ஈரோடு மாவட்டத்திலுள்ள கோயில்களில் இரவுக்காவலர் பணியிடங்களுக்கு முன்னாள் ராணுவத்தினர் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறை பராமரிப்பில் உள்ள பல்வேறு கோயில்களில் இரவு காவலர் பணியிடங்கள் காலியாக உள்ளன.இப்பணியிடங்களில், இந்து மதத்தைச் சேர்ந்த முன்னாள் படைவீரர்களை நியமனம் செய்து நிரப்பப்பட உள்ளது.
எனவே, ஈரோடு மாவட்டத்தைச் சார்ந்த 62 வயதிற்குள் உள்ள, நல்ல ஆரோக்கியமான விருப்பமுள்ள இந்து மதத்தைச் சேர்ந்த முன்னாள் படைவீரர்கள் விண்ணப்பிக்கலாம்.
தகுதியும் விருப்பம் உள்ள முன்னாள் படைவீரர்கள் அவர்களது அசல் படைவிலகல் சான்று, அடையாள அட்டை மற்றும் புகைப்படத்துடன் ஈரோடு மாவட்ட முன்னாள் படைவீரர் நல துணை இயக்குநர் அலுவலகத்தினை நேரில் அணுகி விண்ணப்பிக்கலாம்.
மேலும் விவரங்களுக்கு 0424 -2263227 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என வட்ட ஆட்சியரக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.