ஒரு விசேஷத்திற்கு வாழைப் பழம் வாங்க மார்க்கெட்டிற்குச் சென்றிந்தேன். வாழைப் பழ மண்டியில் பேரம் பேசிக் கொண்டிருந்தேன். அப்போது பக்கத்தில் நின்றிருந்த ஒருவர் இந்த தாரை அறுத்து தரச் சொல்லி கேளுங்கள். 10,20, ரூபாய் கூடுதல் ஆனாலும் பரவாயில்லை” என்றார் விபரம் கேட்டேன் அவரிடம் ! இது இயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்டது என்றார்” எப்படி உங்களுக்கு தெரியும் என்றேன்!
இயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்டிருந்தால் பழங்கள் மட்டுமே மஞ்சளாகும், ரசாயன கொண்டு பழுக்க வைக்கப்பட்டி ருந்தால் “காம்பும் பழம் அளவுக்கு மஞ்சளாக இருக்கும். இதற்கும் அதற்கும் உள்ள வேறுபாட்டை பாருங்கள்” என்று அங்கே இருக்கும்
தாரை காண்பித்தார் !
இனி வாழைப் பழம் வாங்குபவர்கள் இதனை கவனத்தில் கொள்வது நல்லது….
(Visited 10040 times, 31 visits today)