உடல் எடையைக் குறைக்க முடிவு செய்துவிட்டீர்களா? அப்போ இதை மட்டும் செய்யாதீங்க




மும்பை: உடல் எடையைக் குறைக்கும் திட்டத்தில், உணவுகளை தவறவிடும் முடிவு நிச்சயம் நல்லதாக இருக்காது என்று கூறப்படுகிறது. உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்று முடிவு செய்துவிட்டால், தயவு செய்து, உணவை தவிர்ப்பதை மட்டும் ஒன்றுக்கு இரண்டு முறை சிந்தியுங்கள் என்கிறது ஆய்வு.

இந்த தவறாக அணுகுமுறை, உங்களது வளர்ச்சிதை மாற்றத்தையே சத்தமில்லாமல், குறைத்துவிடும், இதனால், உடல் எடை அசுர வேகத்தில் அதிகரிக்கும் அபாயமிருப்பதாக டாக்டர் ஸ்நேஹல் அதுஸ்லே தெரிவித்துள்ளார்.

உடல் எடைக் குறைப்புக்கு பயிற்சி மற்றும் சத்துணவு வடிவமைப்பாளராக செயல்பட்டு, ஏராளமான பெண்களின் உடல் எடையைக் குறைத்து அவர்கள் ஆரோக்கியமாக, மகிழ்ச்சியாக, வாழ்வில் பல வெற்றிகளைப் பெற்ற சாதனையாளர்களாக மாற உதவியர் ஸ்நேஹல் அதுஸ்லே.

இதையும் படிக்க.. விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறுக்கு பயணிகளிடம் ரூ.5,000 கேட்டது ஏன்?

அவர் சொல்லும் ஒரு விந்தையான விஷயம் என்ன தெரியுமா? முதலில் உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்ற பயணத்தில், சரியாக சமவிகித உணவை, சரியான நேரத்தில உண்ண வேண்டும் என்பதுதான் என்கிறார்.

இவர் உடல் எடைக் குறைப்பு குறித்து கூறுகையில், தயவுகூர்ந்து, உணவு இடைவேளையை அதிகரித்துவிடாதீர்கள். அது வளர்ச்சிதைமாற்றத்தில் எதிர்மறை வினையாற்றத் தொடங்கிவிடும். அதில் மிக முக்கியமானது என்ன தெரியுமா? காலையில் எழுந்ததும், 45 நிமிடத்துக்குள் இரவு விரதத்தை முடித்துவிட வேண்டும் என்பதுதான்.

பலரும், காலை உணவைத் தவிர்ப்பதை வழக்கமாக்கிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், காலை உணவை தவிர்ப்பவர்கள், நாள்தோறும் அவர்கள் சராசரியாக உண்ணும் உணவைக் காட்டிலும் 500 கலோரிகள் அதிகமாக சாப்பிடுவார்கள். இதுதான், அவர்களது உடல் எடைக் குறைப்புத் திட்டத்துக்கு எதிர்மறையாகச் செயல்படும். வழக்கமாக, காலை 7 மணி முதல் 8 மணிக்குள் காலை உணவை சாப்பிட்டுவிட வேண்டும். இன்னும் சொல்ல வேண்டுமென்றால், காலை 10 மணிக்கு மேல் தாண்டவேக் கூடாது என்கிறார் கண்டிப்புடன்.

அதுபோலவே, மதிய உணவை 12.30 மணியிலிருந்து 2.30 மணிக்குள் சாப்பிட்டு முடித்துவிட வேண்டும்.  அது மட்டுமல்ல, மதிய உணவு சாப்பிட்டு 3 அல்லது 4 மணி நேரத்துக்குள் இரவு உணவை சாப்பிட வேண்டும். அப்போதுதான். இரவு உணவு சாப்பிட்டு 3 மணி நேரம் கழித்து உறங்கச் செல்ல சரியாக இருக்கும். இரவு உணவு சாப்பிடுவது 10 மணிக்கு மேல் தாண்டக் கூடாது என்றும் வலியுறுத்துகிறார்.
 







நன்றி Dinamani

(Visited 10052 times, 31 visits today)

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × one =