ஸ்புட்னிக் வி செலுத்திக்கொண்டால் டெல்டா வகை கரோனாவிலிருந்தும் பாதுகாப்பு: விஞ்ஞானிகள்




Scientist said sputnik V gives 90 per cent Protection against Delta strain of Covid-19

கோப்புப் படம்

ரஷியாவின் ஸ்புட்னிக் வி உள்பட வைரல் வெக்டர், எம்ஆர்என்ஏ  ஆகிய தடுப்பூசிகள் உருமாறிய டெல்டா வகை கரோனா வைரஸிற்கு எதிராக சிறப்பாக செயல்பட்டு மக்களுக்கு பாதுகாப்பு அளிக்கக்கூடியது என நோவோஸிபிர்ஸ்க் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த செர்ஜே நெட்சோவ் என்ற விஞ்ஞானி கூறியுள்ளார். 

மேலும், ”அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் ஸ்புட்னிக் வி, எம்ஆர்என்ஏ மற்றும் வெக்டர் தடுப்பூசிகள் டெல்டா வகை கரோனா வைரஸிற்கு எதிராக தீவிரமாக செயல்புரியக்கூடியது எனத் தெரியவந்துள்ளது. முந்தைய வகை கரோனாவிற்கு எதிராக 95 சதவிகிதம் வரையும், டெல்டா வகை கரோனா வைரஸிற்கு எதிராக 90 சதவிகிதம் வரையும் பாதுகாப்பு அளிக்கக் கூடியது” என்று அவர் தெரிவித்தார். 

ரஷியாவின் கமலேயா ஆய்வகத்தைச் சேர்ந்த விளாதிமீர் கஷ்சின் (Viladimir Gushchin) என்பவர், ”மேம்படுத்தப்பட்ட ஸ்புட்னிக் வி தடுப்பூசியானது, தீவிர பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய டெல்டா வகை கரோனா வைரஸில் இருந்து கிட்டத்தட்ட 100 சதவிகிதம் வரை பாதுகாப்பு அளிக்கக்கூடியது” என்றார்.

தி லேன்செட் மெடிக்கல் என்ற பத்திரிக்கை வெளியிட்ட ஆய்வுக் கட்டுரையில் ஸ்புட்னிக் வி தடுப்பூசிகள் டெல்டா வகை கரோனா வைரஸிற்கு எதிராக 91.6 சதவிகிதம் வலிமையாக செயல்படக்கூடியது என்று கூறியுள்ளது. இதனிடையே ஆக்ஸ்போர்ட்-ஆஸ்ட்ராஜெனிகா மற்றும் ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டவர்களுக்கு இரத்தம் உறைதல் போன்ற பாதிப்புகள் ஏற்பட்டதாகக் கூறப்பட்டது. தற்போது 60க்கும் மேற்பட்ட நாடுகளில் ஸ்புட்னிக் வி தடுப்பூசிகள் பயன்படுத்தப்படும் நிலையில், அது செலுத்திக்கொண்டவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டதாக எந்தத் தகவலும் இல்லை என அந்தக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 







நன்றி Hindu

(Visited 1008 times, 31 visits today)

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × one =