
couple
அரைக்கீரை சூப்
தேவையான பொருட்கள்
அரைக் கீரை – ஒரு கட்டு
இஞ்சி (தோல் நீக்கியது) – 10 கிராம்
மிளகு – ஒரு ஸ்பூன்
சீரகம் – ஒரு ஸ்பூன்
பூண்டு – 2 பல்
சோம்பு – ஒரு ஸ்பூன்
லவங்கப் பட்டை. – 5 கிராம்
தக்காளி – 3
தேங்காய்த் துருவல் – 2 கைப்பிடி
சின்ன வெங்காயம் – 5
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
செய்முறை
- முதலில் அரைக்கீரையை கழுவி ஆய்ந்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
- தக்காளி, இஞ்சி மற்றும் தேங்காய்த் துருவல் ஆகியவற்றை சேர்த்து இரண்டு குவளை தண்ணீர் ஊற்றி அரைத்து வடிகட்டி வைத்துக் கொள்ளவும்.
- வடிகட்டி வைத்துள்ள சாற்றை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அதில் மேலும் ஐந்து குவளை நீர் சேர்த்து அதில் வெங்காயம் , பூண்டு, மிளகு, சீரகம் , சோம்பு ஆகியவற்றையும் மற்றும் ஆய்ந்து வைத்துள்ள கீரையையும் சேர்த்து நன்கு வேக வைக்கவும்.
- கீரை நன்றாக வெந்தவுடன் இறக்கி வைத்துக் கொள்ளவும்.
- ஒரு வாணலியில் லவங்கப் பட்டையைச் போட்டு எண்ணெய் ஊற்றி வதக்கி பின்பு இறக்கி வைத்துள்ள அரைக்கீரையைச் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து ஒரு கொதிவிட்டு இறக்கி வைத்துக் கொண்டு குடிக்கவும்.
பயன்கள்
- இந்தக் கீரை சூப்பை தொடர்ந்து குடித்து வந்தால், காம உணர்வை அதிகப்படுத்தி இனிய தாம்பத்தியம் நடைபெற உறுதுணையாக இருக்கும்.
- படுக்கப் போகும் முன் வெற்றிலை (2), மிளகு(2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து தினமும் படுக்கப் போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.
குறிப்பு
அனைத்து காய்களையும் , கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும்.
பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.
கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர் மற்றும் காய்கறி சிகிச்சையாளர்.
Cell : 96557 58609, 73737 10080
Covaibala15@gmail.com
(Visited 100151 times, 31 visits today)