந்தத்தில் (பத்தாவது தொகுப்பு) காணப்படுகிறது. ஹேமந்தே ப்ரதமே மாஸி நந்த வ்ரஜகுமாரிகா: சேருர்ஹவிஷ்யம் புஞ்சானா: காத்யாயன்யர்ச்சனவ்ரதம்ஆப்லுத்யாம்பஸி காலிந்த்யா ஜலாந்தே சோதிதே அருணேக்ருத்வா ப்ரதிக்ருதிம் தேவீமானர்சுர் – – – காத்யாயனி மஹாமாயே மஹாயோகின்யதீச்வரீ நந்த கோப ஸூதம் தேவி பதிம் மே குரு தே நம: ஹேமந்த பருவத்தின் முதல் மாதத்தில் (மார்கழி), நந்த விரஜையின் கோபிகைகள், விரதமிருந்து, காத்யாயனி வழிபாடு செய்தார்கள். காளிந்தி நதியின் (யமுனை) கரையில் மணல் பாவை பிடித்து அம்பாளாக வழிபட்டார்கள். காத்யாயனி, மகாமாயீ, மகா யோகீச்வரி என்றெல்லாம் அழைத்து, “நந்தகோபர் மகனாக கண்ணன் என் கணவனாக ஆகும்படி அருள்வாயாக’ என்று வேண்டினார்கள். சங்கத் தமிழ் நூலான பரிபாடல், அம்பா ஆடலைக் குறிப்பிடுகிறது. ஞாயிறு காயா நளிமாரிப் பிற்குளத்து மாயிரும் திங்கள் மறுநிறை ஆதிரை விரிநூல் அந்தணர் விழவு தொடங்கப் புரிநூல் அந்தணர் பொலங்கலம் ஏற்பஆலங்குடியும் அஷ்ட திக்கு கோயில்களும் – மினி தொடர் வெம்பாதாக, வியன் நில வரைப்பென அம்பா ஆடலின் ஆய்தொடிக் கன்னியர் முனித்துறை முதல்வியர் முறைமை காட்டப் பனிப்புலர் பாடி… ஆதிரையோடு நிலவு சேர்கிற நன்னாளில், விரிநூல் அந்தணர்களின் விழா தொடங்கியபோது, கன்னியர் அம்பா ஆடல் ஆடினர். மிருகசீர்ஷத்திற்கு அடுத்த நட்சத்திரம் திருவாதிரை. ஒவ்வொரு மாதமும் பெளர்ணமி நிலவானது 2 நட்சத்திரத்தோடு இணையும் (27 நட்சத்திரங்கள் – 12 மாதங்கள், ஆக ஒவ்வொரு மாதத்திற்கும் 2 நட்சத்திரங்கள்). மார்கழிப் பெளர்ணமியில் (அது மிருகசீர்ஷம் அல்லது ஆதிரை என்று எதுவானாலும்) அந்தணர்கள் தங்களுடைய அத்யயனத்தைத் தொடங்கினார்கள். அதே நாளில், கன்னிப் பெண்களும் ஆற்றங்கரையில் மணலால் அம்பிகை வடிவம் செய்து நோன்பு நோற்றார்கள். நூற்றாண்டுகள் பலவற்றுக்கு முன்னர் அம்பா ஆடலாக இருந்த நோன்பு முறை, பின்னர், தைந்நீராடல் என்றும் வழங்கப்பட்டிருக்கிறது. எவ்வாறு? சந்திர- சூரிய அசைவுகளைக் கொண்டு நாள்களைக் கணிக்கும்போது, நட்சத்திரக் கணக்கு…
ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை – பாசுரம் 23 மாரி மலைமுழஞ்சில் மன்னிக் கிடந்துறங்கும் சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து வேரி மயிர்பொங்க எப்பாடும் பேர்ந்துதறி மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப் போதருமா போலேநீ பூவைப்பூ வண்ணாஉன் கோயில் நின் றிங்ஙனே போந்தருளிக் கோப்புடைய சீரிய சிங்கா சனத்திருந்து யாம்வந்த காரியம் ஆராய்ந் தருளேலோ ரெம்பாவாய். பாடியவர் – பவ்யா ஹரி விளக்கம்: சிங்கமென