மின்வாரியத்தில் ஐடிஐ தொழில் பழகுநர் பயிற்சிக்கான நேர்காணல் ஜூலை 26,27,28 ஆகிய நாட்களில் நடைபெறவுள்ளது. இதுகுறித்து மேற்பார்வை பொறியாளர் எஸ். கிருஷ்ணமூர்த்தி வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஐடிஐ தொழில் பழகுநர் (2021-22) பயிற்சி ஓராண்டுக்கு அளிக்கப்படும். இதில் கம்பியாளர் 54, எலெக்ட்ரீஷியன் 52, கணினி
இயக்குபவர் 4, வரைவாளர் 4, இன்ஸ்ட்ரூமென்ட் மெக்கானிக் 2, அளவையர் 4 என மொத்தம் 120 பயிற்சியாளர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர்.
திருச்சி மன்னார்புரத்தில் உள்ள மின்வாரியத்தின் பெருநகர மின்பகிர்மான வட்ட மேற்பார்வையாளர் அலுவலகத்தில் ஜூலை 26,27,28-ம் தேதிகளில் காலை 10.30 முதல் மாலை 5 மணி வரை நேர்காணல் நடைபெறவுள்ளது. திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும் பங்கேற்கலாம். நேர்காணலில் கல்விச் சான்று மற்றும் மாற்றுச் சான்று, வயதுச் சான்று, ஜாதிச் சான்று, வேலைவாய்ப்பு அலுவலக பதிவு சான்று உள்ளிட்ட சான்றிதழ்களுடன் (அசல் மற்றும் நகல்) பங்கேற்கலாம்.