மாதவிடாயின்போது பின்பற்ற வேண்டிய உணவுமுறைகள்! இன்று உலக மாதவிடாய் தினம் மே 28!

மாதவிடாய் என்பது பெண்களின் வழக்கமான உடல் செயல்பாடு என்கிற விழிப்புணர்வு மக்களிடம் இல்லை. இந்தியாவில் கடந்த 4ஆண்டுகளுக்கு முன்பு 2014 -ஆம் ஆண்டின் எடுக்கப்பட்ட ஒரு கணக்கெடுப்பின்படி சுமார் 42சதவித பெண்களுக்கு மாதவிடாய் பற்றிய போதிய விழிப்புணர்வு இல்லை என்பது தெரியவந்துள்ள தகவல். அதோடு மாதவிடாய் காலங்களில் உடலை எந்தளவுக்கு சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்கிற விழிப்புணர்வும் அவர்களுக்கு இல்லை என்பது தெரியவந்துள்ளது. மாதவிடாய் காலங்களில் சரியான முறையில் பராமரிக்கவில்லையென்றால் நோய் தாக்கம் ஏற்படும், மற்றும் இதனால் குழந்தை பெறுவதில் சிக்கலை ஏற்படுத்தும் என்று தெரியாமல் உள்ளனர். பெண்கள் இந்தியா போன்ற வளரும் நாடுகள் மட்டுமல்ல, வறுமையில் உழலும் ஆப்பிரிக்கா நாடுகளிலும், பணக்கார நாடான அமெரிக்காவிலும் மாதவிடாயால் பெண்கள் குறிப்பாக பள்ளி கல்லூரி செல்பவர்கள் அதிகம் பாதிப்படைகின்றனர் என்கிறது உலக சுகாதார நிறுவனம். மாதவிடாய்க்குப் பயன்படுத்தத் தேவையான சுகாதாரமான பொருட்கள் கிடையாமையாலும் தண்ணீர், துப்பரவு, சுகாதார வசதிகள் இல்லாமையாலும் ஆப்பிரிக்காவின் பல பகுதிகளில் சிறுமியர் ஐந்து நாட்கள் வரை பள்ளிக்கூடங்களுக்குச் செல்லாமல் இருக்கின்றனர். கடந்த 2015 -ஆம் ஆண்டு வங்காள தேசத்திலுள்ள ஒரு பள்ளியில் துப்பரவு வசதிகளை மேம்படுத்தியதால் அப்பள்ளியின் சிறுமியரின் சேர்க்கைப் 11சதவிகிதம் அதிகரித்தது என்பது குறிப்பிடத்தக்கது. வளர்ந்து வரும் நாடுகளிலுள்ள பள்ளிகளில் மாதவிடாய்க் கழிவு அகற்றல் குறித்து அதிகம் கவனம் செலுத்தப்படுவதில்லை. உலகளவில் பள்ளிகளில் மாணவியர்களுக்குத் தண்ணீர் மற்றும் துப்பரவு வசதி 47சதவீதம் மட்டுமே கிடைக்கிறது. பள்ளிகளில் கழிவறைகள் இருந்தாலும் கூட அங்கு மாதவிடாய் கழிவுகளைச் சேகரிக்கும் கூடைகள் வைக்கப்பட்டிருப்பதில்லை. இதனால் பயன்படுத்தப்பட்டு அப்புறப்படுத்தப்பட்ட மாதவிடாய் அணையாடைகள் பள்ளி வளாகத்தில் பல்வேறு இடங்களிலும் கிடக்கிறது ஆனால் நம் தமிழகத்தில் இது போன்று பல இன்னல்கள் குறைவுதான் என்று சொல்லலாம். மக்களிடம் இது போன்று மாதவிடாய் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என ஜெர்மனியைச் சேர்ந்த வாஸ் என்கிற தனியார் சேவை நிறுவனம் தான் மே 28- ஆம் தேதியை உலக மாதவிடாய் சுகாதார நாளாக பல நாடுகளில் உள்ள சுகாதார அமைப்புகளின் ஆதரவோடு இந்த நாளை உருவாக்கி அறிவித்தது. அந்தத்தினத்தில் பல பேரணி, கருத்தரங்குகள், விழிப்புணர்வு நாடகம், கட்டுரைப்போட்டிகளை நடத்தி வருகிறது.   மாதவிடாயின்போது பின்பற்ற வேண்டிய உணவுமுறைகள்! கால்சியம் : அந்த நாட்களில் கால்கள் இழுப்பதும், அடி வயிற்றில் அதிக வலியும் இருக்கும். அதனால் கால்சியம் நிறைந்த உணவுகளான பால், தயிர், வெண்டைக்காய், பாதாம் ஆகியவற்றை சாப்பிடுங்கள். மேலும் கண்டிப்பாக ஏதேனும் கீரைகளை சேர்த்துக் கொண்டால் படிப்படியாக இந்தப் பிரச்னைகள் குணமடையும்.தாம்பத்திய உணர்வை அதிகரிக்க உதவும் அரைக்கீரை சூப் வைட்டமின்: வைட்டமின் பி6 நமது உடலில் ஏற்படும் ஹார்மோன் பிரச்னைகளை சரி செய்கிறது, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது, “ப்ரி மென்ஸýரல் சின்ட்ரோம்’ஐ குறைக்கிறது. வைட்டமின் டி எலும்புகளை வலுவாக்கிறது. மிகவும் முக்கியமாக, மாதவிடாய்க்கு முன்பு மேற்கூறிய வைட்டமின் சத்துக்கள் அதிகம் இருக்கும் ஆரஞ்சு, நட்ஸ் வகைகள், வாழைப்பழம், மீன், தர்பூசணி, கீரை போன்றவற்றை…

Continue Reading

குரங்கு அம்மை என்றால் என்ன? குரங்கு அம்மை பரவும் முறையும் அதன் அறிகுறிகளும்

சமீபத்தில் ஐரோப்பாவில்இதயத்துக்கும்குரங்கு அம்மை பரவுவதாக செய்திகள் வந்து கொண்டிருந்த நிலையில் இன்று (வியாழக்கிழமை) அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவர் அரிய வகை குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டுள்ளார். நன்றி Hindu உணவில் சேர்த்துக் கொள்ளும் சர்க்கரை அளவை குறைப்பது எப்படி?

