பொரித்த உணவுகளைத் தவிர்த்துவிடுங்கள்!




heart

கோப்புப்படம்

பொரித்த உணவுகளை அதிகம் சாப்பிட்டால் இதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் வாய்ப்பு அதிகம் என்று கூறுகின்றனர் ஆராய்ச்சியாளர்கள். 

எண்ணெயில் பொரித்த உணவுகள் பொதுவாகவே ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்பது பொதுவாகக் கூறப்பட்டாலும் பல்வேறு ஆய்வுகளின் மூலமாகவும் இது உறுதி செய்யப்பட்டு வருகிறது. 

அந்த வரிசையில், புதிதாக மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆய்வில் பொரித்த உணவுகள் சாப்பிடுவதால் ஏற்படும் உடல் ரீதியான விளைவுகளை பட்டியலிடுகிறது. 

பொரித்த உணவுகள், இதய நோய் மற்றும் பக்கவாதம் ஆகியவற்றை ஏற்படுத்தும் வாய்ப்பு அதிகம், வாரத்திற்கு ஒவ்வொரு 114 கிராம் கூடுதல் பொரித்த உணவுகளுக்கும் ஆபத்து அதிகரிக்கிறது என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். 

சுமார் 5 லட்சம் பேர் பங்கேற்ற இந்த ஆய்வில், பொரித்த உணவுகளை தொடர்ந்து சாப்பிடுபவர்கள் இதய நோய்களால் பாதிக்கப்படுவதோடு இறப்புக்கான வாய்ப்பும் இருப்பதாகக் கூறுகின்றனர். இது 28% முக்கிய இதய நிகழ்வுகளின் அபாயத்துடன் தொடர்புடையது. கரோனரி இதய நோய்க்கான ஆபத்து 22% மற்றும்இதய செயலிழப்புக்கான ஆபத்து 7% ஆகவும் உள்ளது. 

பொரித்த உணவுகளில் மீன், உருளைக்கிழங்கு, ஸ்நாக்ஸ் ஆகியவை அதிகம் விளைவை ஏற்படுத்தும் என்றும் இவற்றை உணவில் குறைந்துகொண்டாலே பாதிப்பு குறையும் என்றும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். 

இதய நோய்களால் உயிரிழந்தோருக்கு பொரித்த உணவுகளும் ஒரு முக்கியமான காரணமாக இருக்கலாம், அதேநேரத்தில் இதுகுறித்த கூடுதல் ஆய்வுகள் தேவை என்கின்றனர் ஆய்வாளர்கள். 

பொரித்த உணவுகளில் கொழுப்புச் சத்து அதிகம் காணப்படுகிறது. அவற்றை சமைக்கப் பயன்படும் ஹைட்ரஜனேற்றப்பட்ட தாவர எண்ணெய்களிலிருந்து தீங்கு விளைவிக்கும் டிரான்ஸ்-கொழுப்பு அமிலங்களை உருவாக்குகின்றன. இதன் விளைவாக உடலில் அழற்சி ஏற்படுகிறது. பொரித்த கோழி மற்றும் பிரஞ்ச் பிரைஸ் போன்ற உணவுகளில் உப்பு அதிகம் இருக்கும் என்பதால் இது இதய நோய்களுக்கு வாய்ப்பாக இருக்கும் என்றும் இதனால் உணவில் முடிந்தவரை பொரித்த உணவுகளைத் தவிருங்கள் என்றும் ஆய்வாளர்கள் பரிந்துரைக்கின்றனர். 







நன்றி Dinamani

(Visited 10085 times, 31 visits today)

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen − five =