ஓட்டுனர், திருவலகு பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
ஆனைமலை, ஜூலை 15ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில், ஓட்டுனர், திருவலகு உள்ளிட்ட பணிகளுக்கு, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
ஆனைமலை மாசாணியம்மன் கோவில் நிர்வாகத்தினர் வெளியிட்டுள்ள அறிக்கை:
கோவிலில், ஓட்டுனர் மற்றும் திருவலகு (கோவில் வளாக துாய்மை பணியாளர்) பணிக
ளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஓட்டுனருக்கு, 18,500 ரூபாய் மற்றும் திருவலகு பணிக்கு, 15,900 ரூபாய் சம்பளம் வழங்கப்படும். இரு பதவிகளுக்கும் விண்ணப்பிக்கும் நபர் கள், 18 வயது பூர்த்தியடைந்து, 35 வயதுக்குள் இருக்க வேண்டும். ஓட்டுனருக்கு எட்டாம் வகுப்பு தேர்ச்சி அல்லது இணையான தகுதி பெற்றிருக்க வேண்டும். இலகுரக அல்லது கனரக வாகனம் ஓட்டுனர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். குறைந்தது ஓராண்டு ஓட்டுனர் பயிற்சி பெற்றிருக்க வேண்டும். திருவலகு பணிக்கு தமிழில் எழுதப்படிக்க தெரிந்திருக்க வேண்டும். இந்த பணிகளுக்கு ஆக., 3ம் தேதி வரையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மாசாணியம்மன் கோவில்
அலுவலத்தை அணுகி, விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளலாம்.