உணவில் சேர்த்துக் கொள்ளும் சர்க்கரை அளவை குறைப்பது எப்படி?




வெள்ளை நிற உணவுகள் மனிதனுக்குப் பகை, எனவே பச்சை நிற உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள்.

வெள்ளை நிற உணவில் முதல் பகையாக இருப்பது சர்க்கரை. அது இனித்தாலும், மனிதனுக்கு பல கசப்பான விளைவுகளையே ஏற்படுத்துகிறது.

சர்க்கரையை நேரடியாகவோ மறைமுகமாகவோ மனிதர்கள் உட்கொண்டுதான் வருகிறார்கள். சர்க்கரை நேரடியாக ஏற்படுத்தும் பெரும் தொந்தரவு என்றால் அது நீரிழிவு. மறைமுகமாக எத்தனையோ.

சரி இவ்வளவு துயரத்தைக் கொடுக்கும் சர்க்கரையை உணவிலிருந்து எவ்வாறு குறைப்பது?  

இதற்கு சில வழிகாட்டுதல்களை உணவுப் பாதுகாப்பு தரக் கட்டுப்பாட்டு அமைப்பு வெளியிட்டுள்ளது.

வாருங்கள் பார்ப்போம்
1. குளிர்பானங்களை அறவே தவிர்க்க வேண்டும். அதற்கு மாறாக இளநீர், மோர், சர்க்கரை இல்லாமல் பழச்சாறுகளை அருந்தலாம்.

2. தினமும் தேநீர், காபி குடிப்பதற்கு பதிலாக, உப்பு கலந்த கஞ்சி, எலுமிச்சை சாறு, சூப் போன்றவற்றை தேர்வு செய்யலாம்.

3. பண்டிகைக் காலங்களில் இனிப்பு பலகாரங்களை செய்யும் போது, சரியான அளவில் சர்க்கரையை சேர்க்காமல், பாதி அல்லது முக்கால் பங்கு சர்க்கரையை பயன்படுத்துங்கள்.

3. எப்போதாவது இனிப்பாக எதையாவது சாப்பிட வேண்டும் என்று தோன்றினால் உடனே வாழைப்பழம், ஆப்பிள், பப்பாளி, திராட்சைப் போன்ற பழங்களை நறுக்கி சாப்பிடுங்கள். அவையும் இனிப்பாகவே இருக்கும்.

4. உணவுகளுக்கு சாஸ் போன்றவற்றை தொட்டுக் கொள்வதற்கு பதிலாக சட்னியை தேர்வு செய்து கொள்ளுங்கள்.

5. இனிப்புக்காக சர்க்கரையை சேர்த்து சாப்பிடும் உணவுகளில் பேரீட்சம் பழம் போன்ற இனிப்பான உலர் உணவுகளை சேர்த்துக் கொள்ளலாம் என்று சுட்டுரைப் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

இதில்லாமல், நாம் நடைமுறையில் சில விஷயங்களை மாற்றலாம்.

6. தேநீர் மற்றும் காபியில் சர்க்கரைக்கு பதிலாக நாட்டுச் சர்க்கரை அல்லது கருப்பட்டியை சேர்த்துப் பருகுங்கள். பழக்கம் இல்லாதவர்கள் வாரத்தில் சில நாள்களேனும் முயற்சிக்கலாம்.

7. இட்லி, தோசை, உப்புமா, இடியாப்பத்துக்கு சிலர் சர்க்கரை சேர்த்து சாப்பிடுவார்கள். அதுபோன்ற பழக்கம் உடையவர்கள் நாட்டுச் சர்க்கரையை பயன்படுத்தலாம்.

8. தேங்காய்பால் தயாரிக்கும் போதும், புட்டு தயாரிக்கும் போதும் சர்க்கரைக்கு பதிலான நாட்டுச் சர்க்கரையை பயன்படுத்தலாம். புட்டில் சர்க்கரை அளவை குறைத்துவிட்டு பழங்களுடன் சாப்பிடுவதை வழக்கமாக்கிக் கொள்ளலாம்.

9. நீரிழிவு நோய் இல்லாதவர்களும் சரியான அளவில் சர்க்கரையை எடுத்துக் கொள்ளாமல் பாதி அளவுக்கு சர்க்கரையைப் உணவில் சேர்க்கலாம்.

10. இனிப்புகளை சாப்பிடும் அளவுக்கு கசப்பு மற்றும் துவர்ப்பான உணவுகளுக்கும் முக்கியத்துவம் கொடுங்கள்.
 







நன்றி Hindu

(Visited 10062 times, 31 visits today)

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × three =