எழுந்து சிம்மாசனத்தில் அமர்ந்து தங்களின் கோரிக்கையைச் செவிமடுக்க வேண்டுமென்று நோன்பியற்றும் பெண்கள் விண்ணப்பிக்கும் பாசுரம். “மழைக் காலத்தில் மலைக் குகைக்குள்உறங்குகிற சிங்கம், மழை முடிந்தவுடன் கண்களை உருட்டி விழித்து, பிடரி குலுங்கும்படிச் சிலிர்த்து, உதறி எழுந்து, முதுகை நீட்டி நிமிர்த்தி, குகையை விட்டு வெளியில் வரும். அந்தச் சிங்கம் போல் நீயும் புறப்பட்டு வா கண்ணா! காயாம்பூ வண்ணனே, சிங்கம் போன்றே நீயும் எழுந்தருளி, உன்னுடைய சிம்மாசனத்தில் அமர்ந்து, நாங்கள் எதற்காக உன்னைக் காண வந்திருக்கிறோம் என்பதை விசாரித்து அருள வேண்டும்’ என்று பிரார்த்திக்கிறார்கள். பாசுரச் சிறப்பு: எம்பெருமானுக்குச் சிங்கம் உவமையாகக் காட்டப்பெறுகிறது. மழைக் காலத்தில் குகைக்குள் அடைப்பட்டிருக்கும் காட்டு அரசனான சிங்கம், மழை முடிந்தவுடன் தன்னுடைய காட்டின் நிலையை அறிவதற்காக வேகமாக எழுந்து வருமாம். அதுபோல், உறக்க குகையிலிருந்து கண்ணன் எழுந்து வரவேண்டும் என்பது பிரார்த்தனை. சிங்கம் இரு பக்கமும் தலையைத் திருப்பித் திருப்பிப் பார்த்தவாறே நடக்கும். அதுபோல், “காத்திருக்கும் எங்களைப் பார்த்தவாறே வரவேணும்’ என்னும் ஆதங்கம். பூவைப்பூ என்பது காயாம்பூ; கருநீல மலர். “யாம் வந்த காரியம் ஆராய்ந்து’ } அதிகாலைப் பொழுதில், ஒருவரையொருவர் எழுப்பி, தூயவர்களாய் வந்து, கோயில்}வாயில் காப்பவரைப் பணிந்து, நந்தகோபன், யசோதை, பலராமன், நப்பின்னை என்று பெரியோர் பலரின் துணைகொண்டு வந்திருக்கிறோமே, எங்களின் இத்தனை முயற்சிகளையும் மனத்தில் கொண்டு அருள வேண்டும். முதல் பாசுரத்தில் “யசோதை இளஞ்சிங்கம்’ என்பது, இப்பாசுரத்தில் “சீரிய சிங்கம்’ஆனதை எண்ணி மகிழலாம். ஸ்ரீமாணிக்கவாசகர் அருளிய திருப்பள்ளியெழுச்சி – பாடல் 3 கூவின பூங்குயில் கூவின கோழிமுழு ஒளி கிரக சூரியனுடன் இருள் கிரக சனி சேர்க்கை குருகுகள் இயம்பின இயம்பின சங்கம் ஓவின தாரகை ஒளியொளி உதயத் தொருப்படு கின்றது விருப்பொடு நமக்குத் தேவநற் செறிகழல் தாளிணை காட்டாய் திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே! யாவரும் அறிவரி யாய்எமக் கெளியாய் எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே! பாடலை விளக்குபவர் – இலக்கிய மேகம் ந. சீனிவாசன் பாடியவர்கள் – ஆலவாய் அண்ணல் தேவாரப் பாடசாலை மாணவர்கள் விளக்கம்: உதயத்தின் அடையாளங்கள் காட்டப் பெறுகின்றன. “குயில்கள் கூவிவிட்டன; கோழிகளும் நாரைகளும் இன்னும் பல பறவைகளும் ஒலி எழுப்பத் தொடங்கிவிட்டன. திருக்கோயில்களில் சங்கநாதம் ஒலிக்கிறது. நட்சத்திரங்கள் ஒளி மழுங்கிவிட்டன. கதிரவனுடைய ஒளி ஒருங்கிணைந்து நிகரின்றித் தோன்றுகிறது. எவ்வளவு அறிவாளியாக இருந்தாலும், அத்தகைய பேரறிவுக்கும் அரிதானவனே, அன்பினால் எங்களுக்கு எளிதாகக் கிட்டுபவனே, பெருங்கருணையோடு உன்னுடைய திருவடிகளை எமக்குக் காட்டி அருள வேண்டும்’ என்னும்…
ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை – பாசுரம் 29 சிற்றஞ்சிறுகாலே வந்துன்னைச் சேவித்துன் பொற்றாமரை அடியே போற்றும் பொருள்கேளாய்! பெற்றம் மேய்த்துண்ணும் குலத்தில் பிறந்து நீ குற்றேவல் எங்களைக் கொள்ளாமற் போகாது இற்றைப் பறைகொள்வான் அன்றுகாண் கோவிந்தா எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்தன்னோடு உற்றோமே யாவோம் உனக்கேநாம் ஆட்செய்வோம் மற்றை நம் காமங்கள் மாற்றேலோ ரெம்பாவாய். பாடியவர் – பவ்யா ஹரி விளக்கம்: நோன்பு தொடங்கிய நாள் முதல், பறை என்று பரிசுகளைப்பற்றிக் கூறிக்கொண்டேயிருந்த பெண்கள், இப்பாசுரத்தில்தான், தாங்கள் நாடுகிற பரிசு என்ன என்பதைத் தெளிவாக உரைக்கிறார்கள். “அதிகாலைப் பொழுதில் வந்து உன்னை வணங்கி, உன்னுடைய திருவடிகளைப் போற்றி நாங்கள் நிற்பதற்கான காரணத்தைக் கேளாய். பசுக்கூட்டத்தை மேய்க்கும் ஆயர்குலத்தில் பிறந்துள்ள நீ, எங்களை உனக்கான தொண்டர்களாகக் கொள்ளாமல் விட்டுவிடாதே. ஏதோ இப்போதைக்குப் பரிசு பெறுவதற்காக வந்தோம் என்று எண்ணாதே. எந்தக் காலமானாலும், எத்தனைப் பிறவிகளானாலும் உன்னோடு உறவு கொண்டவர்களாக இருப்பதையே யாசிக்கிறோம். என்றென்றும் உனக்கு அடிமைகளாக இருப்போம். இவைதவிர வேறு ஏதேனும் விருப்பங்கள் எங்களுக்கு இருக்குமானால், அவற்றை மாற்றிவிடு’ என்று கோருகிறார்கள். பாசுரச் சிறப்பு: நோன்பைத் தலைக்கட்டுகிற (நிறைவேற்றுகிற) நிலையில் வைக்கப்படுகிற விண்ணப்பம் இது. குற்றேவல் என்பது சிறு சிறு ஏவல் கூவல் பணிகள். அந்தரங்கக் கைங்கர்யம் (தனித் தொண்டு) என்பார்கள். ஏழேழு என்பதனை 7, 7+7, 7+7 என்று எவ்விதமாகவேனும் கொள்ளலாம். என்றைக்காக இருந்தாலும் எம்பெருமானுக்கு அடிமைகளாகவும் எம்பெருமானின் உடைமைகளாகவும் இருக்க வேண்டும் என்பதே நிரந்தர விண்ணப்பம். செயல் பெரியதா சிறியதா என்பதைக் காட்டிலும், அது செய்யப்படுகிற நோக்கம் முக்கியமானது. எந்தச் செயலாக இருந்தாலும், அளவுக்கும் பார்வைக்கும் சிறியதாகவே இருப்பினும், அச்செயலுள் இருக்கும் அன்பும் பக்தியும் அறமும் ஆர்வமும் முக்கியமானவை. ஆங்கிலக் கவிஞர் மில்டனின் They also serve who stand and wait என்னும் வரியை நினைவூட்டுகிற பாசுரம் (இதே உணர்வைத் திருப்பள்ளியெழுச்சியின் 7ஆவது பாடலில், எது எமைப் பணி கொள்ளும் ஆறு