கரோனாவிலிருந்து மீண்டு எத்தனை நாள்களுக்குப் பின் தாய்மையடையலாம்?




pregnancy090930

கரோனாவிலிருந்து மீண்டு எத்தனை நாள்களுக்குப் பின் தாய்மையடையலாம்?

கரோனாவிலிருந்து மீண்டு எத்தனை நாள்களுக்குப் பின் தாய்மையடையலாம் என்று ஏராளமான இளம்பெண்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.  இது தொடர்பாக  ஆன்லைனில் தேடுதலும் அதிகரித்துள்ளது.

சரி.. கரோனாவிலிருந்து மீண்டவர்கள் எத்தனை நாள்களுக்குப் பின் தாய்மையடையலாம்? நிச்சயமாக காத்திருக்க வேண்டுமா? என்பது போன்ற கேள்விகளுக்கு மருத்துவ நிபுணர்கள் அளித்துள்ள பதிலில்..

ஏன் காத்திருக்க வேண்டும்?
தாய்மையடைதல் என்பது அவ்வளவு எளிதான வேலையல்ல. ஒன்பது மாதங்கள் கருவை சுமந்து ஏராளமான உடல் மாற்றங்கள், மன மாற்றங்கள், சுரப்பிகளின் மாற்றங்களை இந்தக் காலத்தில் ஒரு பெண் எதிர்கொள்ள வேண்டும். ஒன்பது மாதம் கருவைச் சுமந்து, ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுக்க ஒரு தாய் நிச்சயமாக நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டியது அவசியம். 

ஏற்கனவே கரோனா பாதித்து, உடல் நலப் பிரச்னைகளை சந்தித்த பெண் ஒருவர், உடனடியாக தாய்மையடைய நேரிட்டால், அவர்களுக்கு ஏராளமான சிக்கல்கள் ஏற்படும் அபாயமிருக்கிறது.

காத்திருப்பது அவசியம்தானா?
கரோனாவிலிருந்து மீண்டதுமே தாய்மையடைவது தாய் – சேய் உடல்நலனில் பாதிப்பை ஏற்படுத்தலாம். கரோனா வைரஸ் என்பது ஏதோ நமது சுவாசப் பாதையை மட்டும் பாதிக்கும் விஷயமல்ல. அது பல உடல் உள்ளுறுப்புகளையும் தாக்கியிருக்கும். சிலருக்கு கரோனா தொற்றின் அறிகுறிகளே பல காலத்துக்கு நீடிக்கிறது. எனவே, கர்ப்பமடைதலை எதிர்கொள்ள உடல்நலம் பூரண குணமடையும் வரை காத்திருப்பது அவசியம்தான்.

தாய்மையடைதலும் ஒரு சவால்தான்
ஏற்கனவே கரோனா என்ற பெருந்தொற்றுச் சவாலை எதிர்கொண்டு மீண்டு வந்திருக்கும் பெண், உடனடியாக மனதளவிலும் உடலளவிலும் மற்றொரு சவாலை எதிர்கொள்ளத் தயாராவது சற்று கடினமானது விஷயம்தான். எனவேதான் கரோனாவிலிருந்து மீண்டு சில காலம் காத்திருக்கச் சொல்கிறார்கள்.

எத்தனை காலம்?
கடந்த காலத்தில் கரோனா பாதித்து அதிலிருந்து மீண்டுவிட்டீர்கள். உடடியான உங்களது குடும்பத்தை திட்டமிட எண்ணுகிறீர்களா? அதற்கென எந்தக் குறிப்பிட்ட கால அவகாசத்தையும் மருத்துவத் துறை நிர்ணயிக்கவில்லை. ஆனால், சில மாதங்கள் உங்கள் உடல்நலம் தேறுவதற்காகக் காத்திருக்கலாம். கரோனா அறிகுறிகள் உங்களிடமிருந்து முற்றிலும் விடைபெறும்வரை காத்திருக்கலாம். 

நீங்கள் முழு உற்சாகத்துடன் முழு உடல்நலனையும் பெற்றுவிட்டதாக உணரும்பட்சத்தில், குடும்பத்தை திட்டமிட ஆனந்தமாகத் தயாராகலாம்.
 







நன்றி Dinamani

(Visited 10043 times, 31 visits today)

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 − 1 =