ஏழே நாட்களில் அழகான கையெழுத்து

தினசரி ஒரு மணி நேரம் என ஏழு நாட்கள் கேலிகிராஃபி பயிற்சி வழங்கி, கிறுக்கலான ஆங்கிலக் கையெழுத்தையும் அழகாக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார் அரசுப் பள்ளி அன்பாசிரியர் பூபதி அன்பழகன். கரூர் மாவட்டம், குளித்தலை அருகே பொய்யாமணி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பட்டதாரி ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார் பூபதி. கரோனாவுக்கு முன்னர் தன்னுடைய பள்ளி மாணவர்களின் கையெழுத்தைப் பயிற்சி மூலம் முத்து முத்தாக மாற்றியவர், தற்போது தமிழகம் முழுவதும் ஆர்வமுள்ள மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் கையெழுத்துப் பயிற்சியை வழங்கி வருகிறார். இதுகுறித்து ‘இந்து தமிழ்’ இணையத்திடம் பேசிய ஆசிரியர் பூபதி, ”அழகான கையெழுத்து, அசத்தலான ஆங்கிலம் ஆகியவைதான் பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளைத் தனியார் பள்ளிகளுக்கு அனுப்ப முக்கியக் காரணம் என்பது என்னுடைய கருத்து. அதை நாம் கொடுத்துவிட்டால் எங்களை நோக்கியும் மாணவர்கள் வருவார்கள் என்று நினைத்துதான் இதை ஆரம்பித்தேன். கேலிகிராஃபி என்னும் வெளிநாட்டுக் கையெழுத்துப் பயிற்சியை, கோவை இளைஞரிடம் கற்றுக்கொண்டேன். அவர் மூலம் எங்கள் பள்ளியில் 4 முதல் 8-ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் கற்றுக் கொடுத்தோம். இதில் 6,7,8-ம் வகுப்பு மாணவர்கள் அச்சுக் கோத்தது போல எழுதப் பழகினர். கரோனா காலத்தில், வீட்டில் சும்மா இருப்பதைவிட இதை மற்ற பள்ளி மாணவர்களுக்கும் கற்றுக் கொடுக்கலாமே என்று தோன்றியது. அடிப்படை கேலிகிராஃபிக்கென யூடியூப் பக்கத்தை ஆரம்பித்தேன். அதைப் பார்த்துக் கற்றுக்கொள்ள ஆர்வத்துடன் பலர் முன்வந்தனர். வாட்ஸ் அப் மூலம் அவர்களுக்குக் கற்றுக் கொடுக்கிறேன். கேலிகிராஃபி பயிற்சிக்கு அடிப்படை சாய்வுக் கோடு, மேல் வளைவு, கீழ் வளைவு ஆகிய மூன்று காரணிகள். முதல் நாளில் இதுகுறித்த அடிப்படைப் பயிற்சிகள், இரண்டாம் நாளில் a முதல் m வரை எப்படி எழுதுவது என்று பயிற்சி கொடுக்கப்படும். மூன்றாவது நாளில், n முதல் z வரை எழுதப் பயிற்சி அளிப்பேன். நான்காம் நாளில் A முதல் M வரையிலான சொற்களையும் ஐந்தாம் நாளில் N முதல் Z வரையான சொற்களையும் எழுதும் பயிற்சி உண்டு. அதேபோல 6-வது நாளில், ஒரு பத்தியை எழுதவும் 7-வது நாளில் ஒரு முழுப்பக்கக் கடிதம் எழுதும் பயிற்சியையும் கொடுக்கிறேன். அத்துடன் பயிற்சி முடிந்தது. இத்துடன் தினசரி அரை மணி நேரம் எழுதிப் பழகினால் போதும், கையெழுத்து நிச்சயமாக மாறும்.ஒரே நாளில் 20,000 குழந்தைகளுக்கு ரோட்டா வைரஸ் தடுப்பு மருந்து அளிப்பு  மேற்புற, கீழ்ப்புற வளைவுகளை எந்த இடத்தில் பயன்படுத்த வேண்டும் என்பதில் மாணவர்களுக்குக் குழப்பம் ஏற்பட்டதுண்டு. அதேபோல, கேப்பிட்டல் எழுத்துகளை எழுதவும் மாணவர்கள் சிரமப்படுவதைப் பார்த்திருக்கிறேன். 6-வது நாளில் இருந்து ஒற்றைக்கோடு உள்ள நோட்டில் எழுதப் பயிற்சி வழங்குவதால், மாணவர்களால் சுலபமாக அச்சில் கோத்தாற்போல எழுத முடியும். இதுவரை தமிழகம் மற்றும் புதுவையில் 120 மாணவர்கள் இந்தப் பயிற்சியின் மூலம் தங்கள் கையெழுத்தை அழகாக்கி இருக்கின்றனர். 60 ஆசிரியர்களுக்கும் பயிற்சி அளித்திருக்கிறேன். இன்னும் சில நண்பர்கள் ஆர்வத்துக்காகக் கற்றுக்கொள்கின்றனர். 45 வயதான எல்ஐசி ஏஜெண்ட்…

Continue Reading

இந்த 4 உணவுப் பொருட்களையும் கழுவாமல் தான் சமைக்க வேண்டும்! ஏன் தெரியுமா?

  உணவுப் பொருட்களை பயன்படுத்துவதற்கு முன்பு கழுவி பயன்படுத்துவதே ஆரோக்கியமான பழக்கம் என்றாலும் அதில் சில விதிவிலக்குகள் இருக்கின்றன. சமைப்பதற்கு முன்பு இந்த 4 பொருட்களையும் மறந்து கூட தண்ணீரில் கழுவி விடாதீர்கள். ஏன் என்று தானே யோசிக்கிறீர்கள் வாருங்கள் பார்ப்போம். 1. முட்டை: நாம் கடையில் வாங்கும் அனைத்து முட்டைகளிலும் அதைப் பாக்டீரியா கிருமிகளில் இருந்து பாதுகாக்க ஒரு விசேஷ ரசாயனம் (உடலுக்குத் தீங்கு விளைவிக்காத) அதன் மேற் பரப்பில் தடவப் பட்டிருக்கும். ஆனால் நீங்கள் முட்டையைத் தண்ணீரில் கழுவி விட்டால் இந்த பாதுகாப்பு அடுக்கு தண்ணீரில் கரைந்து, பாக்டீரியா வளர்வதோடு சமைக்கும் போது பிற உணவுப் பொருட்களிலும் அது பரவும் அபாயம் உள்ளது. 2. காளான்: காளான் தண்ணீரை மிக விரைவாக உறியும் தன்மை உடையது, ஆகையால் நீங்கள் அதைக் கழுவும் போது வேகமாகத் தண்ணீரை தன்னுள் இழுத்துக் கொள்ளும், இதனால் அதனுள் இருக்கும் வைட்டமின் சத்துக்களை அது இழக்க நேரிடும். ஒருவேலை மண்ணாக இருக்கிறது நிச்சயம் கழுவித்தான் ஆக வேண்டும் என்றால் ஓடும் தண்ணீரில் கழுவுவதை விட சில விநாடிகள் மட்டும் தண்ணீரில் முக்கி எடுப்பது அதன் சத்துக்கள் கரையாமல் இருக்க உதவும்.தினமும் 40 கேன் கோகோ-கோலா குடித்தவரின் இன்றைய நிலை! சுவைக்கு அடிமையானதால் வந்த ஆபத்து!! 3. பாஸ்தா: பாஸ்தா தயாரிப்பு நிறுவனம் அதன் மேற்பரப்பில் ருசிக்காக சில பொருட்களையும், ஸ்டார்ச் (மாவு) போன்றவற்றையும் சேர்த்திருக்கும். அதனால் தண்ணீரில் பாஸ்தாவை நீங்கள் கழுவினால் இந்தப் பொருட்கள் தண்ணீரில் கரைந்து அதன் சுவையை குறைத்துவிடும். 4. கறி: நாம் பலரும் கறியில் உள்ள பாக்டீரியாக்களை நீக்க அதைத் தண்ணீரில் நன்கு அலச வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம், ஆனால் அது மிகவும் தவறு. பாக்டீரியாக்களை  நீக்கக் கறியை குறைந்த சூட்டில் தண்ணீரில் வேக வைப்பதே சிறந்த வழியாகும். மேலும் தண்ணீரில் நீங்கள் கறியை கழுவுவதால் அது மேலும் பாக்டீரியா உற்பத்தியை அதிகரிக்கும் என்பதே உண்மை. சாப்பிடுவதற்கு முன்பும் சமைப்பதற்கு முன்பும் உணவுப் பொருட்களை கழுவுவது ஒரு நல்ல பழக்கம் என்றாலும் இந்த 4 பொருட்களையும் கழுவாமல் உபயோகிப்பதே சிறந்த மற்றும் ஆரோக்கியமான பழக்கம் ஆகும். நன்றி Hindu ஒரே நாளில் 20,000 குழந்தைகளுக்கு ரோட்டா வைரஸ் தடுப்பு மருந்து அளிப்பு 

பௌத்திரம் (மூலக் கட்டி) குணமாக 

  சத்துக்கள் : புரதம், மாவு, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு உள்ளிட்ட தாதுப் பொருள்கள், வைட்டமின் சி, அனைத்துவகை `பி’ காம்ப்ளக்ஸ் சத்துகள், நார்ச்சத்துகள் உள்ளிட்ட உடல் இயக்கத்துக்குத் தேவையான அனைத்து சத்துகளும் தேங்காயில் இருக்கின்றன . தீர்வு : தேங்காயை அரைத்து பால் (100 மில்லி) அளவு எடுத்து  அதனுடன் வெங்காயத் தாள் , பொடுதலைக் கீரை , வெந்தயம் இவை மூன்றையும் சம அளவு எடுத்து அரைத்து தேங்காய் பாலுடன் கலந்து காலை மாலை என இருவேளையும் குடித்து வரவும். தினமும் இருவேளை தேங்காய் பால் தலா (100 மி.லி) அல்லது கொப்பரைத் தேங்காய் எவ்வளவு சாப்பிட முடியுமோ  சாப்பிட்டு வரவும். இதனோடு  ஆகாயத் தாமரை இலையை அரைத்து வெளிமூலம், மூலக்கட்டி (பெளத்திரம்) ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அந்த இடத்தில் வைத்துக் கட்டி வந்தால் அவை விரைவில் குணமாகும்.வாயில் மற்றும் உதட்டில் உண்டாகும் வெள்ளை நிறம் மறைய குறிப்பு : பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வரமிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும். கோவை பாலாஇயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்96557 58609 / Covaibala15@gmail.com நன்றி Hindu உஷார்! சரியான தூக்கமில்லா விட்டால் மனித மூளை தன்னைத் தானே சாப்பிடத் தொடங்கி விடுமாம்! 

அடித்து துவைக்கற வெயில் காலத்தில் இதையெல்லாம் செய்யாதீங்க!

