சிறப்புப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இயக்குநர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் 22 அரசு சிறப்புப்பள்ளிகளில் சேரும் மாணவர்களுக்கு சீருடை, உணவு, தங்கும் இடம் உள்ளிட்ட அரசு உதவிகளுடன் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் மூலம் கல்வி வழங்கப்படுகிறது. பார்வைத்திறன், செவித்திறன் குறைபாடுடையோர்,கை, கால் இயக்கத்திறன் பாதிக்கப்பட்ட மாணவ, மாணவிகள் மற்றும் 5 முதல் 35 வயதுக்குள்பட்ட மன வளர்ச்சி குன்றியவர்களும் இந்த வாய்ப்பைப் பயன்டுத்திக்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
(Visited 10047 times, 31 visits today)