மத்திய அரசு வேலை :
மத்திய அரசிற்கு உட்பட்ட இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபாரின் டிரேட் ( IIFT ) துறையில் காலியாக உள்ள பேராசிரியர் , உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . இதற்கு தகுதியும் , விருப்பமும் உள்ள வர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம் .
நிர்வாகம் :
இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபாரின் டிரேட் ( IIFT )
மேலாண்மை :
மத்திய அரசு
பணி :
பேராசிரியர் , உதவிப் பேராசிரியர்
கல்வித் தகுதி :
பேராசிரியர் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் பி.எச்டி தேர்ச்சி பெற்று 10 ஆண்டுகள் Assist ant Professor Associate Professor / Professor , and / or research ஆக பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும் . உதவிப் பேராசிரியர் முதுநிலைப் பட்டம் தேர்ச்சி பெற்று 2 ஆண்டுகள் பேராசிரியராக பணியாற்றி இருக்க வேண்டும் . மேலும் , NET , SET , SLET இவற்றில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் .
வயது வரம்பு :
மேற்குறிப்பிட்ட பணியிடத்திற்கு 62 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம் . அரசு விதிமுறைப்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும் .
ஊதியம் :
ரூ .57,700 முதல் ரூ .2,20,200 வரை
விண்ணப்பிக்கும் முறை :
மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும் , விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக http://campus360.iift.ac.in/API_FAC_Reg.asp என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும் .
தேர்வு முறை :
நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர் .