தமிழகத்தில் இந்தபெண்களே உஷார்! சானிடரி நாப்கினில் பெரிய ஆபத்து உள்ளது! (விடியோ)கோடை கால துவக்கத்திலேயே அதிக வெப்பம் நிலவுவதாலும் வரும் நாட்களில் மேலும் வெப்பத்தின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் நன்றி Hindu தாம்பத்திய உணர்வை அதிகரிக்க உதவும் அரைக்கீரை சூப்

ஒட்டுக் குடல் (அபெண்டிசைட்டிஸ்) குறைபாடு நீங்க

  சத்துக்கள் : வைட்டமின்  B2, C, B6, தையமின், நியசின், மெக்னீசியம், பாஸ்பரஸ், காப்பர், பொட்டாசியம், மங்கனீசு, கால்சியம், இரும்புச் சத்து, போலிக் ஆசிட், நார்ச் சத்து.  தீர்வு : ஒரு இளம் பிஞ்சு கத்தரிக்காயை (வரியுள்ள, விதையுள்ள காய்) எடுத்துக் கொண்டு ஒரு 15 நிமிடம் வெதுவெதுப்பான நீரில் ஊறப்போட்டு பின்பு எடுத்து நறுக்கி மிக்ஸியில் போட்டு அதனுடன் வெண்பூசணிக்காய் (50 கிராம் தோல், விதையுடன்), புடலங்காய் (50 கிராம் தோலுடன்), வெற்றிலை (2), புதினா (சிறிதளவு), எலுமிச்சம் பழம் தோல் மட்டும் (சிறிதளவு), தக்காளி (1), மிளகு (2), கொஞ்சம் மஞ்சள் தூள், தேவையெனில் உப்பு சேர்த்து அனைத்தையும் நன்றாக அரைத்து ஜூஸாக்கி வடிகட்டி காலை மாலை என இருவேளையும் குடித்து வரவும். மேற்கூறிய காய்களை நீராவியில் வேகவைத்து ஒருவேளை உணவில் பொறியலாகவும் சாப்பிட்டு வரவும். வெற்றிலை (2), மிளகு (2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து தினமும் படுக்கப் போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.சாக்லேட் முதல் காஃபி வரை இந்த 10 உணவுப் பொருட்களை கண்ட நேரத்தில் சாப்பிட்டால் உங்கள் உயிருக்கே ஆபத்து!! குறிப்பு : பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வரமிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும். கோவை பாலாஇயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்96557 58609 / Covaibala15@gmail.com நன்றி Hindu தாங்க முடியாத முதுகு வலியால் அவஸ்தை படுகிறீர்களா? இதோ தீர்வு!

பற்களில் உள்ள கறைகள் நீங்க வேண்டுமா?

பொதுவாக சிலருக்கு உடல் தோற்றம் அழகாக இருக்கும். ஆனால், அவர்களுடைய பற்களில் கறையாக இருக்கும். இதனால் அவர்கள் மற்றவர்களுடன் பேசுவதற்கும், பழகுவதற்கும் தயங்குவார்கள். இப்படி பற்களில் படிந்து இருக்கும் கறையைப் போக்க சில எளிய வழிகள் இதோ: தினமும் பல் தேய்க்கும் முன்பு சிறிது உப்பு தூளை வைத்து பல்லை தேய்த்துவிட்டு பின்னர், பேஸ்ட் கொண்டு பல் தேய்த்தால் பற்களில் படிந்த கறைகள் மெல்ல மெல்ல மறையத் தொடங்கும்.  இரவு சாப்பாடு முடித்து படுக்கச் செல்வதற்கு முன்பு ஆரஞ்சு பழத்தோலைக் கொண்டு பற்களை நன்றாக தேய்க்க வேண்டும். இதனை தேய்த்தபிறகு வேறு எதையும் சாப்பிடவோ, குடிக்கவோ கூடாது. மறுநாள் காலை எழுந்து வாயை கொப்பளிக்கலாம். இரவு முழுவதும் பற்களில் படர்ந்திருப்பதால் ஆரஞ்சு பழத்தோல் கறையை போக்குவதுடன் கிருமிகளையும் அழித்துவிடும்.  ஸ்ட்ராபெர்ரி பழத்தில் இரண்டு எடுத்து நன்றாக அரைத்து, தினமும் காலையில் பல் தேய்த்தவுடன், சிறிதளவு எடுத்து லேசாக பற்களில் தேய்த்து வாய் கொப்பளிக்க வேண்டும். இவ்வாறு 10 நாட்களுக்கு செய்து வர, பற்களில் உள்ள கறைகள் நீங்கும்.கெஞ்சும் பாதங்களின் வலி நீக்கிக் கொஞ்சும் பீட்ஸ் தெரபி! பற்களை சுத்தமாக்குவதிலும், ஈறுகளுக்கு ஆரோக்கியம் அளிப்பதிலும் ஆப்பிளின் பங்கு சிறந்தது. எனவே உணவை சாப்பிட்டு முடித்த ஒரு மணி நேரம் கழித்து ஆப்பிளை சில துண்டுகள் சாப்பிட்டு வர, பற்களில் கறை படிவதைத் தடுக்கலாம். கொய்யாப் பழம் மற்றும் கொய்யா இலைகள் பற்களில் உள்ள கறையைப் போக்க மிகச்சிறந்தது. கொய்யா இலையை தண்ணீரில் கொதிக்க வைத்து, அந்த நீரைக் கொண்டு வாயை கொப்பளித்து வந்தாலும் அல்லது தினந்தோறும் ஒரு கொய்யாப்பழத்தைச் சாப்பிடுவதன் மூலமும் பற்களில் உள்ள கறையைப் போக்க முடியும். 1 தேக்கரண்டி கிராம்புத் தூளுடன், 1 தேக்கரண்டி ஆலிவ் ஆயில் கலந்து, கறைபடிந்த பற்களில் தேய்த்து, சிறிது நேரத்திற்குப் பின் வெதுவெதுப்பான நீரில் வாயை கொப்பளிப்பதன் மூலம் சுத்தமான பற்களைப் பெறலாம். – ஏ.எஸ். கோவிந்தராஜன் நன்றி Hindu முருங்கைக் காய் மந்திரம்!

கெஞ்சும் பாதங்களின் வலி நீக்கிக் கொஞ்சும் பீட்ஸ் தெரபி!

