நீலகிரி வெலிங்டன் ராணுவ மையத்தில் குருப் – சி பிரிவில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
காலியிடம்: எல்.டி.சி., 1, பூட்மேக்கர் 1, குக் 9, டெய்லர் 1, சபாய்வாலா 3, பார்பர் 3, வாசர்மேன் 5 என மொத்தம் 23 இடம்.
கல்வித்தகுதி: பிளஸ் 2 முடித்திருக்க வேண்டும். வயது: 18 – 25 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.
தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, செய்முறைத் தேர்வு.
விண்ணப்பிக்கும் முறை: இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி: The Commandant, The Madras Regimental
Centre, Wellington, Nilgiris, Tamilnadu
கடைசி நாள்: 26.8.2021
விபரங்களுக்கு: www.govtjobsdrive.in/wp-content/uploads/2021/08/Madras-Regimental-Centre-Official-Notification-Application Form-PDF.pdf