உடல் எடையைக் குறைக்க உதவும் அற்புத பானம்!




உடல் எடையைக் குறைக்க பலரும் பல வழிகளில் முயற்சித்து வரும் நிலையில், மிகவும் மலிவான விலையில் எளிதாக வீட்டிலேயே ஒரு பானம் தயாரிக்கலாம். நாம் தினமும் சமையலுக்குப் பயன்படுத்தும் சீரகத்தின் தண்ணீர்தான் அது. 

முதலில் சமையலிலோ அல்லது ஏதோ ஒருவகையிலோ சீரகத்தைப் பயன்படுத்துவதன் பலன்களை அறியலாம். 

► சீரகம் செரிமானத்தைத் தூண்டுகிறது.

► இதில் இரும்புச்சத்து, ஆன்டி ஆக்சிடன்ட் அதிகம் உள்ளது. 

► நீரழிவு நோயாளிகளுக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவைக் குறைக்க பயன்படும். 

► ரத்தத்தில் உள்ள கொழுப்பை மேம்படுத்துகிறது. 

► உடலில் தேவையற்ற கொழுப்புகளைக் குறைத்து எடையைக் குறைக்கிறது. 

► உடல் அழற்சியை போக்க உதவும்.

சீரகத் தண்ணீர் தயாரிப்பது எப்படி? 

ஒரு டீஸ்பூன் சீரகத்தை எடுத்து ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டு சில நிமிடங்கள் கொதிக்க வைக்க வேண்டும். சீரகம் லேசாக மஞ்சள் நிறமாக மாறும் வரை கொதிக்கவிட்டு பின்னர் இறக்கிவிட்டு அதில் சிறிது எலுமிச்சைச்சாறு சேர்க்கவும். 

இப்போது நீர் ஆறிய பின்னர் தொடர்ந்து குடித்துவரவும். அப்படியே குடிக்க முடியாதவர்கள் சிறிது தேன் கலந்தும் குடிக்கலாம். 

சாதாரணமாக தண்ணீருக்குப் பதிலாக இதனை தொடர்ந்து குடிக்கவும். 

நன்மைகள்

உடலில் தேவையற்ற கொழுப்புகளை உறிஞ்சுவதால் உடல் பருமனுடையவர்களுக்கு இது பரிந்துரைக்கப்படுகிறது. மேலும் உடலில் உள்ள நச்சுகளை நீக்குகிறது. 

சீரகம் வீட்டிலேயே எளிதாக கிடைக்கும் பொருள் என்பதாலும் இதனால் பக்க விளைவுகள் எதுவும் இல்லை என்பதாலும் உடல் எடையைக் குறைக்க விரும்புவர்கள் இதனை முயற்சி செய்து பாருங்கள்..

சீரகத் தண்ணீர் தினமும் அருந்துவதுடன் கொழுப்பு நிறைந்த உணவுகளைத் தவிர்த்து லேசான உடற்பயிற்சிகளையும் செய்துவர உடல் எடை குறையும். 







நன்றி Dinamani

(Visited 100102 times, 31 visits today)

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − 12 =