என்னும் வரியில் காணலாம்). நோன்பை நிறைவேற்றிய நிலையில், நோன்பின் பலனை இப்பெண்கள் பெற விருக்கிறார்கள். ஒரு செயலின் பலனை அனுபவிக்கும்போது, அந்தச் செயலைச் செய்ததற்கான பெருமையும், செயல் பலனுக்கான ஆனந்தமும், ஒருவகையான மதர்ப்பைத் தரும். அந்த ஆனந்தமே சுயநலமாக மாறும்; ஆணவமாகத் தலைதூக்கும். இதற்குப் பிராப்ய விரோதம் என்று பெயர். இப்படிப்பட்ட சுயநலம் இல்லாமல், நோன்பென்னும் செயலையும், நோன்பின் நற்பலன்களையும்கூட இறைவனின் திருவடிகளில் அர்ப்பணிக்கிற பாசுரம் இது. ****** ஸ்ரீமாணிக்கவாசகர் அருளிய திருப்பள்ளியெழுச்சி – பாடல் 9 விண்ணகத் தேவரும் நண்ணவும் மாட்டாமுத்து மாரியம்மன் கோயில் திருவிழா விழுப்பொரு ளேயுன தொழுப்படி யோங்கள் மண்ணகத் தேவந்து வாழச்செய் தானே! வண்திருப் பெருந்துறை யாய்வழி யடியோம் கண்ணகத் தேநின்று களிதரு தேனே! கடலமு தேகரும் பேவிரும் படியார் எண்ணகத் தாய்உல குக்குயி ரானாய் எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே. பாடலை விளக்குபவர் – இலக்கிய மேகம் ந. சீனிவாசன் பாடியவர்கள் –…
முத்துசாய் கொண்டை அலங்காரத்தில் நம்பெருமாள் ஸ்ரீரங்கம் அரங்கநாதா் கோயில் வைகுந்த ஏகாதசி பெருவிழாவில் பகல் பத்து விழா செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இரண்டாம் நிகழ்ச்சியில் முத்துசாய் கொண்டை அலங்காரத்தில் நம்பெருமாள் பக்தர்களுக்கு காட்சியளித்தார். பூலோக வைகுண்டம் எனப்படும் இக்கோயிலின் மிகப்பெரிய விழாவான வைகுந்த ஏகாதசி பெருவிழா பகல் பத்து, இராப்பத்து என 21 நாள்கள் நடைபெறும். இந்த ராசி பெண்களுக்கு மனதிற்கினிய செய்திகள் தேடி வரும்: வார ராசிபலன் திருநெடுந்தாண்டகத்துடன் திங்கள்கிழமை விழா தொடங்கிய நிலையில், பகல்பத்து விழாவின் முதல் நாளான செவ்வாய்க்கிழமை காலை 7 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து தனுா் லக்னத்தில் நீள்முடி கிரீடம், ரத்தின அபயஹஸ்தம், திருமாா்பில் லட்சுமி பதக்கம், கா்ணபூசணம், பவளமாலை, அடுக்குப் பதக்கம், சூரியப்பதக்கத்துடன் அா்ச்சன மண்டபத்தை 7.45 -க்கு அடைந்தாா். 8.15 வரை திரையிடல் நிகழ்ச்சியும், 8.15 முதல் பிற்பகல் 1 மணி வரை அரையா் சேவையுடன் பொதுஜன சேவையும் நடைபெற்றது. திரளான பக்தா்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசித்தனா். பகல்பத்து 2 ஆம் நாள் திருநாள் நிகழ்ச்சியான இன்று புதன்கிழமை காலை 6.30 மணிக்கு நம்பெருமாள் கருவறையில் இருந்து புறப்பட்டு ரத்தின அபயஹஸ்தம், திருமார்பில் லட்சுமி பதக்கம், கர்ண பூசனம், பவளமாலை, அடுக்கு பதக்கம், சூரிய பதக்கத்துடன் முத்து சாய் கொண்ட அலங்காரத்தில் அர்ச்சன மண்டபத்தை 7 மணிக்கு அடைந்தார். 7.45 வரை திரையிடல் நிகழ்ச்சியும், பின்னர் மூலஸ்தானத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார் நம்பெருமாள். திரளான பக்தா்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசித்தனா். நன்றி Hindu சபரிமலை 18 படிகளின் மகத்துவங்கள்
