தொப்பையைக் குறைக்க முடியாமல் கஷ்டப்படுகிறீர்களா? இதோ 7 நாட்களில் தொப்பை குறைய 5 எளிய வழிகள்!




 

‘நாம் ஓடி ஓடி உழைப்பது எதற்கு எல்லாம் இந்த வயித்துக்கு தானே?’ வாய்க்கு ருசியாக முதலில் நன்றாகச் சாப்பிட்டுவிட்டு சற்று ஓய்வெடுக்க அமரும் போது தான் நம் கண்ணில் படும் வளர்ந்து நிற்கும் தொப்பை. அதற்காகச் சாப்பிடுவதை நிறுத்தி பட்டினி கிடக்கக் கூடாது, அதனால் தொப்பை குறையப் போவதும் கிடையாது. தொப்பையை வைத்து பலரும் படாத பாடு படுகிறோம், பிடித்த ஆடையைப் போட முடியாது, குனிந்து நிமிர்ந்து வேலை செய்ய முடியாது மற்றும் ஆரோக்கிய குறைபாடுகளும் ஏற்படும். 

இந்தத் தொப்பையை குறைக்கப் பல வழிகளில் நீங்கள் முயற்சித்து இருப்பீர்கள், ஆனால் பலன் எதுவும் கிடைத்திருக்காது. கவலையை விடுங்கள் உங்களது தொப்பை குறைந்து தட்டையான வயிற்றை ஒரே வாரத்தில் பெற இந்த 5 விஷயங்களைச் செய்தால் போதும்.

1. நிறையத் தண்ணீர் குடியுங்கள்: 

தட்டையான வயிற்றைப் பெற வேண்டும் என்று நீங்கள் முடிவு செய்துவிட்டாலே அதற்கு முதலில் நீங்கள் செய்ய வேண்டியது நிறையத் தண்ணீர் குடிப்பது தான். பொதுவாகவே நிறையத் தண்ணீர் குடிப்பது உடலுக்கு நன்மை தரக்கூடிய ஒன்று, அதிலும் குறிப்பாக உடலில் நீர் சத்து அதிகமாக இருந்தால் அது உடலில் இருக்கும் தேவையற்ற கொழுப்புகளைக் கரைக்கும், இதனால் தொப்பையின் அளவும் குறையும். சில சமயங்களில் உடலுக்குத் தேவையான நீர் பற்றாக்குறையே வயிறு வீக்கத்தை ஏற்படுத்துகிறது. சுவைக்கு வேண்டும் என்றால் தண்ணீரில் எலுமிச்சை, ஆரெஞ்சு, வெள்ளரிக் காய்களை நருக்கி பொட்டு குடிக்கலாம்.

2. கிரீன் டீ:

இது நம்மில் பலருக்கும் தெரிந்த ஒரு வழி தான், இன்னும் சொல்லப் போனால் நம்மில் பலர் இதை முயற்சி செய்துவிட்டு இதைக் குடிப்பதற்கு தொப்பையுடனே வாழ்ந்து விடலாம் என்ற முடிவை எடுத்திருப்போம். ஆனால் உண்மையில் கிரீன் டீ உடலுக்கு அவ்வளவு நன்மை தரக்கூடிய ஒன்றாகும். இதில் இருக்கும் ஆண்டிஆக்ஸிடண்ட் தொப்பையைக் குறைத்து உடலின் மெட்டபாலிஸத்தை அதிகரிக்கும். ஆகையால் தினமும் ஒரு கப் கிரீன் டீ கட்டாயம் குடிக்க வேண்டும்.

3. நார் சத்து நிறைந்த உணவுகளை கம்மியாக உண்ணுங்கள்:

நார் சத்து உடலுக்குத் தேவையான ஒன்று என்றாலும் அதை அதிகமான சாப்பிடுவது வயிற்றை வீக்கம் அடையைச் செய்யும். உதாரணத்திற்கு பீன்ஸ், கேரட், தேங்காய், காலிஃப்லவர் போன்றவை நார் சத்து அதிகமாக இருக்கும் உணவுப் பொருட்கள், அதற்காக முற்றிலும் அவற்றைத் தவிர்த்து விடாதீர்கள், நார் சத்தும் உடலுக்கு மிகவும் முக்கியமான ஒன்று. அதற்குப் பதிலாக பொட்டாசியம் சத்து அதிகம் இருக்கும் வாழைப்பழம், பப்பாளி, மாம்பழம் மற்றும் தயிர் ஆகியவற்றைச் சாப்பிடுவது மெட்டபாலிஸம் அளவைச் சரி செய்யும்.

4. ஏரோபிக் உடற்பயிற்சி:

ஏரொபிக்கை போல் வேறு எந்த உடற்பயிற்சியும் தொப்பையை வேகமாகக் குறைக்காது. இது பெரும்பாலும் 67% வயிற்று கொழுப்பை கரைத்துவிடும். ஒரு வாரத்திற்குக் குறைந்தது 150 நிமிடங்கள் இதைச் செய்தால் போதும், அதாவது நீச்சல் அடிப்பது, நடைப்பயிற்சி செய்வது இல்லையேல் வேகமாக ஓடுவது போன்றவற்றை முயற்சி செய்யவும்.

5. சர்க்கரை சேர்த்து கொள்வதைத் தவிர்க்கவும்: 

சர்க்கரை போட்டு டீ, காபி, ஜூஸ் குடிப்பது, சர்க்கரை அதிகமாக இருக்கும் இனிப்பு போன்றவற்றை அதிகம் சாப்பிடுவது என்பது தேவையற்ற கொழுப்பை நமது வயிற்றுப் பகுதியில் தேங்கச் செய்யும். அதிலும் குறிப்பாக சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை உடலுக்கு மிகவும் தீங்கு விளைவிக்கும் ஒன்றாகத்தான் இருக்கும். 

இந்த 5 வழிகளைத் தவறாமல் பின்பற்றினால் நிச்சயம் ஒரே வாரத்தில் உங்களது தொப்பை அளவு குறைந்திருக்கும். மருத்துவர்களிடம் சென்று அதற்காகப் பல மாத்திரை மருந்துகளைச் சாப்பிட்டு அதன் பின் அதனால் வரும் பக்க விளைவுகளுடன் அவதிப் படுவதை விட இதைப் போன்ற சிறிய உணவு முறை மாற்றம் மற்றும் எளிய உடற்பயிற்சியினால் எந்தவொரு பாதிப்பும் இல்லாமல் தொப்பையை குறைத்து விடலாம்.







நன்றி Hindu

(Visited 10084 times, 31 visits today)

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven + 5 =