புதிய தொழில்முனைவோர் திட்டம்

புதிய தொழில் முனைவோர் திட்டத்தின் கீழ் பயன் பெற நேர்முகத் தேர்வு இல்லை என சென்னை மாவட்ட ஆட்சியர் ஜெ.விஜயா ராணி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: படித்த இளைஞர்கள் முதல் தலைமுறை தொழில் முனைவோராக உருவாக்கிட தமிழக அரசால் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்படும் திட்டமே புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டம் (NEEDS).

இத்திட்டத்தில் படித்த இளைஞர்களுக்கு தொழில் முனைவோர் பயிற்சி திட்ட அறிக்கை தயார் செய்தல், நிதி நிறுவனங்களிடமிருந்து கடன் பெற வசதி செய்தல் மற்றும் பெரும் தொழில் நிறுவனங்களுடன் தொடர்பு ஏற்படுத்தி தருதல் உள்ளிட்ட உதவிகள் செய்யப்படுகின்றன. வங்கிகள், நிதி நிறுவனங்களிடமிருந்து 25 சதவீதம் மானியத்துடன் (ரூ.50 லட்சத்துக்கு மிகாமல்) கூடிய கடனுதவி பெறவும் 5 சதவீதம் பின்முனை வட்டி மானியம் பெறவும் வழி வகை செய்யப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர், www.msmeonline.tn.gov.in/needs என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும், கரோனா சூழல் காரணமாக விண்ணப்பங்கள் நேர்முகத் தேர்வின்றி வங்கிகளுக்குப் பரிந்துரை செய்யப்படும்.


கூடுதல் விவரங்களுக்கு, தொழில் வணிகத் துறை, கிண்டி, சென்னை 32 என்ற முகவரியில் உள்ள மண்டல இணை இயக்குநரை நேரிலோ அல்லது 044 2250 1621 என்ற தொலைபேசி எண்ணையோ அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

(Visited 10092 times, 31 visits today)

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × two =