
சத்துக்கள் : வைட்டமின் B, C, கால்சியம், பொட்டாசியம், இரும்புச் சத்து, பாஸ்பரஸ் மற்றும் நார்ச்சத்து
தீர்வு : வெண்பூசணிக்காய் (250 கிராம் தோல், விதையுடன்), எலுமிச்சம் பழம் (1 தோலோடு), புதினா (சிறிதளவு) அதனுடன் வெற்றிலை (2), கொத்தமல்லி, மிளகு (2), தக்காளி சிறியது (1) இவை அனைத்தையும் மிக்ஸியில் போட்டு தண்ணீர் அல்லது மோர் ஊற்றி நன்றாக அரைத்து ஜூஸாக்கி வடிகட்டி வைத்துக் கொண்டு காலையில் இருந்து மதியம் வரை கொஞ்சம் கொஞ்சமாக குடித்து வரவும். தீர்ந்தவுடன் மறுபடியும் ஜூஸாக்கி குடிக்கலாம் தொடர்ந்து குறைந்தபட்சம் 21 நாட்களாகவது குடித்து வரவும். (தேவைப்பட்டால் சிறிதளவு உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்துக் கொள்ளவும்.)
மாதுளம் பூவை இடித்து சாறு பிழிந்து, அதை காய்ச்சி வடிகட்டி, அதனுடன் தேன் கலந்து உட்கொண்டு வந்தால் தொண்டைப்புண் மற்றும் தொண்டை வலி குணமாகும்.
வெற்றிலை (2), மிளகு (2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து தினமும் படுக்கப் போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.
குறிப்பு : பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வரமிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.
கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala15@gmail.com