  அலுவலகத்தில் இருந்து அலுத்துக் கலைத்து போய் எப்போதடா வீட்டுக்குப் போய்ச் சேரலாம் என்று ஆவலோடு பேருந்து நிறுத்தம் வருகிறீர்கள், நிறுத்தத்தில் பேருந்துக்காக காத்திருக்கும் மழைக்கால ஈசல் போன்ற பெருங்கூட்டத்தை பார்த்ததும் வீட்டுக்குப் போகும் ஆவலையும் மீறிக் கொண்டு கால் மூட்டுகளும், பாதங்களும் ஐயோ! இத்தனை கூட்டமா உட்கார கொஞ்சம் இடம் கிடைத்தால் தேவலாம் என்று கெஞ்ச ஆரம்பித்து விடுகின்றன. எப்போதாவாது உடனே சீட் கிடைத்து உட்காரப் போனாலும் கூட  பக்கத்திலேயே தள்ளாத வயதில் ஒரு பாட்டி நின்று கொண்டிருப்பதைப் பார்த்தால் இரக்க சுபாவிகள் நாம் மனிதாபிமானத்தைப் பற்றியெல்லாம் யோசித்து ஐயோ பாவம்! என்று அவர்களை உட்கார வைத்து விட்டு நின்று கொண்டே வீடு வந்து சேர வேண்டியதாகி விடுகிறது. எப்படியோ பாதங்களின் கெஞ்சல் ஓய்வதே இல்லை . ஒரு வழியாக வீடு வந்து சேர்ந்த பின்னும் கூட பெரும்பாலும் என்ன செய்கிறோம் ? அப்படியே கொஞ்ச நேரம் காலாற உட்காருவோம். பிறகு இருக்கவே இருக்கிறது டின்னர் தயாரித்தல், சாப்பிடுதல், பத்துப்பாத்திரம் தேய்த்துக் கழுவுதல், படுக்கைக்கு ஆயத்தமாகுதல் என்று அப்புறமும் நித்ய கடமைகள் காத்திருக்கின்றன. இதில் எங்கிருந்து பாதங்களின் கெஞ்சல் காதில் விழப் போகிறது. ஆனால் மனதிற்குத் தெரியும், அது அதன் பாட்டில் கால் வலிக்கிறது, கால் வலிக்கிறது கொஞ்சம் ஆயின்ட்மென்ட் தடவேன், கொஞ்சம் வெந்நீரில் காலை முக்கியெடுத்து மசாஜ் செய்து கொள்ளேன், என்று முணுமுணுத்துக் கொண்டே இருக்கும், நாம் அதை காதில் போட்டுக் கொள்ளாமல் நமது வேலைகளைத் தொடர்ந்து கொண்டிருப்போம்.  இதனால் என்னவாகிறது?!   இந்நிலை நீடித்தால் ஒருநாள் ஆர்த்தரைட்டிஸில் கொண்டு போய் தள்ளும்.  இது தேவையா? அவ்வப்போது செய்ய வேண்டிய சின்ன சின்ன பயிற்சிகளை செய்தாலே போதும் கால் பாதங்கள் பெருமளவில் வலியிலிருந்து தப்பலாம். மூட்டு வலி மற்றும் பாதங்களின் சோர்வைப் போக்க வெறுமே காலாற நீட்டி நிமிர்ந்து படுத்து ஓய்வெடுத்தால் மட்டுமே போதாது. அதற்கென்று தனியான பிரத்யேக கவனிப்புகள் தேவைப்படுகின்றன. ஸ்பா போன்ற காஸ்ட்லியான மசாஜ் சென்ட்டர்களுக்குச் செல்லும் அவசியம் இன்றி எளிதாக அலுவலகம் போய் விட்டு வந்து வீட்டிலேயே நாம் செய்து கொள்ளக் கொள்ளக் கூடிய வகையில் மிக எளிமையான நிவாரணமுறைகள் மூன்றை இந்த இதழில் பார்ப்போம். 1 .பாதங்களுக்கு டிசென்டிங் (decending ) முறையில்  மிதமான அழுத்தத்தில் மசாஜ்…  இரண்டு பாதங்களையும் தொடர்ந்து வளைத்து  நிமிர்த்தி வளைத்து நிமிர்த்தி இயங்க விடுங்கள், பிறகு மருத்துவர்கள் பரிந்துரைத்த தரமான பாத மசாஜ் கிரீம்களில் ஏதாவதொன்றை உபயோகித்து ஒவ்வொரு பாதமாக… பாத விளிம்புகளில் தொடங்கி பாதங்களின் கணுக்கால் வளைவுகள் வரை இதமாக கீழிருந்து மேலாக அழுத்தி அழுத்தி மசாஜ் செய்ய ஆரம்பியுங்கள், இந்த மசாஜ் பத்து நிமிடங்களுக்கு அழுத்தத்தை கூட்டி குறைத்து தொடரட்டும், பத்து நிமிடங்களின் முடிவில் மெதுவாக இதமாக எல்லா விரல்களையும் இழுத்து சொடக்கெடுத்து மசாஜின் இறுதிக் கட்டம் சுண்டு விரலில் வந்து முடியட்டும். இந்த மசாஜ் சோர்வான பாதங்களின் வலியைப் போக்கி நமது சுறு சுறுப்பை…

Continue Reading

உடல் பருமன் குறைய வேண்டுமா? இது ஒரு சிறந்த வழி!

  காய் : கொத்தவரங்காய் + எலுமிச்சம் பழத்தோல்  + கோவக்காய் சத்துக்கள் : இரும்புச் சத்து, கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் ஏ, பி, சி நிறைந்துள்ளது. தீர்வு : காலை எழுந்தவுடன்  மற்றும் மாலையில் குடிக்கவும். கொத்தவரங்காய்யுடன் (5), கோவக்காய் (5), ஒரு அரை எலுமிச்சம்பழம் (தோலோடு), உப்பு (கொஞ்சம்), தக்காளி (1), புதினா (சிறிதளவு), வெற்றிலை (2) இவை அனைத்தையும் பொடியாக நறுக்கி மிக்ஸியில் போட்டு அதனுடன் சிறிது இஞ்சி (1 துண்டு), மிளகு (2) சேர்த்து அரைத்து ஜூஸாக்கி தினந்தோறும் காலை எழுந்தவுடன் மற்றும் மாலை வேளையில் வெறும் வயிற்றில் குடித்து வரவும். காலை  இரவு வேளை உணவாகஉங்களுக்கே தெரியாமல் அடிக்கடி எலும்பு முறிவு ஏற்படுதா? ஆஸ்டியோபோராஸிஸ் நோயாக இருக்கலாம்! கேரட் துருவல். 50 கிராம் புடலங்காய் அரிந்தது. – 50 கிராம் கோவைக்காய் அரிந்தது – 50 கிராம் நறுக்கிய தக்காளி. – 2 நறுக்கிய வெங்காயம். – 50 கிராம் தேங்காய் துருவல் – 50 கிராம்சீரகத் தூள். – 5 கிராம்மிளகுத் தூள். – 5 கிராம் எலுமிச்சைச் சாறு தோலோடு  – 50 மி.லி புளிக்காத கெட்டித் தயிர் – 100 கிராம் மேற்கண்ட அனைத்தையும் ஒன்றாக கலந்து, சிறிது உப்பு சேர்த்து அதனுடன் நறுக்கிய கறிவைப்பில்லை, கொத்தமல்லி, புதினா ஆகியவற்றைச் சேர்த்துச் சாப்பிடவும். இதை காலை மற்றும் இரவு வேளை உணவாகச் சாப்பிட்டு வரவும். பின்பு பசித்தால் வழக்கமான உணவு எடுத்துக் கொள்ளலாம். வெற்றிலை (2), மிளகு (2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து தினமும் இரவு படுக்கப் போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும். குறிப்பு : பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வரமிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும். கோவை பாலாஇயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்96557 58609 / Covaibala15@gmail.com நன்றி Hindu முருங்கைக் காய் மந்திரம்!

விஷக் கிருமிகளுடன் வேலை செய்வது எப்படி?

நச்சு சகாக்களை நீங்கள் சமாளிக்க வேண்டுமா? எந்த புத்தில் எந்த பாம்பு இருக்கிறது என்று தெரியாமல் வேலை செய்கிறீர்களா? அப்போது இதை அவசியம் படித்துவிடுங்கள். ஒரு காதல் உறவைப் போலவே, பணியிடத்தில் கெடுமதி உடைய நபர்களுடன் (Toxic people) பழகுவது என்பது உங்களுக்கு தொடர்ச்சியாக மன அழுத்தத்தை தரக்கூடும். குறிப்பாக, நீங்கள் ஒரு நாளின் பெரும்பகுதியை அத்தகைய சகாக்களுடன் செலவிட வேண்டியிருக்கும் போது சங்கடமாக இருக்கும். குறிப்பிட்ட சக ஊழியர் உங்களிடம் அனுசரணையாக இருப்பது போல நடித்து, தனது நச்சுத்தன்மையான நடத்தையால் சுற்றியுள்ள மற்றவர்களின் மன ஆரோக்கியத்தையும் வேலைத்திறனையும் பாதித்துவிடுவார்கள். எனவே நீங்கள் வெகு ஜாக்கிரதையாக பழகுங்கள். நிபுணர்களின் கூற்றுப்படி, மற்றவர்களின் நடத்தை மீது நமக்கு எந்த கட்டுப்பாடும் இருக்க முடியாது, ஆனால் சக ஊழியரின் கெடுதல் விளைவிக்கும் நடத்தைக்கு நாம் எவ்வகையில் பிரதிபலிக்கிறோம் என்பதை மாற்றுவது அல்லது அத்தகைய நபர்களைக் கையாள்வதற்கு உளவியல் தந்திரங்களைப் பயன்படுத்துவது உங்களுக்குக் கணிசமாக உதவும். எனவே, இதுபோன்ற சக ஊழியர்களைக் கையாள்வதற்கான சில வழிகளைப் பார்ப்போம். சொந்த வாழ்க்கை விவரங்களை ஒருபோதும் பகிர வேண்டாம் விஷமிகள் பெரும்பாலும் மற்றவர்களுடைய சொந்த விஷயங்களை தெரிந்து வைத்துக் கொள்ளும் ஆர்வமுடையவர்கள். அத்தகைய நபர்களுடன் தனிப்பட்ட தகவல்களைப் பகிர்வது உங்களை அழிக்க அவர்களுக்கு ஒரு ஆயுதத்தை நீங்களே மனம் உவந்து ஒப்படைப்பது போன்றதாகும். எனவே அத்தகைய சகாக்களுடன் பேசிப் பழகும் போது மிகவும் எச்சரிக்கையாக இருங்கள், ஏனென்றால் அவர் உங்களுக்கு எதிராக என்னென்ன தகவல்களைப் பயன்படுத்தலாம் என்று உங்களுக்குத் தெரியாது. கூடுமானவரையில் தொழில்ரீதியாக மட்டும்  அவர்களுடனான பழக்கத்தை வைத்திருங்கள். பற்றற்று இருங்கள் இம்சையை ஏற்படுத்தும் சக ஊழியரிடமிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கான சிறந்த வழிகளில் ஒன்று பற்று இல்லாமல் இருப்பதுதான். நச்சுத்தன்மையுள்ள நபர் உங்களை முதலில் உணர்ச்சிவசப்படுத்தி அதன்பின் தங்களின் தந்திரங்களை பயன்படுத்துவார்கள், நீங்கள் அந்த வலையில் விழும்போது, ​​அது நிலைமையை மோசமாக்கும். உதாரணமாக, நீங்கள் அவருடன் இருக்கும்போது அந்த நபர் மிகவும் ஆதரவாக இருப்பது போல பேசி பழகிவிட்டு, உங்கள் முதலாளியின் முன்னால் உங்களைப் பற்றி இல்லாததும் பொல்லாததையும் சொல்லி, குறை கூறுவார். சுருக்கமாக சொல்லப்போனால் போட்டுக் கொடுக்கும் வேலையை சிறப்பாக செய்வார்.  உங்களுக்கு அது தெரிய வரும்போது, ​​கோபம் அடைவீர்கள் அல்லவா? கோபம் அல்லது சோகம் போன்ற உணர்ச்சிகளுக்கு நீங்கள் இடம் கொடுத்தால் அது உங்களை பலவீனராக்கிவிடும். எனவே, எதற்கு ஒருவரிடம் தேவையில்லாமல் பழகி அவரிடம் மிகுந்த ஈடுபாடு வைத்து அதன்பின் அவர் சுயரூபம் வெளிப்படும்வரை காத்திருக்க வேண்டும். ஆரம்பத்திலிருந்து ஒரு அடி தள்ளி இருந்துவிட்டால் உங்கள் மனம் உணர்ச்சிக் கொந்தளிப்பிலிருந்து தப்பித்திருக்கும் அல்லவா? அலுவலகத்தைப் பொருத்தவரையில் உங்களுடன் வேலை செய்பவர்கள் சக ஊழியர்கள்தான் அன்றி, நண்பர்கள் இல்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.  அவர்கள் தவறானவர்கள் என்று நிரூபிக்க முயற்சிக்காதீர்கள்பயமுறுத்தாதீங்க; கம்பேர் பண்ணாதீங்க விஷமிகளைக் கையாள்வதற்கான சிறந்த வழி அவர்களுக்கு மேலே நீங்கள் உயர்ந்து செல்வதுதான். மாறாக அவர்களுடன் போராடிக் கொண்டிருந்தால்…

