‘வங்கியில் இருந்து பேசுகிறோம். உடனடியாக உங்கள் வங்கி கணக்கில் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும். பான் கார்டு எண்ணை பதிவு செய்ய வேண்டும். நெட்பேங்கிங் முறையை அப்டேட் செய்ய வேண்டும்’ என, மர்ம கும்பல்கள், ‘ஆன்லைன்’ வாயிலாக பண மோசடியில் ஈடுபட்டு வருகின்றன. யீட்டு எண்களை தெரிவித்தோ அல்லது ஓ.டி.பி., இக்கும்பலிடம் ஏ.டி.எம்., கார்டின் ரகசிய குறிஎண்ணை தெரிவித்தோ பணத்தை பறிகொடுக்க வேண்டாம். அப்படி பணத்தை இழக்க நேரிட்டாலும் பதற வேண்டாம்.
நிதானம் தவறாமல், ‘ஸ்மார்ட் போன் வாயிலாக, வீட்டிலோ அல்லது வேறு இடத்தில்
இருந்தபடியோ கட்டணமில்லா, 155260 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள்.
இந்த எண்ணிற்கு, 24 மணி நேரத்திற்குள் புகார் அளித்தால், உங்கள் வங்கி கணக்கில்
இருந்து திருடி, மர்ம கும்பலின் வங்கி கணக்கிற்கு மாற்றிய பணத்தை, அவர்களால் எடுக்க முடியாமல் செய்து விடலாம். காலதாமதமாக புகார் செய்தால், பணத்தை திரும்ப பெறுவது எளிதல்ல.
இதுபோன்ற சைபர் குற்றங்கள் தொடர்பாக விளக்கம் பெறவோ அல்லது புகார் அளிக்கவோ, காவல் நிலையத்திற்கு நேரில் வர வேண்டியஅவசியம் இல்லை. www.cybercrime.gov.in என்ற, ‘இ- மெயில்’ வாயிலாகவும் புகார் அளிக்கலாம்.