ஆரோக்யமாக வாழ்வதற்கான ‘தண்ணீர் மந்திரம்’ உங்களுக்குத் தெரியுமா?




000_water_manthra

 

வாழ்க்கை முழுவதற்குமான ஒரே ஒரு எளிமையான ஆரோக்ய மந்திரம் எதுவென்றால் அது இதுவொன்றாக மட்டுமே இருக்க முடியும். இதைச் சொல்வது நான் அல்ல! ஒரு திறமை மிகுந்த மருத்துவர். அவர் சொல்வதை ஒருமுறை உங்களது வாழ்வில் பின்பற்றிப் பார்த்தீர்கள் என்றால் பிறகு நீங்களும் ஒப்புக் கொள்வீர்கள் அது நிஜம் தான் என்று.

மனித உடலில் 70 % தண்ணீரால் ஆக்கப்பட்டது. மனிதர்கள் தங்களது உடலைக் கச்சிதமாகவும், கட்டுக்கோப்பாகவும் வைத்துக் கொள்ள விரும்பினால் தங்களது உடலில் அதிகளவில் ஆதிக்கம் செலுத்தும் நீர்சக்தியைப் பற்றித் தெளிவாக அறிந்து கொள்ள முயலவேண்டும். மனிதனின் ஆரோக்ய வாழ்வில் நீரின் முக்கியமான பங்கு என்ன என்பதை அவர்கள் உணர்ந்திருக்க வேண்டியது அவசியம்.

அதற்கு முதற்படியாக காலையில் நீங்கள் எப்போது எழுந்தாலும் சரி, எழுந்ததுமே 1 லிட்டர் தண்ணீரை சிறுகச் சிறுக தொடர்ந்து அருந்தப் பழக வேண்டும். அந்த நேரத்தில் நீங்கள் பல் துலக்கா விட்டாலும் பரவாயில்லை. உங்களது வாயில் உள்ள காரத்தன்மை கொண்ட மினரல்கள் அனைத்தும் இந்தத் தண்ணீர் அருந்தும் பழக்கத்தால் கரைந்து நீர்த்துப் போக வேண்டும் என்பதே இந்த முயற்சியின் நோக்கம். வாயிலிருப்பவை மட்டுமல்ல இப்படித் தண்ணீர் அருந்தும் பழக்கத்தால் வயிற்றுள் எஞ்சியிருக்கும் ஒரு சில காரத்தன்மை கொண்ட மினரல்களும் கூட நீர்த்துப் போகும் என்பதால் இதை ஒவ்வொரு நாளும் காலையில் தூங்கி எழுந்ததும் செய்தாக வேண்டும். (காபி, டீ, ஹெல்த் ட்ரிங்குகள் அருந்துவதைத் தவிர்த்து விட்டு முதலில் 1 லிட்டர் தண்ணீர் அருந்தும் பழக்கத்தை நாம் தான் வலியப் பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்.) 

அது மட்டுமல்ல, காலை உணவு, மதிய உணவு அல்லது இரவு உணவு என எந்த நேர உணவாக இருக்கட்டும் ஒவ்வொரு முறையும் நீங்கள் உணவுண்டு முடித்து 40 நிமிடங்களுக்குப் பிறகு 1 டம்ளர் வெந்நீர் அருந்த மறக்கக் கூடாது. இன்று சர்வதேச அளவில் நடைபெற்று வரும் பலப்பல ஆரோக்யக் கருத்தரங்கங்களில் மீண்டும் மீண்டும் சொல்லப்படும் அல்லது வலியுறுத்தப்படும் விஷயங்களில் ஒன்று இது. வெந்நீருக்கு நமது உடலில் படியக் கூடிய கொழுப்பையும் கரைக்கக் கூடிய தன்மை உண்டாம். கொழுப்புகள் சென்று படியக் கூடிய அடிப்போஸ் திசுக்களைக் கரைக்கும் வல்லமை கொண்டது வெந்நீர் என்கிறார்கள் மருத்துவர்கள். அது மட்டுமல்ல, குடலில் படியக் கூடிய கொழுப்பையும் கரைக்கும் திறன் கொண்டது வெந்நீர். 

மேலே சொல்லப்பட்ட எல்லாவற்றையும் விட மிக முக்கியமான மற்றொரு விஷயம். எப்போதும் நீர் அருந்தும் போது நின்று கொண்டு அருந்தக் கூடாது. உட்கார்ந்து கொண்டே அருந்த வேண்டும் என்பது தான். ஏனெனில், இந்தியாவின் பாரம்பரிய மருத்துவங்களில் ஒன்றான ஆயுர்வேதம் சொல்லும் குறிப்புகளின் படி நின்று கொண்டு நீர் அருந்தினால் வாதத்தினால் பாதிப்பு உண்டாகும் என்பதால் எப்போது நீர் அருந்துவதாக இருந்தாலும் சரி உட்கார்ந்து கொண்டே அருந்த வேண்டும். இல்லாவிட்டால் கை, கால் இணைப்புகளில் வலி ஏற்பட்டு வாத நோயால் துன்பப்படும் அவதி வந்து சேரும்.

அதோடு எப்போதும் மனிதன் அருந்துவதற்கு உகந்த நீர் என்றால் அது வெந்நீரே! காய்ச்சி வடிகட்டாது, அப்படியே அருந்தும் தண்ணீர், அதற்கே உரித்தான வகையில் தனது இயல்பான குனங்களைக் கொண்டிருக்கும். அவற்றில் கலந்துள்ள கண்ணுக்குத் தெரியாத நுண்கிருமிகள் தொற்று நோயை உண்டாக்கக் கூடியவை. எனவே மேற்சொன்ன வழிமுறைகளைக் கையாண்டு ஆரோக்யமாக வாழ்வதற்கான முதலடியை எடுத்து வையுங்கள்.







நன்றி Hindu

(Visited 10021 times, 31 visits today)

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × two =