தர்மம் தழைத்தோங்கவும், அனைத்து ஜீவராசிகள் உய்யவும், கர்ம, பக்தி, ஞான யோகத் தத்துவங்களை உபதேசிக்கவும் மகான்கள், அருளாளர்கள், குருமார்கள் அடிக்கடி அவதரிப்பது பாரத பூமியின் மிகப்பெரிய பெருமை. தர்மம் தழைத்தோங்கவும், அனைத்து ஜீவராசிகள் உய்யவும், கர்ம, பக்தி, ஞான யோகத் தத்துவங்களை உபதேசிக்கவும் மகான்கள், மகனீயர்கள், அருளாளர்கள், குருமார்கள் அடிக்கடி அவதரிப்பது பாரத பூமியின் மிகப்பெரிய பெருமை. அப்படிப்பட்ட ஒரு திரு அவதாரம்தான் ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள். வந்தவாசி அருகில் வழூர் கிராமத்தில் வசித்துவந்த மரகதம்மாள், வரதராசன் தம்பதிகளுக்கு பிறந்தவர். வெகு நாள்கள் குழந்தைப்பேறு வாய்க்காமல் வருந்திய அந்த தம்பதிகளுக்கு காமாட்சி அம்மன் கனவில் தோன்றி அருளியவண்ணம் மந்திரித்து நவநீதம் (வெண்ணெய்) சாப்பிட அதன் பயனாய் மரகதம்மாள் கருவுற்று அவதரித்தவர். ‘வெண்ணெய் உருவாக்கிய ஆன்மீகக் ‘கரு’ வூலம் இந்த மகான் என சிலாகித்து கூறலாம். அன்னை இறக்கும் தருவாயில் உணர்த்தியபடி திருவண்ணாமலையை அடைந்து சுமார் நாற்பது வருடங்கள் நான்கும் (நான்கு வர்ணாஸ்ரமங்கள்) கடந்த அதீத நிலையில் உன்மத்தராய், சித்த புருஷராய், பித்தராய் அவரவர்களுக்குத் தோன்றியவண்ணம் நின்று பக்தர்களின் இருள், இடர் நீக்கி, மெய்யறிவூட்டி நல்வழிகாட்டி அருளிய மகான் ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள். விப வருடம் 1929 மார்கழி மாதம் கிருஷ்ண பக்ஷ நவமி திதியன்று (4.1.29) மகா சமாதி எய்தினார். திருவண்ணாமலை செங்கம் முதன்மைச் சாலையில் அவரது சமாதி உள்ளது. மகனீயர்கள், ஒரு இடத்தில் வசித்தாலும், சமாதி கொண்டாலும் அவர்கள் அந்த இடத்தில் மட்டும் உழுபவர்கள் அல்லர், எங்கு, எவ்விதம் அவர்களது அருட்சக்தியை ஸ்தாபனம் செய்து வழிபட்டாலும் அங்கு அவர்களது அருள் பூரணமாக நிலைத்து நின்று வேண்டுவோருக்கு வேண்டியதை அருளிக் காக்கும். இதனை காய வ்யூகம் என்பர். அனேக சரீரமெடுத்து ஒரே நேரத்தில் நான்கைந்து இடங்களில் தென்படுதலைக் குறிக்கும். இவ்விதமாக, திரு அருணையில் தனது சரீரத்தை அடக்கிக் கொண்ட ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகளுக்கு