கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக நிர்வாகத்தினர் வெளியிட்ட அறிக்கையில், “வேளாண் வணிக மேம்பாட்டு இயக்ககத்தில், ஐந்து நாட்கள் வேளாண் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி பயிற்சி, உழவர்கள், பெண்கள், இறுதி ஆண்டு பட்டதாரி மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் தொழில் முனைவோர்களுக்கு அளிக்கப்படுகிறது. வேளாண் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி பற்றிய அனைத்து தகவல்களும் ஒருங்கிணைத்து வழங்கப்படுகிறது.
இப்பயிற்சி வேளாண் வணிக மேம்பாட்டு இயக்ககத்தில் வரும் ஆகஸ்ட் 2-ம் தேதி முதல் 6-ம் தேதி வரை அளிக்கப்படுகிறது. பயிற்சிக் கட்டணமாக, நபர் ஒன்றுக்கு ரூ.11,800 வசூலிக்கப்படுகிறது. பதிவுக்கு குறைந்த எண்ணிக்கையிலான இடங்களே உள்ளன. மேலும் விவரங்களுக்கு 0422-6611310, 95004-76626 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்,” எனக் கூறப்பட்டுள்ளது.
(Visited 10048 times, 31 visits today)