Continue Reading

வேர்க்கடலையை ஏன் குளிர்காலத்தில் சாப்பிட வேண்டும் தெரியுமா?

  குளிர்காலத்தில் அதிகம் விலையும் பயிர் வேர்க்கடலை, இதை நம் முன்னோர்கள் தங்களது உணவில் குளிர்காலத்தில் அதிகம் சேர்த்து கொள்வதற்கான காரணம் இது குளிர்கால பயிர் என்பது மட்டுமல்ல இந்தக் காலத்தில் வேர்க்கடலை சாப்பிடுவதினால் பல நன்மைகள் நமக்குக் கிடைக்கும் என்பதும் தான். உடலை உஷ்ணமாக வைத்திருக்கும்: வேர்க்கடலை இயற்கையாகவே நமது உடலின் வெப்ப அளவை அதிகரிக்கக் கூடிய ஒன்று. இதனால் குளிர்காலத்தில் தேவையான வெது வெதுப்புடன் நமது உடல் இருக்கும். பொதுவாகக் குளிர்காலத்தில் நமது கல்லீரல் நல்ல ஆரோக்கியத்துடன் செயற்படும் என்பதால் எண்ணெய் நிறைந்த உணவுகளையும் அதனால் எளிதாக செரிமானம் செய்ய முடியும். கொழுப்பின் அளவைக் கட்டுப்படுத்தும்: வேர்க்கடலை எண்ணெய் உடலில் இருக்கும் கெட்ட கொழுப்பைக் கரைத்து நல்ல கொழுப்பை தரக்கூடும் என்று ஆராய்சியாளர்கள் தெரிவிக்கிறார்கள், இதனால் பித்தக்கட்டிகள் உருவாவதற்கான அபாயம் குறைகிறது.சையது முஷ்டாக் டி20: , தமிழகம், மகாராஷ்டிரம் வெற்றி சர்க்கரை அளவைச் சரி செய்யும்: வேர்க்கடலையில் இருக்கும் சத்துக்கள் ரத்தத்தின் சர்க்கரை அளவைச் சீர் படுத்தக் கூடியது. சமீபத்திய ஆய்வுகளின் அடிப்படையில் வேர்க்கடலை சாப்பிடுவதன் மூலம் நீரிழிவு நோய் வருவதற்கான அபாயம் 21% வரை குறையும் என்று தெரியவந்துள்ளது. சரும ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும்: வேர்க்கடலையில் இருக்கும் நல்ல கொழுப்பு சருமத்தில் எண்ணெய் பதத்தை பாதுகாக்கும் இதனால் குளிர்காலத்தில் நமது சருமம் வறண்டு போவதை தடுக்கலாம். மேலும் வேர்க்கடலையில் இருக்கும் வைட்டமின் இ மற்றும் சி சத்துக்கள் சருமத்தின் பொலிவை அதிகரிப்பதுடன், தோல் சுருக்கங்கள் ஏற்படாமல் தவிர்க்கும். வேர்க்கடலையில் இருக்கும் ஆண்டிஆக்ஸிடண்ட்ஸ் அப்பழுக்கற்ற சருமத்தை தரக்கூடியது.  ஆகையால் குளிர்காலத்தில் வேர்க்கடலை சாப்பிடுவதன் மூலம் பல நன்மைகளை நாம் பெறலாம். வேர்க்கடலையை அதிகம் சாப்பிடுவதும் செரிமான கோளாறை ஏற்படுத்தி வயிற்று வலி ஏற்படச் செய்யும். ஒருவேளை உங்களுக்கு வேர்க்கடலை சாப்பிடுவது ஒவ்வாது என்றால் அதைச் சாப்பிட முயற்சிக்காதீர்கள். குளிர்காலத்தில் உங்களது கல்லீரல் ஆரோக்கியமாக இருக்கும் என்பதால் வேர்க்கடலை சாப்பிடுவதற்கான சரியான காலம் இதுதான் என்பதை மறந்து விடாதீர்கள். நன்றி Hindu 1000 Rupee for Ration Card Holders

உங்கள் இதயத்தை இளமையாக வைத்திருக்க விரும்புகிறீர்களா? இதோ சிறந்த வழி!

