இந்திரா காந்தி தேசிய திறந்த நிலை பல்கலை

இக்னோ பல்கலை மாணவர் சேர்க்கை

இந்திரா காந்தி தேசிய திறந்த நிலை பல்கலைக்கழகத்தின் (இக்னோ) சென்னை மண்டல இயக்குநர் கே.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:


மத்திய அரசின் இக்னோ பல்கலைக்கழகம் தொலைதூரக் கல்விதிட்டத்தில் பல்வேறு இளங்கலை, முதுகலை, டிப்ளமா,சான்றிதழ் படிப்புகளை வழங்கி வருகிறது. இந்நிலையில், ஜுலை பருவ மாணவர் சேர்க்கைக்கான கடைசி தேதி ஜூலை 31 வரை
நீட்டிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் https://ignouadmission. samarth.edu.in என்ற இணைய தளத்தை பயன்படுத்தி ஜுலை 31 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.


இக்னோவில் குறிப்பிட்ட சில இளங்கலை படிப்பு, டிப்ளமா, சான்றிதழ் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கும் எஸ்சி, எஸ்டி வகுப்பினருக்கு கட்டண விலக்கு அளிக்கப்படுகிறது.


மாணவர் சேர்க்கை தொடர்பான விவரங்களை பல்கலைக் கழகத்தின் ணையதளத்தில்
(www.ignou.ac.in) அறியலாம். மண்டல அலுவலகத்தை 044-26618040 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டும் தெரிந்துகொள்ளலாம்.

(Visited 10040 times, 31 visits today)

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen − two =