தொகுப்பூதியத்தில் கௌரவ விரிவுரையாளர்கள் நியமனம் அரசாணை வெளியீடு
சென்னை, செப். 29: தமிழகத்தில் அரசு கலை-அறிவியல் கல்லூரிகளில் 2021 2022 கல்வியாண்டுக்கு தொகுப்பூதியத்தில் கௌரவ விரிவுரையாளர்களை நியமனம் செய்வதற்கு அனுமதி வழங்கி உயர்கல்வித் துறை முதன்மைச் செயலர் தா.கார்த்திகேயன் அரசாணை பிறப்பித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் புதன்கிழமை வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் 2021-2022-ஆம் கல்வியாண்டுக்கு 59 அரசு கலை-அறிவியல் கல்லூரிகளில் ‘சுழற்சி-2 பாடப்பிரிவுகளை நடத்துதற்கு ஏதுவாக 1561 கௌ விரிவுரையாளர்களை மாத ஊதியம் ரூ.20 ஆயிரம் வீதம் ஏப்ரல் 2021 மற்றும் நிகழாண்டு ஜூன் முதல் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை மொத்தம் 11 மாதங்களுக்கும் தொகுப்பூதிய அடிப்படையில் பணியமர்த்த அரசு ஆணையிடுகிறது.
இதற்கென ரூ.36.54 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
இதேபோன்று ஆசிரியரல்லாத பணியாளர்களுக்கு ரூ.32.50 லட்சம் நிதி ஒதுக்கீடு என மொத்தம் ரூ.36.86 கோடிக்கு நிதி ஒப்பளிப்பு செய்து அரசு ஆணையிடுகிறது.

மேலும் பல்கலைக்கழக மானியக்குழு நிர்ணயித்துள்ள கல்வித்தகுதி பெற்ற கௌரவ விரிவுரையாளர்களை பணியமர்த்தவும் அரசு ஆணையிடுகிறது என அதில் கூறியுள்ளார்.
பாலிதீன் பைகள் மண்ணுக்கு எதிரி ..!
மண் வளம் காப்போம்; மரம் வளர்ப்போம்;