தினமும் ஓட்ஸ் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்!




ஓட்ஸ் என்பது நம் அன்றாட உணவுகளில் இடம்பெற்றுவிட்டது. நீரிழிவு நோயாளிகள், உடல் எடையை குறைக்கும் முயற்சியில் உள்ளவர்கள் தினமும் காலை உணவாக ஓட்ஸ் சாப்பிடுவதை வழக்கமாக்கிக் கொண்டுள்ளனர். 

ஓட்ஸில் வைட்டமின் இ, பி6, பி5 உள்ளிட்ட வைட்டமின்களும் இரும்பு, செலினியம், மெக்னீசியம், காப்பர் உள்ளிட்ட கனிமங்களும் காணப்படுகிறது. 

ஓட்ஸ் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் 

► குறைந்த கலோரி கொண்ட அதேநேரத்தில் பசியை கட்டுப்படுத்தக்கூடிய தன்மை ஓட்ஸ்-க்கு உண்டு. 

► உடலில் கெட்ட கொழுப்புகளைக் குறைத்து உடல் எடையைக் குறைக்க வழிவகுக்குகிறது. 

► ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துகிறது. இதனால் நீரிழிவு நோயாளிகளின் முக்கிய உணவாக ஓட்ஸ் உள்ளது.

► பெண்களுக்கு மார்பக, கர்ப்பப்பை புற்றுநோய் ஏற்படும் அபாயத்த்தைக் குறைப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 

► உயர் ரத்த அழுத்தத்தை குறைகிறது 

► நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது

► இதயத் தசைகளை பாதுகாக்கிறது. 

ஆனால், நம் முன்னோர்கள் பயன்படுத்திய குதிரைவாலி, வரகு, சாமை, திணை, கம்பு, கேழ்வரகு,சிறு தானிய வகைகள், ஓட்ஸைவிட கலோரி குறைந்தவை, விலையும் குறைவு. கடந்த 10 ஆண்டுகளாகவே ஓட்ஸ் அதிக பயன்பாட்டில் இருக்கிறது. அதற்கு முன்னதாக நம் நாட்டில் மேற்குறிப்பிட்ட தானியங்களே பயன்பாட்டில் இருந்தது. 

ஓட்ஸ் என்ற பயிர் வகை ஆஸ்திரேலியா, ஐரோப்பாவில் விளையக்கூடியது. 







நன்றி Dinamani

(Visited 10056 times, 31 visits today)

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × four =