ஊஞ்சலூரில் அமையப் பெற்றதுதான் ‘ சூஷ்ம யோக சமாதி’ அதேபோன்று நெரூர் ஸ்ரீ சதாசிவப்ரம்மேந்திரருக்கு மூன்று சமாதிகள், மதுரை குழந்தையானந்த சுவாமிகளுக்கு நான்கு சமாதிகள் வெளிப்படையாக அமைந்துள்ளன. ஸ்ரீ ராகவேந்திரருக்கு நூற்றுக்கணக்கில் பிருந்தாவனங்கள் அமைந்துள்ளன. ஊஞ்சலூர்: ஈரோடு மாவட்டத்தில் ஈரோட்டிற்கும், கரூருக்கும் மத்தியில் காவிரி நதிக்கரையில் அமைந்துள்ள சிறிய கிராமம்தான் ஊஞ்சலூர். (கொடுமுடியில் இருந்து 5 கி மீ தூரம்) இவ்வூரில் உள்ள மாரியம்மன் கோயில் வளாகத்தில் அம்பாள் ஊஞ்சலில் அமர்ந்து ஆடினதான ஐதீகத்தில் ஊஞ்சலூர் என்ற பெயர் அமைந்ததாம். இன்றும் இக்கோயிலில் ஒரு ஊஞ்சல் தொங்கியபடி தெய்வீகமாகப் போற்றி வழிபடப்படுகிறது. இதைத் தவிர இந்த ஊரில் புராதனமான நாகேஸ்வரஸ்வாமி திருக்கோயில், செல்லாண்டியம்மன் கோயில்,. ஸ்ரீ ராகவேந்திரர் பிருந்தாவனமும் அமைந்துள்ளது. ஸ்ரீ ஸத்குருஸ்வாமிகளின் அருளாசி உத்தரவின்படி 26.11.50ல் ஊஞ்சலூரில் சூஸ்மயோக சமாதி வைதீக பிரதிஷ்டையாக அமைக்கப்பட்டு தினசரி பூஜைகளும், ஆராதனை, ஜெயந்தி உற்சவங்களும், நவாவரண, பௌர்ணமி பூஜைகளும் நடைபெறுகின்றன. தற்போது இவ்வாலயத்தில் பிள்ளையார், பாலமுருகன் சன்னதிகள், ஸ்ரீ சக்ரபிரதிஷ்டை, சிறப்பு வாய்ந்த அர்த்தநாதீஸ்வரலிங்கம்,…
ஸ்ரீநம்பெருமாள் கிருஷ்ணர் செளரி கொண்டை, வைர அபயஹஸ்தம், மார்பில் மஹாலட்சுமி பதக்கம், முத்துச்சரம், பவள மாலை, அவுரிசரம் அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நடைபெறும் வைகுந்த ஏகாதசி பெருவிழாவின் பகல் பத்து 4 ஆம் திருநாளான வெள்ளிக்கிழமை ஸ்ரீநம்பெருமாள் கிருஷ்ணர் செளரி கொண்டையில் எழுந்தருளி பக்தா்களுக்குச் சேவை சாதித்தாா். பகல்பத்து விழாவில் நம்பெருமாள் ஒவ்வொரு நாளும் பல்வேறு அலங்காரங்களில் எழுந்தருளி பக்தா்களுக்குச் சேவை சாதிப்பாா். மங்கையராய் பிறப்பதற்கே மாதவம் செய்திட வேண்டும்! அதில் ஜோதிட பங்கு என்ன? பகல்பத்து 4 ஆம் நாளான வெள்ளிக்கிழமை காலை மூலஸ்தானத்திலிருந்து நம்பெருமாள் செளரி கொண்டை , வைர அபயஹஸ்தம், மார்பில் மஹாலட்சுமி பதக்கம் , முத்துச்சரம், பவள மாலை உள்ளிட்ட திரு ஆபரணங்கள் அணிந்து அா்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தா்களுக்குச் சேவை சாதித்தாா். காலை 8 மணி முதல் பக்தா்கள் வரிசையில் நின்று தரிசித்து வருகின்றன. இரவு 8 மணிக்கு மேல் பக்தா்களுக்கு அனுமதியில்லை. பக்தா்கள் முகக் கவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன் தரிசனம் செய்து வருகின்றனர். நன்றி Hindu மஹாளயம்: 15 நாள்களும் எப்படி இருக்க வேண்டும்?
