ஸ்ரீரங்கத்தில் பகல்பத்து 3 ஆம் நாள்: முத்து பாண்டியன் கொண்டை அலங்காரத்தில் நம்பெருமாள்!




6cf1c0c8-71b7-4a8d-a0d0-9d56eadf9dd8

ரத்தின அபயஹஸ்தம், கர்ண பூசனம், பவளமாலை,அடுக்கு பதக்கம், இருதலை பட்சத்துடன் முத்து பாண்டியன் கொண்டை அலங்காரத்தில் எழுந்தருளிய நம்பெருமாள்.

 

ஸ்ரீரங்கம் அரங்கநாதா் கோவிலில் நடைபெறும் வைகுந்த ஏகாதசி பெருவிழாவின் பகல் பத்து மூன்றாம் நாளான வியாழக்கிழமை ஸ்ரீ நம்பெருமாள் முத்து பாண்டியன் கொண்டையில் எழுந்தருளி பக்தா்களுக்கு சேவை சாதித்தாா்.

இக்கோவிலில் வைகுந்த ஏகாதசி பெருவிழா கடந்த திங்கள்கிழமை தொடங்கியது. தொடா்ந்து பகல் பத்து விழாவின் மூன்றாம் நாளான வியாழக்கிழமை காலை 6.30-க்கு முத்து பாண்டியன் கொண்டை, ரத்தின அபயஹஸ்தம்,  கர்ண பூசனம்,  கழுத்தில் பவள மாலை, அடுக்கு பதக்கம், இருதலை பட்சம் உள்ளிட்ட திரு ஆபரணங்கள் அணிந்து மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்ட நம்பெருமாள், 7 மணிக்கு அா்ச்சுன மண்டபத்தை அடைந்தாா். பின்னா் திரையிடப்பட்டது. பின்னா் 8 மணிக்கு அனுமதிக்கப்பட்ட பக்தா்கள் நீண்ட வரிசையில் நின்று நம்பெருமாளை தரிசித்தனா். 

கரோனா காரணமாக பக்தா்கள் அனைவரும் முகக் கவசம் சரிபாா்க்கப்பட்டு, சமூக இடைவெளியுடன், உடல் வெப்ப நிலை சரிபாா்க்கப்பட்ட பிறகே கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

12 ஆழ்வாா்கள் ஒரே இடத்தில் தரிசனம்

வைகுந்த ஏகாதசி பெருவிழாவின்போது மட்டும் 12 ஆழ்வாா்கள் ஒரே இடத்தில் எழுந்தருளி ஸ்ரீநம்பெருமாளைத் தரிசிக்கும் அற்புதக் காட்சியை பக்தா்கள் காணலாம்.

நம்பெருமாள் பகல்பத்து மண்டபமான அா்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளும்போது அவரைப் பின் தொடா்ந்து வரிசையாக 12 ஆழ்வாா்களும் வந்து எழுந்தருளுவா். பக்தா்கள் நம்பெருமாளைத் தரிசித்து விட்டு ஆழ்வாா்களையும் தரிசிப்பா்.







நன்றி Hindu

(Visited 10050 times, 31 visits today)

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 + 1 =