- போனது போச்சு, இனி ஆக வேண்டியதை யோசிப்போம்.
- நல்ல வேளை. இதோடு போச்சு.
- உடைஞ்சா என்ன? வேற வாங்கிட்டா போச்சு
- பஸ்ஸு போயிடுச்சா, அதனால என்ன? அடுத்த பஸ் இருக்குல்ல
- பணம் தான போச்சு. கை கால் இருக்குல்ல. மனசுல தெம்பு இருக்குல்ல.
- சொல்றவங்க ஆயிரம் சொல்வாங்க எல்லாமே சரின்னு எடுத்துக்க முடியுமா?
- இதெல்லாம் சப்ப மேட்டரு. இதுக்குப் போயா கவலைப்படறது. கஷ்டம் தான் … ஆனா முடியும்.
- நஷ்டம் தான் … ஆனா மீண்டு வந்திடலாம்.
- விழுந்தா என்ன? எழுந்திருக்க மாட்டனா?
- இவன் இல்லேன்னா வேற ஆளே இல்லியா?
- இந்த வழி இல்லேன்னா வேற வழி இல்லியா?
- இப்பவும் முடியலியா? சரி. இன்னொரு வாட்டி ட்ரை பண்ணு.
- இது கஷ்டமே இல்லையே. கொஞ்சம் யோசிச்சா வழி தெரியுமே.
- முடியுமா…ன்னு நினைக்காதே. முடியணும்…னு நினை.
(Visited 10039 times, 31 visits today)