  ஒரு நாளைக்கு ஏழு மணி நேரம் தூங்குவது உங்கள் இதயத்தின் வயதைக் குறைத்து இளமையுடன் வைத்திருக்கும், மேலும் இதய நோய்க்கான ஆபத்துக்களையும் குறைத்துவிடும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். எனவே தினமும் இரவில் 7 மணி முதல் 8 மணி நேரம் வரை கட்டாயம் தூங்க வேண்டும். ஏழு மணி நேரத்திற்கும் குறைவான அல்லது அதிகமான தூக்கம் ஒருவருக்கு இருந்தால் அது அவர்களின் இதயத்தில் கார்டியோ வாஸ்குலர் பிரச்னைகளை விளைவிக்கலாம். குறைவான தூக்கம் ஒருவரின் இதயத்தின் வயதை அதிகரித்துவிடும். எனவே இரவில் தூக்கம் நன்றாக இருந்தால்தான் கார்டியோ வாஸ்குலர் பிரச்னைகளைத் தவிர்க்க முடியும் என்கிறது அந்த ஆய்வு. ஜார்ஜியாவில் உள்ள எமரி பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆய்வாளர் ஜூலியா தர்மர் கூறுகையில், ‘இந்த ஆய்வு முடிவுகள் முக்கியமானவை. காரணம் ஒருவரின் தூக்கத்தின் அளவுகோலின் மூலம் கார்டியோ வாஸ்குலர்  நோய் ஏற்படுவதற்குரிய அபாயத்தை கண்டுபிடிக்கும் ஒரு அளவீட்டு முறையாக இது விளங்குகிறது’ என்றார். ஸ்லீப் எனும் பத்திரிகையில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வில், 30-74 வயதுக்குட்பட்ட 12,775 வயதினரிடமிருந்து தரவுகள் சேகரிக்கப்பட்டுள்ளது. தாங்கள் எவ்வளவு நேரம் தூங்கினோம் என்று அவர்களே கூறியதன் அடிப்படையில், இந்த முடிவுகள் ஐந்து பிரிவில் முதலில் வகைமைப்படுத்தப்பட்டது. 5 மணி நேரம் அல்லது அதற்கும் குறைவாகவும், 6, 7, 8, 9 அல்லது அதற்கும் மேற்பட்ட மணி நேரம் தூங்கியவர்கள் என இவ்வாறு ஐந்து வகைகளாக தூக்க நேரங்கள் வரையறுக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு நபரின் இதய வயதினையும் கணக்கிட, sex-specific Framingham heart age algorithm வழிமுறையைப் பயன்படுத்தி கணக்கிட்டனர் குழுவினர். இவ்வகையில் தூக்க காலத்திற்கும் இதய வயதுக்கும் இடையேயான தொடர்பை ஆய்வு செய்ய பலவகைப்பட்ட லீனியர் அல்லது லாஜிஸ்டிக் ரிக்ரஷனையும் பயன்படுத்தி முடிவுகளைக் கண்டறிந்தனர்.மருந்து, மாத்திரைகள் இன்றி ரத்த அழுத்தத்தைக் குறைக்க இயற்கை வழிமுறை! இந்த ஆய்வின் முடிவில், 24 மணிநேரத்தில் 7 மணி நேரத்துக்கு குறைவான தூக்கத்தை உடையவர்கள் மிகவும் குறைவான இதய வயதைக் கொண்டிருந்தனர் என்பது உறுதியானது. அமெரிக்காவைச் சேர்ந்த கொண்ட National Sleep Foundation எனும் அமைப்பின் கருத்துப்படி, உடல் எடை, புகைபிடித்தல் மற்றும் உடற்பயிற்சி பழக்கங்கள் ஆகியவற்றையெல்லாம் மீறி, ஒருவருக்கு தூக்கம் சரியில்லாமல் போனால் கார்டியோ வாஸ்குலர் அபாயம் மற்றும் கரோனரி இதயப் பிரச்னைகள் ஏற்படுகிறது என்று கூறுகிறது. குறைந்த அளவிலான தூக்கம் ஆரோக்கியமான உடலைக் கூட சிதைத்துவிடும். குளுக்கோஸ், வளர்சிதைமாற்றம், ரத்த அழுத்தம் போன்றவற்றில் பாதிப்பினை ஏற்படுத்தும். மேலும் உயிரியல் செயல்முறைகளில் மாற்றங்கள் ஏற்படுத்த வல்லது தூக்கமின்மை. மாறாக நன்றாகத் தூங்கினால் இப்பிரச்னைகளை எதுவும் நெருங்காமல் தவிர்த்துவிடலாம். நன்றி Hindu குறட்டை விடுவதை நிறுத்த வேண்டுமா? இதைச் செய்தால் போதும்

home remedies for personal health |காம உணர்வை அதிகரிக்க உதவும் சூப்

couple   அரைக்கீரை சூப் தேவையான பொருட்கள் அரைக் கீரை –  ஒரு கட்டுஇஞ்சி (தோல் நீக்கியது)  –  10 கிராம்மிளகு –  ஒரு ஸ்பூன்சீரகம் – ஒரு ஸ்பூன்பூண்டு – 2 பல்சோம்பு – ஒரு ஸ்பூன்லவங்கப் பட்டை.  –  5 கிராம்தக்காளி – 3தேங்காய்த் துருவல்  – 2 கைப்பிடிசின்ன வெங்காயம் – 5எண்ணெய் – தேவையான அளவுஉப்பு –  தேவையான அளவு செய்முறைதோல் நோய்களைக் குணமாக்க உதவும் அருமருந்து முதலில் அரைக்கீரையை கழுவி ஆய்ந்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். தக்காளி, இஞ்சி மற்றும் தேங்காய்த் துருவல் ஆகியவற்றை சேர்த்து இரண்டு குவளை தண்ணீர் ஊற்றி  அரைத்து வடிகட்டி வைத்துக் கொள்ளவும். வடிகட்டி வைத்துள்ள சாற்றை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அதில் மேலும் ஐந்து குவளை நீர் சேர்த்து அதில் வெங்காயம் , பூண்டு, மிளகு, சீரகம் , சோம்பு ஆகியவற்றையும் மற்றும்  ஆய்ந்து வைத்துள்ள கீரையையும் சேர்த்து நன்கு வேக வைக்கவும். கீரை நன்றாக வெந்தவுடன்  இறக்கி வைத்துக் கொள்ளவும். ஒரு வாணலியில் லவங்கப் பட்டையைச் போட்டு எண்ணெய் ஊற்றி வதக்கி பின்பு இறக்கி வைத்துள்ள அரைக்கீரையைச் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து ஒரு கொதிவிட்டு இறக்கி வைத்துக் கொண்டு குடிக்கவும். பயன்கள் இந்தக் கீரை சூப்பை தொடர்ந்து குடித்து வந்தால், காம உணர்வை அதிகப்படுத்தி இனிய தாம்பத்தியம் நடைபெற உறுதுணையாக இருக்கும். படுக்கப் போகும் முன் வெற்றிலை (2), மிளகு(2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து  தினமும் படுக்கப் போகும் முன்  வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும். குறிப்பு அனைத்து காய்களையும் , கீரைகளையும் நீராவியில் வேக வைத்து   உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக  இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக  மிளகையும் பயன்படுத்தவும். கோவை பாலாஇயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  காய்கறி சிகிச்சையாளர்.Cell : 96557 58609, 73737 10080Covaibala15@gmail.com நன்றி Hindu சையது முஷ்டாக் டி20: , தமிழகம், மகாராஷ்டிரம் வெற்றி

சையது முஷ்டாக் டி20: , தமிழகம், மகாராஷ்டிரம் வெற்றி

சையது முஷ்டாக்உங்கள் இதயத்தை இளமையாக வைத்திருக்க விரும்புகிறீர்களா? இதோ சிறந்த வழி!கோப்பை டி20 போட்டியின் ஒரு பகுதியாக எலைட் குரூப் ஏ பிரிவு ஆட்டத்தில் தமிழகம், மும்பை, கா்நாடக அணிகள் வெற்றி பெற்றன. நன்றி Hindu கொஞ்சம் தெரிஞ்சிக்கோங்க….

பெண்களுக்கு ஓர் எச்சரிக்கை! 35 வயதுக்கு மேல் குழந்தை பெற்றால், பிறக்கும் குழந்தைகளுக்கு இதய நோய்கள் தாக்கும் அபாயம்!

  35 வயதுக்கு மேல் குழந்தை பெற்றுக் கொள்ள நினைக்கும் பெண்களுக்கொரு ஒரு எச்சரிக்கை. குழந்தை பெற்றுக் கொள்ளும் வயது ஏற, ஏற பெண்களின் உடல்நிலையில் ஏற்படும் ஹார்மோனல் மாற்றங்களுக்கு ஏற்ப அவர்களது குழந்தை பெறும் திறனும் பாதிப்புக்கு உள்ளாகிறது எனப் பல்லாண்டுகளாகவே மருத்துவ ஆய்வுக் கட்டுரைகள் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன. 35 வயதுக்கு மேல் ஒரு குழந்தையை கருப்பையில் தாங்கி 10 மாதம் சுமந்து போஷாக்காக வளர்த்து பிரசவிக்கும் திறன் பெண்களுக்கு குறைந்து விடுகிறது. வயது ஏற, ஏற கருப்பை தனது ஆரோக்யத்தைப் படிப்படியாக இழந்து கொண்டே வருகிறது. இதன் காரணமாகவே மகப்பேறு மருத்துவர்கள் திருமணமான தம்பதிகளிடையே விரைவில் குழந்தை பெற்றுக் கொள்ளும் ஆவலை ஊக்குவிப்பதோடு, பணி மாறுதல், உயர் கல்வி, வெளிநாட்டு வேலை வாய்ப்புக்காக காத்திருத்தல், உள்ளிட்ட காரணங்களுக்காக எல்லாம் குழந்தப்பேற்றை தள்ளிப்போட நினைக்கும் மனப்பான்மையையும் தொடர்ந்து கண்டித்து வருகிறார்கள். உடலியல் காரணங்களினாலோ அல்லது பொருளியல் காரணங்களினாலோ ஒரு பெண்ணுக்கு குழந்தைப்பேறு தள்ளிப் போய் காலதாமதாக குழந்தைப்பேறு நிலைக்கிறது எனில் குழந்தையைக் கருவில் தாங்கும் தாயின் வயதைப் பொறுத்து கருவிலிருக்கும் குழந்தையின் உடல் வளர்ச்சி, மூளை வளர்ச்சி மற்றும் உள்ளுறுப்பு வளர்ச்சிகள், இதய ஆரோக்யம் உள்ளிட்டவை அமைகின்றன என்கிறது சமீபத்தில் வெளிவந்துள்ள கனடா மருத்துவப் பல்கலைக்கழக ஆய்வு ஒன்று. சளி, சீழ், ரத்தத்துடன் கூடிய வயிற்றுப்போக்கு நிற்க அந்த ஆய்வின் அடிப்படையில் வயதான எலிகளிடையே இந்த சோதனை நடத்தப்பட்டதில் மேற்கண்ட ஆய்வு முடிவு நிரூபணமாகியுள்ளது. 35 வயதுடைய பெண்ணுக்கு சமமான கருப்பை திறன் கொண்ட வயதான பெண் எலிகளிடையே நடத்தப் பட்ட அந்த மருத்துவ ஆய்வில் வயதாக, ஆக பெண்களின் கருப்பை ஆரோக்யம் நிறைந்த, உடற்கோளாறுகள் அற்ற குழந்தைகளைப் பெற்றுத்தரும் திறனை படிப்படியாக இழந்து வருவது நிரூபணமாகியுள்ளதாக இந்த ஆய்வை நடத்திய மருத்துவக் குழுவின் தலைமை ஆய்வாளரான சாண்ட்ரா டாவிட்ஜ் தெரிவித்துள்ளார். இந்த ஆய்வின் மூலமாக நடுத்தர வயதுக்கு மேற்பட்டு வயதான பெண்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு வரக்கூடிய ஆரோக்ய குறைபாடுகள் குறித்து மேலும் விளக்கமாக ஆராய முடிவதாக அவர் தெரிவித்துள்ளார். நன்றி Hindu அடேங்கப்பா! எலுமிச்சைப் பழத்தில் இவ்வளவு நன்மைகளா?

