Various Medical Jobs

சென்னை எழும்பூர் அரசு தாய் சேய் நல மருத்துவமனையில் கரோனா தடுப்பு பணி மேற்கொள்ள தற்காலிக அடிப்படையில் செவிலியர், ஆய்வக நுட்பநர் உள்ளிட்ட காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுதொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சியர் ஜெ.விஜயராணி வெளியிட்ட செய்திக்குறிப்பு: கரோனா நோய்த் தடுப்பு பணிகள் மேற்கொள்வதற்காக சென்னை எழும்பூர் அரசு தாய் சேய் நல மருத்துவமனைக்கு தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இப்பணியிடங்கள் எக்காரணம் முன்னிட்டும் பணிவரன்முறை அல்லது நிரந்தரம் செய்யப்பட மாட்டாது.

தகுதியுள்ள விண்ணப்பதாரர் கள் தங்களது அனைத்து கல்விச் சான்றிதழ்களின் நகல்களுடன், புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பங்களை இயக்குநர் மற்றும் பேராசிரியர், மகப்பேறு மகளிர் நோயியல் நிலையம் மற்றும் அரசு தாய் சேய் நல மருத்துவமனை எழும்பூர், சென்னை-8 என்ற முகவரிக்கு ஆகஸ்ட் 3-ஆம் தேதிக்குள்
கிடைக்குமாறு அனுப்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


காலி பணியிட விவரம்:

செவிலியர் 60
மருந்தாளுநர் 10
ஆய்வக நுட்பநர் 5
மயக்க மருந்து நுட்பநர் 10
இஜிசி நுட்பநர் 10
இதர மருத்துவப் பணியாளர்கள் 70

(Visited 10037 times, 31 visits today)

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 1 =