பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள புதுப்புதுாரில் கனரா வங்கியின் சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையம் சார்பில், இலவச தையல் பயிற்சி அளிக்கப்படுகிறது. மையம், மத்திய, மாநில அரசுகளின், ஊரக வளர்ச்சி அமைச்சகத்தின் வழிகாட்டுதல்படி செயல்படுகிறது.
இங்கு தையல் பயிற்சி உட்பட பல்வேறு விதமான சுயதொழில் பயிற்சிகள் மதிய உணவோடு, முற்றிலும் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன.
17ம் தேதி முதல் தொடர்ந்து, 30 நாட்கள் மகளிர் ஆடை தையல் பயிற்சி வகுப்புகள் நடக்கின்றன. பயிற்சியில் சேர வயது வரம்பு, 18 முதல், 45க்குள் இருக்க வேண்டும். கல்வித் தகுதி எட்டாம் வகுப்புக்கு மேல்.
பயிற்சி முடிவில் அரசு சான்றுகளுடன், அரசு திட்டங்களின் வாயிலாக வங்கி கடன் பெற ஆலோசனைகள், தொழில்முனைவோர் திட்டங்களும் எடுத்துரைக்கப்படும். கிராமப்புற மகளிருக்கு முன்னுரிமை உண்டு. பயிற்சி வகுப்புகளில் சேர விரும்புவோர், 0422 2692080 மற்றும் 94890 43926 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.