
கோப்புப்படம்
குளிர்காலத்தில் சளி, இருமல் தொல்லையால் அவதிப்படுவோர் அதிகம். இதில் இருமலைக் குணப்படுத்த வீட்டில் உள்ள பொருள்களை பயன்படுத்தலாம்.
இருமல் உள்ளவர்கள் முதலில் வெதுவெதுப்பான நீரை குடிப்பதை பழக்கப்படுத்திக்கொள்ளுங்கள்.
சுக்கு, மிளகு, திப்பிலியை வறுத்து பொடி செய்து பால், தேன் கலந்து சாப்பிடலாம்.
பாலில் மிளகுத் தூள் அல்லது மஞ்சள் தூள் அல்லது இவை இரண்டையும் சேர்த்து குடித்துவர இருமல், தொண்டை வலி குணமாகும்.
மூன்று மிளகுடன் சிறிது வெல்லம் அல்லது பனங்கற்கண்டு சேர்த்து மென்று அதன் சாறை விழுங்க வேண்டும். நாள் ஒன்றுக்கு இருமுறை இவ்வாறு செய்துவர இருமல் சரியாகும்.
எலுமிச்சம் பழச்சாற்றுடன் தேனை கலந்து குடித்துவர வறட்டு இருமல் குணமாகும்.
பாலுடன் கிராம்புப் பொடி மற்றும் பனங்கற்கண்டு சேர்த்து காய்ச்சி சாப்பிடலாம்.
தேனுடன் இஞ்சிச்சாறு சேர்த்து அருந்தினால் இருமல், சளி நீங்கும்.