
உத்தரமேரூர் வட்டம், திருப்புலிவனத்தில் முத்து மாரியம்மன் கோயில் 3-ஆம் ஆண்டு திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விழாவையொட்டி, அம்மனுக்கு கூழ்வார்த்தல், மகா அபிஷேகம், பால்குட ஊர்வலம், அன்னதானம், தீ மிதி திருவிழா, குளக்கரையில் இருந்து நீர் திரட்டுதல் மற்றும் சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீ முத்து மாரியம்மன் திருவீதி உலா நடைபெற்றது.
இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டனர். விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் எஸ்.அழகரசன், எம்.மணி, ஜி.வீரராகவன், எம்.கோதண்டன் ஆகியோர் செய்திருந்தனர்.
(Visited 10047 times, 31 visits today)