இந்த 4 உணவுப் பொருட்களையும் கழுவாமல் தான் சமைக்க வேண்டும்! ஏன் தெரியுமா?




maxresdefault

 

உணவுப் பொருட்களை பயன்படுத்துவதற்கு முன்பு கழுவி பயன்படுத்துவதே ஆரோக்கியமான பழக்கம் என்றாலும் அதில் சில விதிவிலக்குகள் இருக்கின்றன. சமைப்பதற்கு முன்பு இந்த 4 பொருட்களையும் மறந்து கூட தண்ணீரில் கழுவி விடாதீர்கள். ஏன் என்று தானே யோசிக்கிறீர்கள் வாருங்கள் பார்ப்போம்.

1. முட்டை:

நாம் கடையில் வாங்கும் அனைத்து முட்டைகளிலும் அதைப் பாக்டீரியா கிருமிகளில் இருந்து பாதுகாக்க ஒரு விசேஷ ரசாயனம் (உடலுக்குத் தீங்கு விளைவிக்காத) அதன் மேற் பரப்பில் தடவப் பட்டிருக்கும். ஆனால் நீங்கள் முட்டையைத் தண்ணீரில் கழுவி விட்டால் இந்த பாதுகாப்பு அடுக்கு தண்ணீரில் கரைந்து, பாக்டீரியா வளர்வதோடு சமைக்கும் போது பிற உணவுப் பொருட்களிலும் அது பரவும் அபாயம் உள்ளது.

2. காளான்:

காளான் தண்ணீரை மிக விரைவாக உறியும் தன்மை உடையது, ஆகையால் நீங்கள் அதைக் கழுவும் போது வேகமாகத் தண்ணீரை தன்னுள் இழுத்துக் கொள்ளும், இதனால் அதனுள் இருக்கும் வைட்டமின் சத்துக்களை அது இழக்க நேரிடும். ஒருவேலை மண்ணாக இருக்கிறது நிச்சயம் கழுவித்தான் ஆக வேண்டும் என்றால் ஓடும் தண்ணீரில் கழுவுவதை விட சில விநாடிகள் மட்டும் தண்ணீரில் முக்கி எடுப்பது அதன் சத்துக்கள் கரையாமல் இருக்க உதவும்.

3. பாஸ்தா:

பாஸ்தா தயாரிப்பு நிறுவனம் அதன் மேற்பரப்பில் ருசிக்காக சில பொருட்களையும், ஸ்டார்ச் (மாவு) போன்றவற்றையும் சேர்த்திருக்கும். அதனால் தண்ணீரில் பாஸ்தாவை நீங்கள் கழுவினால் இந்தப் பொருட்கள் தண்ணீரில் கரைந்து அதன் சுவையை குறைத்துவிடும்.

4. கறி:

நாம் பலரும் கறியில் உள்ள பாக்டீரியாக்களை நீக்க அதைத் தண்ணீரில் நன்கு அலச வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம், ஆனால் அது மிகவும் தவறு. பாக்டீரியாக்களை  நீக்கக் கறியை குறைந்த சூட்டில் தண்ணீரில் வேக வைப்பதே சிறந்த வழியாகும். மேலும் தண்ணீரில் நீங்கள் கறியை கழுவுவதால் அது மேலும் பாக்டீரியா உற்பத்தியை அதிகரிக்கும் என்பதே உண்மை.

சாப்பிடுவதற்கு முன்பும் சமைப்பதற்கு முன்பும் உணவுப் பொருட்களை கழுவுவது ஒரு நல்ல பழக்கம் என்றாலும் இந்த 4 பொருட்களையும் கழுவாமல் உபயோகிப்பதே சிறந்த மற்றும் ஆரோக்கியமான பழக்கம் ஆகும்.







நன்றி Hindu

(Visited 10021 times, 31 visits today)

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × four =