கொள்ளு ரசம்
தேவையான பொருட்கள்
கொள்ளு – 100 கிராம்
மிளகு – 10 கிராம்
பூண்டு- 10 பல்
சீரகம் – அரை ஸ்பூன்
இஞ்சி – 10 கிராம்
மல்லி இலை – ஒரு கைப்பிடி
உப்பு மஞ்சள் – தேவையான அளவு எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை : முதலில் கொள்ளை சுத்தப்படுத்தி ஒரு லிட்டர் தண்ணீரிலிட்டு கொதிக்க வைத்து பாதியாகச் சுண்டச் செய்து வடிகட்டிக் கொள்ளவும். இதனுடன் புளியை சேர்த்து கரைத்து அதிலுள்ள திப்பியை நீக்கிக் கொள்ளவும். மிளகு, பூண்டு, சீரகம், இஞ்சி, மிளகு, மல்லி இலை ஆகியவற்றை ஒன்றிரண்டாக அரைத்து எண்ணெய் விட்டு வதக்கி அதனுடன் கொள்ளு புளி கரைசலை சேர்த்து சூடு செய்யவும். நுரை வரும் சமயத்தில் இறக்கி வைத்து விட வேண்டும்.
பயன்கள் : இந்த ரசம் உடம்பில் உள்ள தேவையற்ற சதைகளை குறைக்கவும், பிரசவத்திற்கு பின்பு உண்டாகும் தொப்பையை கரைத்து எப்பொழுதும் இளமையாக இருக்க உதவும் ரசம் இந்த கொள்ளு ரசம் .இதனை தினமும் உணவில் சேர்த்து அல்லது தயார் செய்து வைத்துக் கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக நாள் முழுவதும் குடித்து வந்தால் மேற்கூறிய பலனை பெறலாம்
தினமும் இரவு படுக்கப் போகும் முன் வெற்றிலை (2), மிளகு (2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.
குறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.
கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala15@gmail.com