புகைப் பழக்கத்திற்கு தீர்வாகும் ஏலக்காய்! இதர மருத்துவக் குணங்கள்?



மருத்துவக் குணங்கள் அதிகம் நிறைந்த ஒரு பொருள் ஏலக்காய். இன்றைய காலகட்டத்தில் நகரங்களில் பெரும்பாலும் பிரியாணியில் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது எனலாம். அதுவும் வாசனைக்காக பயன்படுத்துவதாகக் கூறுகிறார்கள். ஆனால், அஜீரணம், வாயுத் தொல்லையைப் போக்கவே பிரியாணியில் ஏலக்காய் போடுகிறோம் என்று பலருக்கும் தெரிவதில்லை.

ஆயுர்வேத மருத்துவத்தில் ஏலக்காய் அதிகம் பயன்படுத்தப்படுகிறது இங்கு குறிப்பிடத்தக்கது.

♦ஏலக்காயில் புரதச் சத்து, நார்ச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச் சத்து உள்ளிட்டவை இருக்கின்றன.

♦உணவை எளிதாக செரிமானம் செய்து பசியைத் தூண்டும். அதிக கொழுப்புள்ள உணவுகளை சாப்பிடும்போது அதில் ஏலக்காய் சேர்த்துக்கொள்ளுங்கள்.

♦ வாய் துர்நாற்றம் போக்கவும் ஏலக்காயைப் பயன்படுத்தலாம்.

♦உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்றுகிறது. உடலில் இருக்கும் அதிகப்படியான உப்பு மற்றும் கிருமிகளை வெளியேற்றும். சிறுநீரகத்தை சுத்தம் செய்யும் ஆற்றல் உண்டு.

♦தொடர் இருமல் இருப்பவர்கள் ஏலக்காயை வாயில் போட்டு மென்றாலே போதும்.

♦ஜலதோஷம், மூக்கடைப்பு இருந்தால் ஏலக்காயினை நெருப்பில் போட்டு அந்த புகையை சுவாசித்தாலே சரியாகிவிடும்.

♦தேநீரில் ஏலக்காய் போட்டு அருந்தலாம். வயிற்றை சுத்தம் செய்யும். மேலும், ஏலக்காயை தொடர்ந்து உணவில் சேர்ப்பது மனநலனுக்கு நல்லது.

♦தலைவலி, வாந்தி, குமட்டல் இருந்தால் ஏலக்காயை வாயில் போட்டு மென்றால் போதுமானது.

♦ஏலக்காய் போட்டு கொதிக்க  வைத்த நீரைக் குடித்தால் விக்கல் நிற்கும்.

♦புகைப் பழக்கத்தைக் கைவிட நினைப்பவர்கள் தினமும் ஒரு ஏலக்காயை வாயில் போட்டு மென்றால் படிப்படியாக பலன் கிடைக்கும்.



நன்றி Dinamani

(Visited 10026 times, 31 visits today)

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 + 10 =