உங்கள் பற்களை பளிச்சென்று பராமரிக்க 15 பயனுள்ள டிப்ஸ்!




smile

 

  1. பற்களை ஆரோக்கியமான பராமரிக்க, சரியான நேரத்தில் உணவு உட்கொள்ள வேண்டும்.
  2. அதிகமான சர்க்கரை மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளான இனிப்புகள், குளிர்பானங்களைத் தவிர்க்கவும்.
  3. கால்ஷியம் மற்றும் வைட்டமின் மிகுதியாக உள்ள வெண்ணெய் கொய்யா, வாழ்கைப்பழம், பால் போன்றவற்றை உட்கொள்ள வேண்டும்.
  4. ஆரோக்கியமான ஈறுகளைப் பெற வைட்டமின் சி அதிகமுள்ள பழங்களை தினமும் உட்கொள்ள வேண்டும்.
  5. சீராக பற்களை இரண்டு வேளை சுத்தம் செய்தாலே பற்கள் ஆரோக்கியமாக இருக்கும். அதனுடன் நாக்கை நன்றாக சுத்தம் செய்ய வேண்டும்.
  6. பற்களை சுத்தம் செய்வதற்கு சரியான வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். இல்லையெனில் தேய்மானம் ஏற்படும்.
  7. காபி மற்றும் மதுபானங்கள் அதிகளவு உட்கொண்டால் உடலில் உள்ள கால்ஷியம் அளவு குறைந்து பற்கள் மற்றும் ஈறுகளைச் சிதைத்து விடும்.
  8. ஈறுகளில் ரத்தக் கசிவு மற்றும் பற்களில் வலி ஏற்பட்டால், உடனே பல் மருத்துவரை அணுகவும்.
  9. பல் மருத்துவர்கள் பரிந்துரை செய்யும் பற்பசை மற்றும் ப்ரஷ்ஷை பயன்படுத்த வேண்டும்.
  10. பற்களை உணவு உட்கொள்ள மட்டும் பயன்படுத்த வேண்டும். உணவு அல்லாத பிற பொருட்களைக் கடித்தால் பற்கள் உடைய நேரிடும்.
  11. மருத்துவரீதியாக உங்களுக்கு ஏதேனும் குறைப்பாடுகள் இருந்தால் பல் மருத்துவரிடம் தெரிவிக்கவும்.
  12. புகையிலையைத் தவிர்த்தால் வாய் புற்றுநோயைத் தவிர்க்கலாம்.
  13. பற்குச்சிகளை பயன்படுத்தினால் பற்கள் மற்றும் ஈறுகள் பாதிக்கப்படும்.
  14. இரவு நேரத்தில் பற்களைக் கடிக்கும் பழக்கமோ, குறட்டை விடும் பழக்கமோ இருந்தால் அதற்கான தீர்வினை உடனடியாகத் தெரிந்து கொள்ளுங்கள். அருகிலுள்ள பல் மருத்துவரை அணுகவும்.
  15. ஆறு மாதங்களுக்கு ஒரு முறை பல் மருத்துவரை அணுகி பற்களை பரிசோதனை செய்தால் பல் சொத்தை மற்றும் ஈறுகளில் ஏற்படும் சிதைவுகளைக் கட்டுப்படுத்தலாம்.

– டாக்டர் அனுலேகா / டாக்டர் ஜனனி / டாக்டர் சிவா 
மொபைல் எண் – 9500100008







நன்றி Hindu

(Visited 10055 times, 31 visits today)

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × four =