முட்டை சாப்பிட்டால் கண்டிப்பாக பால் அருந்தியே ஆக வேண்டுமா?



0000_eggs_with_milk

சிறப்பான, எளிதான காலை ஆகாரம் என்றாலே சட்டென்று நமக்கு ஞாபகத்துக்கு வருவது முட்டையும், பாலும் தான். முட்டைக்கும், பாலுக்கும் எப்படிப்பட்ட காம்பினேஷன் வொர்க் அவுட் ஆகிறதென்றால் இரண்டுமே புரதச் சத்து நிறைந்த உணவுகள் என்பதால் காலை நேரத்தில் நமது உடலுக்குத் தேவையான செயலூக்கத்தை அவை எளிதாக வழங்கி விடக் கூடியவையாக இருக்கின்றன என்பதோடு இரண்டு முட்டைகளை ஆம்லெட்டாக்கி ஒரு பெரிய கிளாஸ் நிறைய பால் அருந்தினாலே போதும் வயிறு நிறைந்து விட்ட உணர்வு ஏற்பட்டு விடுகிறது. அதனால் தான் அம்மாக்கள் தங்கள் பிள்ளைகளிடம் காலம், காலமாக முட்டை சாப்பிட்டால் கூடவே ஒரு கிளாஸ் பால் அருந்தச் சொல்லி வற்புறுத்துகிறார்கள். ஆனால் முட்டை, பால் சாப்பிடுவதிலும் ஒரு சின்ன வரைமுறை உண்டு.

கண்டிப்பாக முட்டையை ராவாக சாப்பிடக் கூடாது. சமைக்காத முட்டையை சாப்பிடுவதால் சில சமயங்களில் பாக்டீரியா தொற்று ஏற்பட்டு விடலாம். அது மட்டுமல்ல சமைக்காத முட்டையை பாலில் கலந்து அருந்தினால் அது வயிற்று உப்பிசத்தில் கொண்டு போய் நிறுத்தும். சிலர் எப்போது பார்த்தாலும் ’வாயுத் தொல்லையால்’ அவஸ்தைப் பட்டுக் கொண்டு இருப்பார்கள். காரணம் இப்படி வாயு உண்டாக்கக் கூடிய உணவு வகைகளாகத் தேர்ந்தெடுத்து உண்பதால் தான். முட்டையைப் பொறுத்தவரை சமைக்காத முட்டையால் தான் வாயுத்தொல்லை ஏற்படக் கூடுமே தவிர சமைத்த அதாவது அவித்த முட்டையால் எந்த விதமான வாயுத் தொல்லையும் வர வாய்ப்பில்லை என்கின்றன அமெரிக்க ஆய்வுக் கட்டுரைகள்.

ஆகவே முட்டை சாப்பிட்டால் அதாவது அவித்த அல்லது பொரித்த முட்டை சாப்பிட்டால் பால் அருந்தலாம். சமைக்காத முட்டையைச் சாப்பிடுவீர்கள் என்றால் கண்டிப்பாகப் பால் அருந்துவதைத் தவிர்த்து விடலாம். பாடி பில்டர்கள் தான் தங்களது உடலின் கட்டுறுதி குலையாமல் இருக்க வழக்கமாகப் பச்சை முட்டை சாப்பிடுவார்கள். ஆனால் இந்திய புராதன ஆயுர்வேத மருத்துவ சாஸ்திரம் பச்சை முட்டையும், பாலும் கலந்து உண்பது உடல் நலனுக்கு கேடு என்கிறது.

ஆனால் இதுவே சமைத்த முட்டை சாப்பிடுவது என்றால் தாராளமாக அதனுடன் சேர்த்து பாலும் அருந்தலாம் தவறே இல்லை.



நன்றி Hindu

(Visited 10048 times, 31 visits today)

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 − two =