உலக புலிகள் தின போட்டி படைப்பு அனுப்ப அவகாசம்
ஆனைமலை புலிகள் காப்பகத்தில், உலக புலிகள் தினம் வரும், 29ம் தேதி ண்டாடப்ப
டுகிறது. இதனையடுத்து, பொள்ளாச்சி, ஆனைமலை மற்றும் வால்பாறை தாலுகாவுக்கு உட்பட்ட பள்ளி குழந்தைகளுக்கு இணைய வழி போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டது. படைப்புகளை பெற இறுதி நாளாக நேற்று (14ம் தேதி) மாலை, 5:00 மணி வரை அவகாசம் வழங்கப்பட்டது. தற்போது, டாப்சிலிப்,வால்பாறை பகுதிகளில் கனமழை பெய்வதால், இணைய வழி சேவை பாதித்துள்ளதால், மாணவ, மாணவியர் படைப்புகளை வரும்,
20ம் தேதி மாலை, 5:00 மணி வரை அனுப்ப அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை, பொள்ளாச்சி வனக்கோட்ட துணை இயக்குனர் ஆரோக்கியராஜ் சேவியர் அறிவித்துள்ளார்.
(Visited 10026 times, 31 visits today)