சென்னை, ஜூன் 9விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு பிரிவில், காலியாக உள்ள 400 இளநிலை நிர்வாகி பணி யிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை, இந்திய விமான நிலையங்களின் ஆணையம் வெளியிட்டுள்ளது.
சென்னை உட்பட, நாடு முழுதும் உள்ள விமான நிலையங்களில், விமான போக்
குவரத்து கட்டுப்பாட்டு பிரிவு செயல்படுகிறது. இந்த கட்டுப்பாட்டு பிரிவுகளில், 400 பணியிடங்கள் காலியாக உள்ளன.
இந்த பணியிடங்களை நிரப்பும் பணியை, இந்திய விமானநிலையங்களின் ஆணையம்
துவக்கி உள்ளது. இதற்கான அறிவிப்பை ஆணையம் வெளியிட்டுள்ளது.

அதில், ஜூன் 15 முதல் ஜூலை 14 வரை,இளநிலை நிர்வாகி பணியிடங்களுக்கு, www.
aai.aero என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
இளநிலை பட்டப்படிப்பு முடித்த, 27 வயதுக்குள் உள்ள அனைவரும் இதற்கு விண்ணப்பிக்கலாம். இது தொடர்பான மேலும் விபரங்களை, www.aai.aero என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
பாலிதீன் பைகள் மண்ணுக்கு எதிரி ..!
மண் வளம் காப்போம்; மரம் வளர்ப்போம்;