‘படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும்
திட்டம்’ மாவட்ட தொழில் மையங்கள் மூலமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
உற்பத்தி சார்ந்த தொழில்களுக்கு ரூ.15 L வரையிலும், சேவை மற்றும் வியாபாரம் சார்ந்த தொழில்களுக்கு ரூ.5 லட்சம் வரையிலும் கடன் வழங்கப்படுகிறது.
இதில் 25 சதவீதம் மானியமாகும். தகுதியுடைய நபர்கள் www.msmeonline. tn.gov.in/uyegp என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
கரோனா பாதிப்பு காரணமாக, நேர்முகத் தேர்வின்றி தகுதியான விண்ணப்பங்கள் வங்கிகளுக்கு பரிந்துரைக்கப்படும்.
கூடுதல் விவரங்களுக்கு சென்னை கிண்டியில் உள்ள தொழில் வணிகத்துறை மண்டல இணை இயக்குநரை நேரடியாகவோ அல்லது 04422501621 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்புகொள்ளலாம்.
(Visited 10046 times, 31 visits today)