பற்களின் பளீர் புன்னகையைக் காக்க சாப்பிட வேண்டிய ஐந்து எளிய உணவுப் பொருட்கள்…

 1. செலரி…  இதைப் பொடியாக நறுக்கி பிரியாணி மற்றும் நான்-வெஜ் கிரேவிகளின் மீது தூவி இருப்பதைப் பார்த்திருப்பீர்கள். இந்த செலரி விலையும் அப்படி ஒன்றும் பிரமாதமானதில்லை. மலிவான விலையில் சூப்பர் மார்க்கெட்டுகள் மற்றும் காய்கறி மொத்தவிலைக் கடைகளில் கிடைக்கும்.  செலரியை வாயிலிட்டு மெல்லும் போது அரிசிச் சாதம் போலவோ, மைசூர் பாகு போலவோ வாயிலிட்டதும் உடனே கரைந்து விடாது. நன்றாக மென்று விழுங்க வேண்டிய உணவு இது. அப்படி மெல்லும் போது சுரக்கும் அதிகப்படி உமிழ்நீர் பற்குழியை உருவாக்கக் கூடிய ஸ்ட்ரெப்ட்டோகாக்கஸ் மியூட்டன்ஸ் எனும் பாக்ட்டீரியாவின் செயல்களை நியூட்ரலாக்கி கட்டுப்படுத்துகிறது. இதனால் செலரியை உணவில் எந்தவகையில் சேர்த்துக் கொண்டாலும் அவை பற்குழியை கட்டுப்படுத்த உதவுகின்றன. பற்குழி இல்லா வாழ்வைப் பெற செலரி சாப்பிடலாம். தினமும் நமது பல் துலக்கும் நேரங்களை சந்தோசமாக்கிக்  கொள்ளலாம் . 2. க்ரீன் டீ…  நாம் வீடுகளிலும் டீக்கடைகளிலும் வழக்கமாக சாப்பிடும் ரெட் டீயைக் காட்டிலும் க்ரீன் டீ பல வகைகளில் உடல் நலனுக்கு ஆரோக்கியமானது. பற்களின் நலனைப் பொறுத்தவரை க்ரீன் டீ ஒரு வரப்பிரசாதம். க்ரீன் டீயில் இருக்கும் “கேட்டசின்கள்” எனப்படும் மூலக்கூறுகள் பல்வேறு வகையான உணவுப் பொருட்களை உண்பதனால் வாயில் உருவாகும் பாக்டீரியாக்களை அழிப்பதுடன் வாய் துர்நாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய பாக்டீரியாக்களையும் முற்றிலுமாக ஒழித்துக் கட்டுகிறது என்பதால் ரெட் டீக்குப் பதிலாக எல்லோரும் தினம் ஒரு முறை க்ரீன் டீ சாப்பிட்டுப் பழகலாம். 3. கிவி பழங்கள்…  இந்த 7 காரணங்களைத் தெரிந்து கொண்டால் தினமும் வாழை இலையில்தான் சாப்பிடுவீர்கள்! கிவி பழம் ஆரஞ்சு, லெமன் போல விட்டமின் ‘சி’ சத்துக்கள் நிரம்பிய பழ வகையைச் சேர்ந்தது, நாளொன்றுக்கு நமது உடலின் ஆரோக்கியப் பயன்பாட்டுக்குத் தேவைப்படும் விட்டமின் ‘சி’ யைக் காட்டிலும் 100  மடங்கு அதிகமான விட்டமின் ‘சி’ இந்தக் கிவி  பழத்தில் அபிரிமிதமாக தேங்கியுள்ளது. பல் ஈறுகளில் ரத்தக் கசிவு ஏற்பட முக்கியக் காரணமாக இருப்பது இந்த விட்டமின் சி குறைபாடு தான். அத்தகைய விட்டமின் ‘சி’ சத்துக்கள் இந்தப் பழத்தில் நிறைந்திருப்பதால் கிவி பழங்களை வாரத்திற்கு மூன்று நாட்கள் பிற பழங்களோடு சேர்த்து உண்ண ஆரம்பிக்கலாம், ஏனெனில் பல் ஈறுகளின் பொலிவையும் பலத்தையும் தகர்க்கக் கூடிய பெரியோடென்டல்(periodontal ) நோய்களில் இருந்து பற்களைக் காக்கின்றன இந்த கிவி பழங்கள் . விட்டமின் ‘சி’ சத்துக்கள் நிரம்பிய பிற கனி வகைகள் – ஆம்லா(நெல்லிக்கனி) கோவா(கொய்யாப் பழம்) 4. சீஸ்…  குழந்தைகளுக்கு தினசரி உணவில் ப்ரெட் அல்லது சப்பாத்தி மற்றும் நான் வகைகளில் சீஸ் தடவி சாப்பிடத் தரலாம். சீஸ்க்கு வாயின் அமிலகாரத் தன்மையை (PH) சமநிலைப் படுத்தும் தன்மை உண்டு என்பதால் வாய்ப்புண்கள் வராமல் தடுக்கும் என்பதோடு சீஸ் சாப்பிடுவதால் பற்களின் எனாமல் பாதுகாக்கப் படுவதோடு சீஸ்  சுவையானது வாயில் உமிழ் நீர் சுரப்பையும்  அதிகரிக்கும். இதனால் உணவை மென்று விழுங்குவது எளிதாகும். 5. தண்ணீர்…  நாளொன்றுக்கு குறைந்த பட்சம் 3 லிட்டர் தண்ணீர் குடிப்பது…

Continue Reading

இந்தியாவில் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை 2030-ம் ஆண்டிற்குள் இருமடங்காக அதிகரிக்கும் அபாயம்!

