கோவையில் உள்ள தமிழ் நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வணிக முறையிலான காய்கறி, பழப்பொருள்கள் தயாரிப்பு பயிற்சி செப்டம்பரில் நடைபெறுகிறது.
செப்டம்பர் 7, 8 ஆகிய இரண்டு நாள்களில் காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை
நடைபெறும் இந்தப் பயிற்சியில் உலர வைக்கப்பட்ட காய்கறிகள், பழங்கள், பல வகையான பழ ஜாம், பழரசம், தயார் நிலை பானம், ஊறுகாய், தக்காளி கெட்சப், ஊறுகனி, பழ பார் ஆகியவை தயாரிப்பதற்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.

இதில் பங்கேற்க ஆர்வமுள்ளவர்கள் பயிற்சிக் கட்டணமாக ரூ.1,500 அதற்கு
18 சதவீத ஜி.எஸ்.டி. செலுத்தி பெயர்களை பதிவு செய்துகொள்ளும்படி அறுவடை பின்
சார் தொழில்நுட்பத் துறை தலைவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பான மேலும் விவரங்களுக்கு 0422 6611268 என்ற தொலைப்பேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
பாலிதீன் பைகள் மண்ணுக்கு எதிரி ..!
மண் வளம் காப்போம்; மரம் வளர்ப்போம்;