
பாதாம் பிசின் பாயாசம்
தேவையான பொருட்கள்
பாதாம் பிசின் – 100 கிராம்
முந்திரிப் பருப்பு – 25 கிராம்
சாரப்பருப்பு – 25 கிராம்
பாதாம் பருப்பு – 25 கிராம்
சாலாமிசிரி – 25 கிராம்
ஏலக்காய் – 10 கிராம்
நாட்டுச் சர்க்கரை – 100 கிராம்
செய்முறை : முதலில் பாதாம் பிசினை சுத்தம் செய்து அரை லிட்டர் தண்ணீர் ஊற்றி முதல் நாள் இரவிலேயே ஊற வைக்கவும். பின்பு காலையில் பாதாம் பிசின் உள்ள நீரை கீழே ஊற்றி விட்டு பிசினில் சிறிது சுடுதண்ணீர் விட்டு நன்கு கலக்கி அடுப்பில் வைக்கவும்.
மற்ற பொருட்கள் அனைத்தையும் சுத்தப்படுத்தி தூள் செய்து கொண்டு பிசினுடன் சேர்த்து கலக்கவும். பின்பு அதனுடன் நாட்டுச் சர்க்கரை சேர்த்து நன்றாக கிளறி பதத்தில் இறக்கி வைத்துக் கொள்ளவும்.
பயன்கள்
- இந்த பாதாம் பிசின் பாயாசம் குடல் புண்ணைக் குணப்படுத்துவதில் சிறந்தது .
- உடல் மெலிந்தவர்களுக்கு இந்த பாயசத்தை தொடர்ந்து 21 நாட்கள் சாப்பிட்டு வந்தால் தேவையான உடல் எடையை பெறலாம் .
- வெள்ளைப்படுதல் குறைபாடு உள்ள பெண்கள் கண்டிப்பாக இதனை சாப்பிட வேண்டும் .
- இது வெட்டைச்சூடு குணமாக்கும் அற்புதமான இயற்கை உணவு இந்த பாதாம் பிசின் பாயாசம்.
தினமும் இரவு படுக்கப் போகும் முன் வெற்றிலை (2), மிளகு (2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.
குறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.
கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala15@gmail.com