மத்திய அரசில் பல்வேறு துறைகளில் உள்ள மருத்துவ உதவியாளர் உள்பட 3,261 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்
பணியாளர் தேர்வாணையம் தகவல் சென்னை, செப்.29 பணியாளர் தேர்வாணையத்தால் மத்திய அரசின் பல்வேறு துறைகளில் பல்நோக்கு பணியாளர், பெண்கள் படைப்பயிற்றுனர், மருத்துவ உதவியாளர், பொறுப்பாளர் போன்ற 3 ஆயிரத்து 261 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு இருக்கின்றன.
இந்த பணியிடங்களுக்கு www.ssc.nic.in என்ற தேர்வாணையத்தின் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
இதற்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் அக்டோபர் 25-ந் தேதி ஆகும்.
பணியாளர் தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட்டு உள்ள மத்திய அரசு பணிகளில் தமிழ்நாட்டு இளைஞர்கள் அதிகளவில் பணிநியமனம் பெறுவதற்கு ஏதுவாக இந்த போட்டி தேர்வுக்கான அனைத்து பாடக்குறிப்புகளும் தமிழ்நாடு அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் tamilnaducareerservices.tn.gov.in என்ற ஆன்லைன் கற்றல் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளன.

மேலும் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டங்களின் வாயிலாக
பணியாளர் தேர்வாணைய போட்டித் தேர்வுகளுக்கென கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நேரடியாகவோ, இணையவழியாகவோ நடத்தப்பட உள்ளன.
மேற்கண்ட தகவல் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் இயக்குனர் கொ.வீரராகவராவ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பாலிதீன் பைகள் மண்ணுக்கு எதிரி ..!
மண் வளம் காப்போம்; மரம் வளர்ப்போம்;