  உலக சுகாதார நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தின்படி உலக நாடுகளிலேயே இந்தியாவிலேயே அதிகமான நீரிழிவு நோயாளிகள் உள்ளதாகத் தெரியவந்துள்ளது. ஆரம்பத்தில் வயதானவர்களுக்கு மட்டும் மரபணு முதிர்ச்சியினால் வந்த இந்த நோய் இன்றைய நிலையில் சர்வ சாதாரணமாகச் சிறியவர், பெரியவர் என எந்த வேறுபாடும் இல்லாமல் அனைவரையும் தாக்கும் ஒரு முதன்மை நோயாக உருவெடுத்துள்ளது.  அந்த அறிக்கையின்படி பட்டியலில் முதலிடத்தில் இந்தியாவும், அதைத் தொடர்ந்து வரிசையாகச் சீனா, அமெரிக்கா, இந்தோனேசியா, ஜப்பான், பாக்கிஸ்தான், ரஷ்யா, பிரேசில், இத்தாலி மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகள் உள்ளன. 2000-ம் ஆண்டில் இந்தியாவில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மொத்தம் 31.7 மில்லியன் ஆகும், இந்த எண்ணிக்கை 2030-ம் ஆண்டிற்குள் அப்படியே இரட்டிப்பாகும் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதாவது 79.4 மில்லியன் மக்கள் நீரிழிவு நோயால் 2030-ம் ஆண்டில் பாதிக்கப்பட்டிருப்போம்.  இயற்கையாகவே உடலில் சுரக்க வேண்டிய இன்சுலின் உற்பத்தியாகாமல் போவதால் ரத்தில் இருக்க வேண்டிய சர்க்கரை அளவு குறைகிறது, இதுவே நீரிழிவு நோயாளியாக ஒருவரை மாற்றுகிறது. இந்த நிலை வெகு நாட்களுக்கு நீடித்தால் அது இதய நோயை உண்டாக்குகிறது. அதிகப்படியான கொழுப்பு கரையவும், நுரையீரல் சார்ந்த பிரச்னைகள் நீங்கவும் சிறந்த வழி! தேசிய ஊட்டச்சத்து நிறுவனம் கூறியுள்ளதாவது, சமமான உணவு பழக்கத்தின் மூலமே இதைக் கட்டுப்படுத்த முடியும், மேலும் இதனால் ஏற்படும் அபாயத்தில் இருந்து தப்பிக்க சரியான ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும். அதிகமான எடை நீரிழிவு நோய் வருவதற்கான ஒரு முக்கிய காரணமாகும். எனவே ஆரோக்கியமான உணவு பழக்கத்துடன் உடற்பயிற்சி செய்தால் உடல் பருமனை தவிர்க்கலாம்.  நவம்பர் 14-ம் தேதியான இன்று உலகம் முழுவதிலும் உலக நீரிழிவு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இதன் முக்கிய நோக்கமானது மக்களிடையே நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு, இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதை எப்படிக் கையாள வேண்டும் என்பதைக் கூறுவதே. இந்தத் தினத்திலாவது நீரிழிவு நோய் பாதிப்பை விளையாட்டாகக் கருதாமல் அதே சமயம் உயிரைப் பரிக்கும் கொடிய நோயாகவும் கண்டு அஞ்சாமல் அதிலிருந்து நம்மை எப்படி பாதுகாத்துக் கொள்வது என்பதைக் கண்டறியுங்கள். நீரிழிவு நோய் இல்லாத இந்தியாவை உருவாக்குவோம். நன்றி Hindu விஷக் கிருமிகளுடன் வேலை செய்வது எப்படி?

இன்று மே 31, பேஸிவ் ஸ்மோக்கிங் பத்தி நீங்க கண்டிப்பா தெரிஞ்சிக்க வேண்டிய நாள்!

  உலகில் புகையிலையின் பேராபத்திலிருந்து மக்களைக் காக்க வேண்டியது அரசின் கடமை. அந்தக் கடமையை அரசு, திரையரங்குகளில்… திரைப்படம் போடத் துவங்கும் முன் சில, பல புகையிலை ஒழிப்பு பிரச்சார விளம்பரங்கள் மூலமாக ஒழித்து விட முடியும் எனக் கருதுகிறது. ஆனால் அப்படி புகையிலையை ஒழிப்பதானால் புகையிலையை பல்வேறு வடிவங்களில் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை குறைந்திருக்க வேண்டுமே?! அப்படியொன்றும் குறைந்ததாகத் தெரியவில்லை. சர்வதேச அளவில் நாளுக்கு நாள் புகைபிடிப்போரின், புகையிலை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறதே தவிர குறையவே இல்லை என்பதே நிஜம்.  அஸ்ஸாமில் கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது தற்போது ஆட்சியமைத்திருக்கும் அரசியல் கட்சியின் முக்கியமான வாக்குறுதியே புகையிலையை மாநிலம் முழுதும் முற்றிலுமாக இல்லாதொழிப்பதே தங்களது முதல் கடமை என்பதாக இருந்தது. தேர்தலில் அந்தக் கட்சியின் வெற்றிக்கு இந்த வாக்குறுதியும் ஒரு காரணமாக அமைந்திருந்ததை சுட்டிக் காட்டில் சமீபத்தில் தனியார் தொண்டு நிறுவனம் ஒன்று மே 31 புகையிலையற்ற உலகை உருவாக்குவோம் எனும் சங்கல்ப தினத்தையொட்டி பொதுமக்களை போராட்டத்துக்கு அழைத்துள்ளது. வாலண்டரி ஹெல்த் அசோஸியேசன் ஆஃப் ஆஃப் அஸ்ஸாம் ( VHAA)  என்ற பெயரில் இயங்கி வரும் அந்த தன்னார்வ தொண்டு அமைப்பு, அஸ்ஸாம் மாநிலத்தில், மத்திய புகையிலை எதிர்ப்பு நடவடிக்கையை உடனடியாக அமுல்படுத்துமாறு கோரிக்கை விடுத்திருக்கிறது. அதன் மூலமாக அஸ்ஸாம் மாநிலம் முழுவதும் புகையிலை சார்ந்த லாஹிரி வஸ்துக்களின் பயன்பாட்டை முற்றிலுமாகத் தடை செய்யக் கோரி மாநில அரசை நிர்பந்தித்து வருகிறது. VHAA அமைப்பின் கோரிக்கைகளில் தெளிவாகக் குறிப்பிடப்படும் விஷயங்கள் யாதெனில்,  அஸ்ஸாமில் பொது இடங்களில் புகைபிடித்தலை முற்றிலுமாகத் தடை செய்ய வேண்டும் என்பதோடு மைனர் சிறுவர்களுக்கு குறிப்பாக 18 வயதுக்கு குறைவாக உள்ள சிறுவர்களுக்கு சிகரெட் விற்பனை செய்வதும், புகையிலை சார்ந்த பொருட்களை உட்கொள்ள ஊக்குவிப்பதும் சட்டப்படி தண்டனைக்குரிய குற்றம், அதோடு பள்ளி, கல்லூரிகள் போன்ற கல்வி நிறுவனங்கள் இருக்கும் எல்லைகளில் சுமார் 100 கெஜ சுற்றளவில் புகையிலை சார்ந்த பொருட்களின் விற்பனை தடை செய்யப்பட வேண்டும். அந்தத் தடையை சட்டப்பூர்வமாக நிலைநிறுத்த மாநில அரசு COTPA (CIGARETTE AND OTHER TOBACCO PRODUCT ACT) சட்டத்தின் 4 மற்றும் 6 பிரிவுகளைப் பயன்படுத்தி ஆவன செய்ய வேண்டும் என VHAA  அமைப்பு அஸ்ஸாம் மாநில அரசை வலியுறுத்தியுள்ளது. மே 31 ஆம் தேதி சர்வ தேச அளவில், புகையிலை இல்லா உலகை உருவாக்கும் தினமாக உலக சுகாதார நிறுவனம் மற்றும் அதன் உறுப்பு நாடுகளால் அங்கீகரிக்கப் பட்டுள்ளது. அதன்படி மே 31 ஆம் தேதியன்று புகையிலை மற்றும் புகையிலை சார்ந்த பொருட்களினால் ஏற்படக் கூடிய கொடுமையான ஆரோக்யக் கோளாறுகளைப் பட்டியலிட்டு மக்களுக்கு வெளிப்படுத்தி புகையிலையின் தீமையை உலகம் முழுக்க கொண்டு சேர்க்க வேண்டிய வேலையை அரசும் பலவேறு தனியார் தொண்டு நிறுவனங்களும் செய்து வருகின்றன. புகையிலை என்பது அதைப் பயன்படுத்துகிறவர்களை மட்டுமல்ல, அவர்களைச் சார்ந்தவர்களையும் மிக பாதிக்கிறது. அதற்கு பேஸிவ்…

Continue Reading

ஒன்று வாங்கினால் மற்றொன்று இலவசம்

கோபத்தை வாங்கினால் இரத்தக் கொதிப்பு இலவசம்! பொறாமையை வாங்கினால் தலைவலி இலவசம்! வெறுப்பை வாங்கினால், பகை இலவசம்! கவலையை வாங்கினால், கண்ணீர்home remedies for personal health |காம உணர்வை அதிகரிக்க உதவும் சூப்இலவசம்!. மாறாக நம்பிக்கையை வாங்கினால், நண்பர்கள் இலவசம்! உடற்பயிற்சியை வாங்கினால், ஆரோக்கியம் இலவசம்! அமைதியை வாங்கினால், ஆனந்தம் இலவசம்! நேர்மையை வாங்கினால், நித்திரை இலவசம்! அன்பை வாங்கினால் அனைத்து நன்மைகளும் இலவசம். இலவசமாக எது வேண்டுமென்று இன்றேனும் முடிவு செய்யுங்கள். பற்களில் உள்ள கறைகள் நீங்க வேண்டுமா?