உங்கள் இதயத்தை இளமையாக வைத்திருக்க விரும்புகிறீர்களா? இதோ சிறந்த வழி!




 

ஒரு நாளைக்கு ஏழு மணி நேரம் தூங்குவது உங்கள் இதயத்தின் வயதைக் குறைத்து இளமையுடன் வைத்திருக்கும், மேலும் இதய நோய்க்கான ஆபத்துக்களையும் குறைத்துவிடும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். எனவே தினமும் இரவில் 7 மணி முதல் 8 மணி நேரம் வரை கட்டாயம் தூங்க வேண்டும்.

ஏழு மணி நேரத்திற்கும் குறைவான அல்லது அதிகமான தூக்கம் ஒருவருக்கு இருந்தால் அது அவர்களின் இதயத்தில் கார்டியோ வாஸ்குலர் பிரச்னைகளை விளைவிக்கலாம். குறைவான தூக்கம் ஒருவரின் இதயத்தின் வயதை அதிகரித்துவிடும். எனவே இரவில் தூக்கம் நன்றாக இருந்தால்தான் கார்டியோ வாஸ்குலர் பிரச்னைகளைத் தவிர்க்க முடியும் என்கிறது அந்த ஆய்வு.

ஜார்ஜியாவில் உள்ள எமரி பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆய்வாளர் ஜூலியா தர்மர் கூறுகையில், ‘இந்த ஆய்வு முடிவுகள் முக்கியமானவை. காரணம் ஒருவரின் தூக்கத்தின் அளவுகோலின் மூலம் கார்டியோ வாஸ்குலர்  நோய் ஏற்படுவதற்குரிய அபாயத்தை கண்டுபிடிக்கும் ஒரு அளவீட்டு முறையாக இது விளங்குகிறது’ என்றார்.

ஸ்லீப் எனும் பத்திரிகையில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வில், 30-74 வயதுக்குட்பட்ட 12,775 வயதினரிடமிருந்து தரவுகள் சேகரிக்கப்பட்டுள்ளது. தாங்கள் எவ்வளவு நேரம் தூங்கினோம் என்று அவர்களே கூறியதன் அடிப்படையில், இந்த முடிவுகள் ஐந்து பிரிவில் முதலில் வகைமைப்படுத்தப்பட்டது. 5 மணி நேரம் அல்லது அதற்கும் குறைவாகவும், 6, 7, 8, 9 அல்லது அதற்கும் மேற்பட்ட மணி நேரம் தூங்கியவர்கள் என இவ்வாறு ஐந்து வகைகளாக தூக்க நேரங்கள் வரையறுக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு நபரின் இதய வயதினையும் கணக்கிட, sex-specific Framingham heart age algorithm வழிமுறையைப் பயன்படுத்தி கணக்கிட்டனர் குழுவினர். இவ்வகையில் தூக்க காலத்திற்கும் இதய வயதுக்கும் இடையேயான தொடர்பை ஆய்வு செய்ய பலவகைப்பட்ட லீனியர் அல்லது லாஜிஸ்டிக் ரிக்ரஷனையும் பயன்படுத்தி முடிவுகளைக் கண்டறிந்தனர்.

இந்த ஆய்வின் முடிவில், 24 மணிநேரத்தில் 7 மணி நேரத்துக்கு குறைவான தூக்கத்தை உடையவர்கள் மிகவும் குறைவான இதய வயதைக் கொண்டிருந்தனர் என்பது உறுதியானது.

அமெரிக்காவைச் சேர்ந்த கொண்ட National Sleep Foundation எனும் அமைப்பின் கருத்துப்படி, உடல் எடை, புகைபிடித்தல் மற்றும் உடற்பயிற்சி பழக்கங்கள் ஆகியவற்றையெல்லாம் மீறி, ஒருவருக்கு தூக்கம் சரியில்லாமல் போனால் கார்டியோ வாஸ்குலர் அபாயம் மற்றும் கரோனரி இதயப் பிரச்னைகள் ஏற்படுகிறது என்று கூறுகிறது.

குறைந்த அளவிலான தூக்கம் ஆரோக்கியமான உடலைக் கூட சிதைத்துவிடும். குளுக்கோஸ், வளர்சிதைமாற்றம், ரத்த அழுத்தம் போன்றவற்றில் பாதிப்பினை ஏற்படுத்தும். மேலும் உயிரியல் செயல்முறைகளில் மாற்றங்கள் ஏற்படுத்த வல்லது தூக்கமின்மை. மாறாக நன்றாகத் தூங்கினால் இப்பிரச்னைகளை எதுவும் நெருங்காமல் தவிர்த்துவிடலாம்.







நன்றி Hindu

(Visited 1003 times, 31 visits today)

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 + 1 =