சனியைப் போல் கொடுப்பாரும் இல்லை; கெடுப்பாரும் இல்லை என்பது கிராமங்களில் வழங்கப்படும் வழக்கு. நவகிரகங்களில், ஈஸ்வர பட்டம் பெற்றவர் சனிபகவான். நாம் செய்த பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப நடுநிலையுடன் பலன்களைத் தருபவர் என்பதால், அவருக்கு ‘நீதிமான்’ என்ற சிறப்புப் பெயரும் உண்டு. ‘ஆயுள்காரகன்’ என்ற சிறப்பும் சனீஸ்வர பகவானுக்கு உண்டு. காரி என்ற பெயர் சனீஸ்வரனுக்கு உண்டு. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஒரு சிற்றூர் சனீஸ்வரன் குடி கொண்டிருந்ததால் “காரி” குப்பமென இறைவன் பெயரால் அழைக்கப்பட்டது. அவ்வூரில் நெடுநாள்களாக மக்கள் வழிபட்ட சனிபகவான் மக்களின் தவறால், வழிபாடற்று தன்னை நாடிவரும் பக்தர்களுக்கு மட்டும் அருளுபவராக இருந்து வந்தார். பொ.ஆ 1236 முதல் 1375ம் ஆண்டு வரை அம்மன் கோவில் படைவீடை தலைநகராகக் கொண்டு சம்புவராய மன்னர்கள் ஆண்டனர். அவர்களில் ராஜவீர கம்பீரன் என்பவர் சனீஸ்வர யந்திரத்தைப் பிரதிஷ்டை செய்து, போருக்குச் செல்லும்போதெலாம் வழிபட்டு வெற்றி பெற்று வந்தனர் என்பது அறியப்படும் வரலாறாகும். 1535ம் ஆண்டு இப்பகுதியை ஆட்சி செய்த நாயக்க மன்னரின் படைத்தளபதி வையாபுரி இவ்வழியாக குதிரையில் செல்லும்போது, திடீரென கீழே விழுந்து இடது காலில் முறிவு ஏற்பட்டது. குதிரையும் நிலைதடுமாறியதால் பலத்த அடிபட்டது. சிகிச்சையின்போது ஒரு பெண்ணின் வாயிலாக இறைவன் வெளிப்பட்டு, யந்திர வடிவில் சனீஸ்வர பகவானுக்கு கோயில் ஒன்றை இங்கே எழுப்பி, சிறப்பு வழிபாடுகள் செய்தால் அனைத்தும் நலமாகுமென, அதன்படியே உடல் தேறிய வையாபுரி, பெரியோர்களின் ஆலோசனைப்படி புதரும் புல்லும் நீக்கி யந்திர வடிவிலான சனீஸ்வரன் யந்திரத்தை எடுத்து வைத்து நிறுத்தி 4 கால பூஜைகளை செய்து நற்பலன்கள் பெற்றார். கால வெள்ளத்தில் கோயில் மறைந்து புதர் மண்டிப்போக யந்திர சிலை மீண்டும் முட்புதர்களால் மூடப்பட்டது. ஊரார் ஆண்டுக்கு சிலநாட்கள் புதர்விலக்கி வழிபாடு செய்யும் பழக்கம் மட்டும் இருந்தது. யந்திர சனீஸ்வரரும் அடுத்துக் குளமும் குளத்தை ஒட்டி பெரிய ஏரியும் அமைந்திருந்ததால் காரியூர் என்னும் பெயர் ஏரியூர் என மருவிற்று. ஏரிக்கருகில் குடி கொண்டிருந்த சனீஸ்வரர் இருக்கும் தகவல் ஆடுமாடு மேய்க்கும் சிறுவர்கள் மூலம் அறியப்பட்டு தொல்பொருள் துறையினரால் தகவல்கள் வெளித்தெரிந்து மீண்டும் பூஜைகள் நிறுவி வழிபாடு நடைபெற்று வருகிறது. சனிபகவானை, விக்கிரக வடிவத்தில் மட்டும் காகம், கழுகு வாகனத்துடன் நவக்கிரகங்களுடனோ பிரகாரத்திலோ தரிசிக்கலாம். தேனி மாவட்டம் குச்சனூரில் சுயம்பு சனீஸ்வரனாகவும் வட நாட்டில் சனிசிக்னாபூர் என்னும் தலத்தில் பாறை வடிவத்திலும் தரிசிக்க முடியும். ஆனால், மேற்கூரையின்றி கருவறை கொண்ட யந்திர சனீஸ்வர பகவான் அருள்புரியும் கோயில் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியிலிருந்து சுமார் 10 கி.மீ தொலைவிலிருக்கும் ஏரிக்குப்பதில் மட்டுமே உள்ளது, திறந்த வெளிக்கருவறையில் ஐந்தரை அடி உயரமும் ஒன்றரை அடி அகலமும் கொண்ட உயரமான பலகைக் கல்லில், யந்திர சனீஸ்வரர், காக்கைச்சித்தரால் நிறுவப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. கிழக்கு நோக்கிக் காட்சிதரும் யந்திர சனீஸ்வரர் சனிபகவானின் பீஜாட்சர மந்திரங்கள் பொறிக்கப்பட்ட யந்திரத்தின் மேல் இடப்புறம் சூரியனும், வலப்புறம் சந்திரனும் இரண்டுக்கும் நடுவில் சனீஸ்வரனின்…