
நீங்கள் நாய் பிரியரா அப்படியென்றால் இதோ நீங்கள் நாய்களை மேலும் விரும்புவதற்கு ஒரு காரணம், சமீபத்தில் சுவீடனில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் நாய் வளர்ப்பவர்களின் ஆயுள் அதிகரிக்கும் எனத் தெரிய வந்துள்ளது.
செல்லப்பிராணி வளர்ப்பவர்களுக்கு இதய நோய் வருவதற்கான அபாயம் குறைவதாக அந்த ஆய்வில் கூறப்படுகிறது. சுவீடன் நாட்டைச் சேர்ந்த 40 முதல் 80 வயதினர்கள் சுமார் 3.4 மில்லியன் மக்கள் இந்த ஆய்வில் கணக்கிடப்பட்டுள்ளனர். நாய் வளர்ப்பவர்களின் ஆயுள் காலம் 20% உயர்ந்திருப்பதைக் கண்டு விஞ்ஞானிகள் வியந்துள்ளனர்.
உப்ஸ்பலா பல்கலைக்கழகத்தின் மூத்த தொற்று நோய் ஆசிரியரான டோவ் ஃபீல் கூறுகையில் “இந்த ஆய்வின் அடிப்படையில் நாய்களின் வகைகளுக்கு ஏற்ப உரிமையாளர்களின் ஆயுள் காலம் வேறுபடுகிறது, அதிலும் குறிப்பாக சில நாய் இனங்களை வைத்திருப்பது வாழ்நாட்களைப் பல நாட்கள் அதிகரிக்கிறது.”
நீங்கள் நாய் ஒன்று வைத்திருக்கிறீர்கள் என்றால் அதைக் காலை மாலை என இரு வேலையும் நடைப் பயணம் கூட்டிச் செல்வது உங்களுக்கு ஒரு நல்ல உடற் பயிற்சி, வேலை செய்யும் இடத்தில் ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால் அந்த மன அழுத்தத்துடன் வீட்டிற்கு வரும் உங்களுடன் அது குதித்து விளையாடும் போது அந்தக் கவலையெல்லாம் அப்படியே குறைந்துவிடும். சரியான உடற்பயிற்சி மற்றும் கவலைகள் இல்லாத வாழ்க்கை இது போதாதா நீண்ட நாட்கள் உயிர் வாழ?