உடலுக்குத் தேவையான தண்ணீரை நாம் குடிக்க வேண்டும். போதுமான தண்ணீர் குடிக்காவிட்டால், பல உடல் நடப் பிரச்னைகள் தலைதூக்கும்.
மனித மூளையில் 80 சதவிகிதம் நீர் இருக்கிறது. போதுமான தண்ணீர் குடிக்காவிட்டால், எதிலும் கவனம் செலுத்த முடியாது. நினைவாற்றல் குறைந்துவிடும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
போதுமான தண்ணீர் உடலில் இல்லாவிட்டால் கை, கால்களில், மூட்டுகளில் வீக்கம் ஏற்படும்.
உடலுக்குத் தேவையான நீரைக் குடிக்காவிட்டால், குமட்டல், வயிற்றுவலி போன்ற பிரச்னைகள் ஏற்படும்.
இதயம் சரியாக, முறையாக துடிக்க வேண்டும் என்றால் போதுமான நீர் அருந்துவது அவசியம்.
உடலின் மூட்டுகள், சதைகள் எளிதாக இயங்கத் தேவையான எண்ணெய்ப் பசை தேவையான அளவு தண்ணீர் குடிப்பதால் கிடைக்கிறதாம்.
– என்.ஜே
(Visited 10019 times, 31 visits today)