அஞ்சலக காப்பீடு திட்டங்களில் சேர புதிய முகவர்களுக்கு 23ல் நேர்முக தேர்வு
தர்மபுரி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் ஸ்ரீஹரி வெளியிட்டுள்ள அறிக்கை:
அஞ்சல் ஆயுள் காப்பீடு திட்டத்தில் மத்திய,மாநில அரசு ஊழியர்களும், கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடு திட்டத்தில், அந்தந்த கிராமங்களில் வசிக்கும் கிராம
மக்கள் முகவர்களாக நியமிக்கப்பட உள்ளனர்.தர்மபுரி அஞ்சல் கோட்டம் சார்பாக, மாவட்டத்திலுள்ள அனைத்து அஞ்சலகங்கள், கிராமிய அஞ்சலகங்களிலும், அஞ்சல் ஆயுள் காப்பீடு, கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடு வழங்கப்படுகிறது. இத்திட்டங்களில்
சேர நேர் முக தேர்வு முகாம், வரும் 23ம் தேதி காலை 11 மணிக்கு, தர்மபுரி அஞ்சல் கோட்ட அலுவலகத்தில் நடக்கிறது. 10ம் வகுப்பு, 12ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 18 வயது முதல் 50வயது வரை உள்ளவர்கள் நேர்முக தேர்வில் கலந்து கொள்ளலாம். விருப்பமுள்ளவர்கள்,தங்களின் போட்டோ, வயது, கல்வி சான்றிதழ்,
ஆதார் ஆகிய வற்றின் அசல், இரண்டு நகல் மற்றும் முழு விபரங்களுடன் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.