சிங்கம், மயில், மூஷிகம்.. விநாயகரின் வாகனங்கள்!

விநாயகப் பெருமானின் வாகனம் மூஷிகம் என்று சொல்லப்பட்டாலும் இவர், பல்வேறு யுகங்களில் வெவ்வேறு வாகனத்தில் அருள்புரிந்திருக்கிறார்.

கிருதயுகத்தில் இவரது வாகனம் சிங்கம். திரேதா யுகத்தில் மயில். துவாபர யுகத்தில் மூஷிகம். கலியுகத்தில் இவரது வாகனம் குதிரை என்று சொல்லப்பட்டாலும் அந்த வாகனத்துடன் இவரை தரிசிப்பது அரிதாகும். விநாயகருக்கு ரிஷபம், யானை ஆகியவையும் வாகனமாய் இருந்திருக்கின்றன.

கப்பட்டினம் நீலாயதாட்சி அம்மன் ஆலயத்தில் பஞ்சமுகங்களுடன் காணப்படும் விநாயகர், சிம்ம வாகனத்தில் காட்சி அளிக்கிறார். திருவொற்றியூர் குருதட்சிணாமூர்த்தி ஆலயத்திலும் பஞ்சமுகங்களுடன் சிம்மத்தில் அருள்புரிகிறார்.

பாண்டிச்சேரி மணக்குள விநாயகர் ஆலய சுதைச் சிற்பத்திலும் அருப்புக்கோட்டை தாதன்குள விநாயகர் ஆலயத்திலும் திருவானைக்கா அகிலாண்டேஸ்வரி ஆலயத்தில் உள்ள ஓவியத்திலும் விநாயகர் மயில் வாகனத்துடன் காட்சி தருகிறார்.

கோயம்புத்தூர் குருபதேசக் கவுண்டர் ஆலயத்திலும் கடலூர் வட்டம் சென்னப்ப நாயக்கன் பாளையத்தில் உள்ள மலையாண்டவர் விநாயகர் ஆலயத்திலும் குதிரை வாகனத்தில் காட்சி தருகிறார்.

திருச்செந்தூர் ஆவுடையார் குளக்கரையில் உள்ள அரசாள்வார் விநாயகருக்கும், ஸ்ரீவில்லிபுத்தூர் மடவார்விளாகம் வைத்தியநாத சுவாமி ஆலயத்தில் உள்ள விநாயகருக்கும் யானை வாகனமாக உள்ளது.

சுசீந்திரம் தாணுமாலயன் ஆலயத்திலுள்ள விநாயகர் முன்பும் நெல்லை காந்திமதியம்மன் கோயிலில் அருள்புரியும் விநாயகப்பெருமானின் முன்பும் காளை வாகனம் காட்சியளிக்கிறது.

– டி.ஆர். பரிமளரங்கன்

சாட்சி விநாயகர்

திருச்சானூரில் பெருமாளும் தாயாரும் திருமணம் செய்து கொள்ள சாட்சியாக இருந்த விநாயகர் “சாட்சி விநாயகர்’ என்ற பெயரில் அருள்பாலிக்கிறார். பெருமாள் தாயாருடன் சேர்ந்து இருக்கும் விநாயகரை இங்கு தான் தரிசிக்க முடியும். குழந்தைகளுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்க இங்கு வந்து மணி கட்டி வழிபாடு செய்து வருகிறார்கள்.

ஆந்திர மாநிலம் சித்தூர் அருகில் உள்ளது காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோயில். இக்கோயிலின் பிரசாதம் அங்குள்ள கிணற்று நீர்தான். இந்த கிணற்றில் தான் சுயம்புவாக வரசித்தி விநாயகர் தோன்றினார். அதனால் அதே கிணற்றின் மேல் தான் அவர் காட்சி தருகிறார். விநாயகரைச் சுற்றிலும் எப்போதும் கிணற்றின் நீர் ஓடிக் கொண்டே இருக்கிறது. இந்தப் பிள்ளையாரை சாட்சியாக வைத்து ஒரு காலத்தில் வழக்குகளை முடித்துக் கொள்வார்களாம். அதனால் இன்றும் வழக்குகளில் வெற்றி பெற இந்த விநாயகரை வழிபட்டு வருகின்றனர்.

நன்றி Hindu

(Visited 10032 times, 31 visits today)

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 − 15 =