:முதுநிலை உயிரியல் தொழில்நுட்ப படிப்புகளுக்கான தேசிய நுழைவுத்தேர்வுக்கு (கேட்-பி, பிஇடி) வரும் ஜூலை 31 வரை விண்ணப்பிக்கலாம்.
இது குறித்து தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ)வெளியிட்ட அறிவிப்பு: கேட்-பி நுழைவுத்தேர்வு வரும் ஆக.14-ஆம் தேதி சனிக்கிழமை நடைபெறவுள்ளது. இந்தத் தேர்வுக்கு ஜூலை 7 முதல் ஜூலை 31 வரை விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்வு கணினி வழித்தேர்வாக நடத்தப்படவுள்ளது.
தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான விவரங்களை dbt.nta.ac.in,www.nta.ac.in இணையதள முகவரிகளில் காணலாம்.
விண்ணப்பங்களில் பிழை திருத்தம் இருந்தால் அவற்றை ஆக.4 முதல் ஆக.6-ஆம் தேதி வரை செய்து கொள்ளலாம்.
(Visited 10020 times, 31 visits today)