'வாய், முகத்தாடை சீரமைப்பு அறுவை சிகிச்சை மருத்துவர்கள் அதிகரிக்க வேண்டும்'




vijayasankar

தாகூர் பல் மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற பயிலரங்கில் வெற்றி பெற்ற மாணவிக்குச் சான்றிதழ் வழங்குகிறார் சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனை மருத்துவர் ஜெ. விஜயசங்கர். 

வாய், முகத்தாடை சீரமைப்பு அறுவை சிகிச்சை மருத்துவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும் என்று மறைந்த திரைப்பட நடிகர் ஜெய்சங்கரின் மகனும் சங்கர நேத்ராலயா கண் மருத்துவருமான டாக்டர் ஜெ. விஜயசங்கர் கூறினார்.
ரத்னமங்கலம் தாகூர் பல் மருத்துவக் கல்லூரி வாய், முகத் தாடை சீரமைப்புத் துறை சார்பில் வியாழக்கிழமை நடைபெற்ற பயிலரங்கை தொடங்கி வைத்து அவர் பேசியது: தற்போது மருத்துவக் கல்வி பயிலும் மாணவர்கள் தங்களது செய்முறை பயிற்சித் திறனை நேரடியாகவும் காணொலிக் காட்சி மூலமாகவும் மேம்படுத்திக் கொள்ளும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. மாணவர்கள் குழு மனப்பான்மையுடன் ஒருங்கிணைந்து தங்களது மருத்துவப் பயிற்சி அறிவாற்றலை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.
வாய்ப் புற்று, சாலை விபத்துகளில் சிக்கி வாய், தாடை, முகம் பாதிப்புக்குள்ளாகும் நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்குக் காரணம் அதிகரித்து வரும் சாலை விபத்துகளே. இந்நிலையில், அவர்கள் மறுவாழ்வு பெறுவதற்கு வாய், தாடை சீரமைப்பு அறுவை சிகிச்சை மருத்துவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்வது அவசியமாகிறது என்றார் விஜயசங்கர். பயிலரங்கில் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரள பல் மருத்துவக் கல்லூரிகளைச் சேர்ந்த 460 மாணவர்கள் பங்கேற்றனர். பயிலரங்கில் நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ரொக்கப் பரிசும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
தமிழ்நாடு முகத் தாடை அறுவை சிகிச்சை மருத்துவர்கள் சங்கத் தலைவர் டாக்டர் நல்லாலன், செயலர் எஸ்.ராம்குமார், தாகூர் பல் மருத்துவக் கல்லூரி முதல்வர் சித்ரா ஆர்.சந்திரன், துணை முதல்வர்கள் எஸ்.பாலகோபால், சி.ஜெ.வெங்கடகிருஷ்ணன் துறைத் தலைவர் எஸ்.ஜிம்சன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 







நன்றி Hindu

(Visited 10020 times, 31 visits today)

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve − four =